Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவரை எவ்வளவு அவமானப்படுத்தினீர்கள்.. மொத்தமாக மாறிய கதை.. களத்தில் அஸ்வின் செய்த காரியம்.. டிவிஸ்ட்!

துபாய்: டெல்லி அணியில் விளையாடி வரும் தமிழக வீரர் அஸ்வினுக்கு தற்போது கிரிக்கெட் உலகில் பலரும் ஆதரவு அளித்து வருகிறார்கள். கடந்த வருடம் அஸ்வின் சந்தித்த விமர்சனங்கள் அனைத்திற்கும் நேற்று நடந்த சம்பவம் ஒன்று பதிலாக மாறியுள்ளது.

2020 வருடத்திற்கான ஐபிஎல் சீசன் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. அடுத்தடுத்த திருப்பங்களுடன் ஐபிஎல் தொடர் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில்தான் நேற்று டெல்லி மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டியில் நடந்த சம்பவம் ஒன்று பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எப்படி நடந்தது?

எப்படி நடந்தது?

நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் பெங்களூர் வீரர் ஆரோன் பின்ச் விக்கெட்டை மன்கட் முறையில் எடுக்க டெல்லி வீரர் அஸ்வின் முயன்றார். இதுதான் தற்போது சர்ச்சையாகி உள்ளது.பொதுவாக ரன்னர் எண்டில் இருக்கும் வீரர் கிரீஸை தாண்டி நிற்கும் போது, பவுலர் அவரை விக்கெட் எடுக்க முடியும். அதாவது ரன்னர் எண்டில் இருக்கும் பேட்ஸ்மேன் கிரீஸுக்குள் நிற்காமல் வெளியே நின்றால் அவரை பவுலர் விக்கெட் எடுக்க முடியும்.

மன்கட்

மன்கட்

இந்த விக்கெட் முறைக்கு மன்கட் என்று பெயர். இது ஐசிசி அனுமதித்த விதி என்றாலும் பெரும்பாலும் பவுலர்கள் இந்த முறையில் விக்கெட் எடுக்க மாட்டார்கள். இது கிரிக்கெட்டின் விளையாட்டு மனோபாவத்திற்கு எதிரானது என்று கூறப்படும். இப்படி விக்கெட் எடுப்பது நல்ல முறை கிடையாது என்றும் விமர்சனங்கள் வைக்கப்படுவது உண்டு.

விமர்சனம்

விமர்சனம்

இந்த நிலையில்தான் கடந்த ஐபிஎல் போட்டியில் அஸ்வின் மன்கட் விக்கெட் எடுத்தார். ராஜஸ்தான் வீரர் ஜோஸ் பட்லர் விக்கெட்டை அவர் மன்கட் முறையில் எடுத்தார். கிரீஸுக்கு வெளியே இருந்த பட்லர் விக்கெட்டை அஸ்வின் எடுத்தார். இது பெரிய அளவில் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது. இதனால் அஸ்வினை பலரும் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

அவமானம்

அவமானம்

அஸ்வினால் பவுலிங் செய்து விக்கெட் எடுக்க முடியவில்லை என்று இப்படி விக்கெட் எடுக்கிறார். அஸ்வின் ஏன் இப்படி குரூரமாக செயல்படுகிறார் என்று அவருக்கு எதிராக கடுமையாக விமர்சனங்கள் வைக்கப்பட்டது. அவரை பலரும் மிக மோசமான அவமானப்படுத்தினார்கள். இந்த நிலையில்தான் நேற்று நடந்த சம்பவம் காரணமாக அஸ்வினுக்கு ஆதரவாக பலரும் பேச தொடங்கி உள்ளனர்.

நேற்று எப்படி

நேற்று எப்படி

நேற்று நடந்த போட்டியில் அஸ்வின் வீசிய மூன்றாவது ஓவரில் தேவ்தத் படிக்கல் பேட்டிங் செய்து வந்தார். இன்னொரு பக்கம் ஆரோன் பின்ச் ரன்னர் எண்டில் இருந்தார். அஸ்வின் பந்து வீசும் போது, ஆரோன் பின்ச் கிரீசை தாண்டி நின்று கொண்டு இருந்தார்.இதனால் பின்சை மன்கட் விக்கெட் எடுக்க அஸ்வின் முடிவு செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் விக்கெட் எடுக்காமல் விட்டுவிட்டார்.

வார்னிங்

வார்னிங்

ஆனால் ஆரோன் பின்ச்சிற்கு அவர் வார்னிங் கொடுத்தார். இந்த நிலையில் அஸ்வினின் செயலை பலரும் பாராட்டி உள்ளனர்.அஸ்வின் கொடுத்த வார்னிங் சரிதான். ஆனால் இனிமேல் அஸ்வின் வார்னிங் கொடுக்க கூடாது. மாறாக விக்கெட் எடுக்க வேண்டும். பேட்ஸ்மேன்கள் இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். அஸ்வின் இதை அனுமதிக்க கூடாது.

சில மீட்டர்

சில மீட்டர்

ரன்னர் எண்டில் இருக்கும் பேட்ஸ்மேன்கள் கிரீஸுக்கு வெளியே நிற்பது தவறு. இதனால் அவர்கள் எளிதாக ரன் எடுக்கிறார்கள். இது ஒரு வகையில் ஏமாற்று வேலை. இதை அனுமதிக்க கூடாது. இப்படி ஏமாற்ற முயற்சிக்கும் பேட்ஸ்மேன்களை மன்கட் செய்வதில் எந்த தவறும் இல்லை என்று பலரும் அஸ்வினுக்கு ஆதரவாக பேசி உள்ளனர். கடந்த வருடம் முழுக்க அஸ்வின் கலாய்க்கப்பட்ட நிலையில் இந்த வருடம் நிலைமை மொத்தமாக மாறி.. அவருக்கு ஆதரவாக பலரும் பேச தொடங்கி உள்ளனர்.

Story first published: Tuesday, October 6, 2020, 11:44 [IST]
Other articles published on Oct 6, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+