Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"கிரேட் 3" பிரச்சனை.. ஒரே ஓவரில் கனவு கலைந்தது.. பெரிய சிக்கலில் புவனேஷ்வர் குமார்.. என்ன நடந்தது?

துபாய்: ஐபிஎல் தொடரில் காயம் காரணம் வெளியேறிய புவனேஷ்வர் குமார் தற்போது பெரிய சிக்கலுக்கு உள்ளாகி இருக்கிறார்.

ஐபிஎல் தொடர் தொடங்கி இரண்டு வாரங்களே முடிந்து உள்ளது. ஆனால் அதற்குள் வரிசையாக முக்கியமான வீரர்கள் காயம் காரணமாக வெளியேறி வருகிறார்கள்.

முதலில் டெல்லி அணியின் வீரர் இஷாந்த் சர்மா காயம் காரணமாக போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. அதன்பின் ஹைதராபாத் வீரர் மிட்சல் மார்ஷ் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது.

வேறு வீரர்

வேறு வீரர்

மிட்சல் மார்ஷை தொடர்ந்து ஹைதராபாத் அணியின் இன்னொரு வீரர் புவனேஷ்வர் குமாரும் காயம் காரணமாக வெளியேறும் நிலை உருவானது. இவரின் இடுப்பு மற்றும் தொடையில் காயம் ஏற்பட்டுள்ளது. சென்னைக்கு எதிராக நடந்த கடந்த போட்டியில் காயம் காரணமாக புவனேஷ்வர் குமார் பாதியில் வெளியேறினார்.

பாதியில்

பாதியில்

19வது ஓவர் போடும்போதே இவருக்கு காலில் வலி ஏற்பட்டு துடித்தார். இதனால் இவரால் ஓட கூட முடியவில்லை. இதனால் பாதியில் இவர் களத்தில் இருந்து வெளியேறினார். அதன்பின் மொத்தமாக ஐபிஎல் தொடரில் இருந்தே புவனேஷ்வர்குமார் வெளியேறினார். நேற்று முதல்தான் இதற்கான அறிவிப்பு வெளியானது.

மாற்று வீரர்

மாற்று வீரர்

இன்னொரு பக்கம் புவனேஷ்வர்குமாருக்கு மாற்று வீரரை ஹைதராபாத் அறிவித்துள்ளது. புவனேஷ்வர்குமாரின் தொடையில் காயம் ஏற்பட்டுள்ளது. 19வது ஓவரை அவர் போட வரும் போது கால் லேசாக தடுக்கியது. அப்போது பழைய காயம் காரணமாக பாதிக்கப்பட்ட தசை தற்போது மீண்டும் காயம் அடைந்துள்ளது. இதனால்தான் அவரால் அன்று ஓட முடியவில்லை.

சிக்கல் ஏன்

சிக்கல் ஏன்

இந்த காயம் கிரேட் 3 அல்லது கிரேட் 2 காயம் என்று கூறுகிறார்கள். இதனால் அவர் 2 முதல் இரண்டரை மாதங்கள் வரை ஓய்வு எடுக்க வேண்டும். ஓட முடியாது. எந்த விதமான பயிற்சியும் எடுக்க முடியாது. இதனால் அவரின் கிரிக்கெட் பார்ம் பெரிய அளவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

ஏன் இப்படி

ஏன் இப்படி

உலகக் கோப்பை தொடருக்கு பின்பே புவனேஷ்வர்குமாருக்கு காயம் ஏற்பட்டது. அவர் அதன்பின் கிரிக்கெட் தொடரில் கலந்து கொள்ள முடியவில்லை. ஹைதராபாத் அணியில் ஐபிஎல் போட்டியில் விளையாடியவர் பெரிய பார்மில் இல்லை. இந்த நிலையில் தற்போது அவருக்கு மீண்டும் காலில் இப்படி காயம் ஏற்பட்டுள்ளது.

முடியாது

முடியாது

இதனால் மீண்டும் கிரிக்கெட் ஆடலாம், பார்மிற்கு திரும்பலாம் என்ற அவரின் கனவு கலைந்து போய் உள்ளது. இந்த வருட ஆஸ்திரேலிய சீசனில் புவனேஷ்வர் குமார் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் தற்போது அந்த தொடரிலும் புவனேஷ்வர்குமார் கலந்து கொள்ள முடியாது என்று கூறுகிறார்கள்.

Story first published: Wednesday, October 7, 2020, 18:55 [IST]
Other articles published on Oct 7, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+