Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பெரிய திருப்பம்.. அடுத்தடுத்து 3 வீரர்களை இழந்த சிஎஸ்கே.. ஆனாலும் தோனி பிடிவாதம்.. பரபர பின்னணி!

துபாய்: சிஎஸ்கே அணியின் மிக முக்கியமான ஆல் ரவுண்டராக பார்க்கப்படும் பிராவோ தற்போது தொடரில் இருந்து வெளியேறி உள்ளார்.

சிஎஸ்கே அணிக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இந்த தொடரில் 7 போட்டிகளில் தோல்வி அடைந்து இருக்கும் சிஎஸ்கே எப்படியாவது மீதம் இருக்கும் போட்டிகளில் வென்று மானத்தை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

பிளே ஆப் செல்ல பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை என்றாலும் எப்படியாவது இனி வரும் போட்டிகளில் எப்படியாவது வெற்றிபெற சிஎஸ்கே திட்டமிட்டு உள்ளது.

சந்தேகம் ஏன்

சந்தேகம் ஏன்

கடைசியாக சென்னைக்கும் டெல்லிக்கும் இடையில் நடந்த ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே வீரர் பிராவோ பாதியில் வெளியேறினார். அடிவயிற்று பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக பிராவோ பாதியில் வெளியேறினார். பிராவோவிற்கு ஏற்பட்ட காயம் சீரியசானது. இதனால்தான் அவரால் அந்த போட்டியில் தொடர்ந்து ஆட முடியவில்லை என்று பிளமிங் குறிப்பிட்டு இருந்தார்.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

அதோடு பிராவோ காயம் சரியாக இன்னும் சில நாட்கள் ஆகலாம். அவர் குறைந்தது 2 வாரமாவது ஓய்வு எடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம். அதனால் பிராவோ இந்த தொடரில் மேலும் ஆடுவது சந்தேகம்தான் என்று பிளமிங் குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் பிளமிங் சொன்னது போலவே தொடரில் இருந்து தற்போது பிராவோ வெளியேறி உள்ளார்.

வெளியேற்றம்

வெளியேற்றம்

காயம் காரணமாக பிராவோ தொடரில் இருந்து வெளியேறி உள்ளார். இன்னும் 2 நாட்களில் அவர் சொந்த ஊருக்கு செல்வார் என்று சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இதனால் மீதம் இருக்கும் போட்டிகளில் பிராவோ ஆட மாட்டார். சிஎஸ்கே அணிக்கு இது பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. தொடர் தோல்விகளை சந்தித்து வரும் சிஎஸ்கே அணிக்கு இது மேலும் பின்னடைவை அளித்துள்ளது.

மோசம்

மோசம்

சிஎஸ்கே ஏற்கனவே ரெய்னா, ஹர்பஜனை இந்த தொடரின் தொடக்கத்தில் இழந்து விட்டது. ரெய்னா உறவினர்கள் கொல்லப்பட்ட காரணத்தாலும், ஹர்பஜன் குடும்ப காரணங்களாலும் தொடரில் இருந்து வெளியேறினார்கள். இதனால் சிஎஸ்கே கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது பிராவோவும் காயம் காரணமாக வெளியேறி உள்ளார். இவர்கள் மூன்று பேர் வெளியேறிய பின்பும் கூட சிஎஸ்கே அணி இவர்களுக்கு மாற்று வீரர்களை எடுக்கவில்லை.

ஐபிஎல் விதி

ஐபிஎல் விதி

ஐபிஎல் விதிப்படி தொடரில் இருந்து ஒரு வீரர் வெளியேறினால் அவருக்கு மாற்று வீரர்களை அணியில் எடுக்க முடியும். அதாவது ஐபிஎல் தொடரில் விளையாடாத மாற்று வீரர் ஒருவரை அணியில் எடுக்க முடியும். ஆனால் சிஎஸ்கே அணி ரெய்னா, ஹர்பஜனுக்கு மாற்று வீரர்களை எடுக்கவில்லை. தற்போது பிராவோவிற்கும் மாற்று வீரரை எடுக்க வேண்டாம் என்று சிஎஸ்கே முடிவு செய்துள்ளது.

ஏன் இப்படி

ஏன் இப்படி

ஏற்கனவே சிஎஸ்கே சரியான வீரர் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெளியேறும் வீரர்களுக்கு மாற்று வீரர்களை கூட எடுக்காமல் தோனி பிடிவாதமாக இருக்கிறார். அணியின் மோசமான நிலையை கருத்தில் கொண்டு புதிய வீரர்களை அணியில் எடுக்கலாம். ஆனால் ஏனோ தோனி வேண்டும் என்றே புதிய வீரர்களை அணியில் எடுக்க தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறார்.

Story first published: Wednesday, October 21, 2020, 14:17 [IST]
Other articles published on Oct 21, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+