For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மற்ற வீரர்களை பாருங்கள்.. ஏதோ தவறு நடக்கிறது.. தோனி பேட்டிங்கை விளாசி தள்ளிய லாரா.. சந்தேகம்!

துபாய்: தோனியின் பேட்டிங்கில் எங்கோ தவறு நடக்கிறது என்று மேற்கு இந்திய தீவுகள் அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர் பிரைன் லாரா குறிப்பிட்டுள்ளார்.

நேற்று கொல்கத்தாவிற்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மோசமான பேட்டிங் காரணமாக சிஎஸ்கே தோல்வி அடைந்தது. சிஎஸ்கேவில் தோனி, கேதார் இருவரும் மிக மோசமாக பேட்டிங் செய்து விமர்சனங்களுக்கு உள்ளாகி உள்ளனர்.

இதனால் தற்போது தோனியின் பேட்டிங் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், ஜாம்பவான்கள் விமர்சனங்களை வைத்து வருகிறார்கள். மேற்கு இந்திய தீவுகள் அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர் பிரைன் லாரா தோனியின் பேட்டிங்கை விமர்சித்துள்ளார்.

லாரா பேச்சு

லாரா பேச்சு

இது தொடர்பாக லாரா பேசியதாவது, தோனியின் பினிஷிங் ஆட்டங்கள் இப்போதெல்லாம் கேள்வி எழுப்புகிறது. அவர் தனக்கு விருப்பப்பட்ட பொஷிஷனில்தான் இறங்குகிறார். தனக்கு வசதியாக எந்த இடம் இருக்குமோ அங்குதான் பேட்டிங் செய்கிறார் . ஆனாலும் அவரால் சரியாக பேட்டிங் செய்ய முடியவில்லை.

பேட்டிங்

பேட்டிங்

அவர் மற்ற வீரர்களை பார்த்து தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். தோனி சிறந்த பினிஷர். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் தோனியிடம் சில விஷயங்கள் சரியாக இல்லை. எதோ ஒரு தவறு நடக்கிறது. அதை தோனி சரி செய்ய வேண்டும்.

பிரஷர்

பிரஷர்

பிரஷர்தான் இதற்கு காரணம் என்று சொல்ல முடியாது. ஜடேஜா இறங்கிய போதும் அதே பிரஷர் இருந்தது. ஆனால் அவர் அந்த பிரஷரை சமாளித்து ஆடுகிறார். நேற்றைய போட்டியிலும், கடந்த போட்டியில் அவரின் ஆட்டத்தை பார்த்தாலே தெரியும்.

மிஸ்ஸாகிறது

மிஸ்ஸாகிறது

ஆனால் தோனியிடம் அதுதான் மிஸ்ஸாகிறது. தோனி தன்னுடைய பேட்டிங்கில் சில விஷயங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். 10 ஓவர் முடிவில் சிஎஸ்கே கிட்டத்தட்ட 100 ரன்கள் இருந்தது. ஆனால் அதன்பின் 67 ரன்கள் அடிக்க முடியாமல் சிஎஸ்கே தோல்வி அடைந்தது என்பதை கொஞ்சம் கூட நம்ப முடியவில்லை.

 பிராவோ ஏன் இப்படி

பிராவோ ஏன் இப்படி

சிஎஸ்கே அணி பிராவோவை பயன்படுத்தாமல் இருப்பதும் சந்தேகம் தருகிறது. அவரின் பேட்டிங் உதவி இருக்கும். ஆனால் அவரை கடந்த மூன்று போட்டிகளில் ஒரு முறை கூட பேட்டிங் இறக்கவில்லை. தோனியிடம் நிறைய விஷயங்கள் மிஸ்ஸாகிறது. அதை உடனே அவர் சரி செய்ய வேண்டும், என்று பிரைன் லாரா குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Thursday, October 8, 2020, 15:12 [IST]
Other articles published on Oct 8, 2020
English summary
IPL 2020: Brian Lara questions the Dhoni batting style for CSK in this season.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+