Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சென்னையில் இருக்க வேண்டும்.. ஐபிஎல் தொகுப்பாளர் குழுவிலிருந்து வெளியேறிய பாவனா.. என்ன காரணம்?

துபாய்: 2020 ஐபிஎல் தொடரில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொகுப்பாளர் குழுவில் பணியாற்றி வந்த பாவனா தற்போது தொடரில் இருந்து வெளியேறி உள்ளார்.

2020 ஐபிஎல் தொடரில் நிறைய சுவாரசியமான திருப்பங்கள், சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்த தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி ஒளிபரப்பி வருகிறது.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஐபிஎல் வர்ணனை தமிழிலும் செய்யப்பட்டு வருகிறது. ஆர்ஜே பாலாஜி, கிரிஸ் ஸ்ரீகாந்த், பத்ரிநாத், சடகோபன் ரமேஷ் போன்ற வர்ணனையாளர்கள்.. வர்ணனை குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

வர்ணனை

வர்ணனை

அதேபோல் நிகழ்ச்சி தொகுப்பாளராக பாவனா பாலகிருஷ்ணன் செயல்பட்டு வருகிறார். கிரிக்கெட் குறித்து புள்ளி விவரங்களுடன் இவர் பேசுவது பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதிலும் சிஎஸ்கே போட்டிகளுக்கு முன்பும், பின்பும் இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் விதம் பலரையும் கவர்ந்தது.

என்ன நடந்தது

என்ன நடந்தது

இந்த நிலையில் தொகுப்பாளர் குழுவில் பணியாற்றி வந்த பாவனா தற்போது தொடரில் இருந்து வெளியேறி உள்ளார். ஐபிஎல் தொடரின் தொகுப்பாளர் குழுவில் இருந்து இவர் வெளியேறி உள்ளார். இவரின் பெற்றோர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு இருப்பதால் தற்போது இவர் தொடரில் இருந்து வெளியேறி உள்ளார்.

மீதம்

மீதம்

இதனால் இந்த தொடரில் மீதம் இருக்கும் போட்டிகளில் பாவனா தொகுப்பாளராக செயல்பட மாட்டார். இது தொடார்பாக அவர் உருக்கமாக கருத்து ஒன்றையும் தெரிவித்துள்ளார். அதில், மிகவும் கனமான இதயத்துடன் நான் ஐபிஎல் தொடரின் பயோ பபிளில் இருந்து வெளியேறுகிறேன்.

காரணம் என்ன

காரணம் என்ன

என்னுடைய பெற்றோர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். நான்தான் ஒரே குழந்தை. அதனால் நான் சென்னையில் இப்போது கண்டிப்பாக இருக்க வேண்டும். உங்களுடைய அன்பு மற்றும் ஆதரவிற்கு நன்றி. உங்களுடைய ஆதரவு எப்போதும் தொடர வேண்டுகிறேன்.. என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Saturday, October 31, 2020, 14:54 [IST]
Other articles published on Oct 31, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+