
என்ன நடந்தது
இந்த நிலையில் டெல்லி அணிக்காக அஸ்வின் 3வது ஓவர் போடுவதற்காக களத்திற்கு வந்தார். அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் ஜோஸ் பட்லர் தவானிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இந்த விக்கெட் இணையம் முழுக்க பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. பட்லர் விக்கெட்டை அஸ்வின் எடுத்துவிட்டார் என்று இணையத்தில் பலரும் டிரெண்டு செய்து வருகிறார்கள்.

காரணம் உள்ளது
பட்லர் விக்கெட்டை அஸ்வின் எடுத்தது இப்படி வைரலாக காரணம் இருக்கிறது. கடந்த வருடம் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய அஸ்வின் ராஜஸ்தான் வீரர் ஜோஸ் பட்லர் விக்கெட்டை மன்கட் முறையில் எடுத்தார். இது பெரிய அளவில் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது. கிரீஸை விட்டு ஒரு இன்ச் நகர்ந்து இருந்த ஜோஸ் பட்லர் விக்கெட்டை அஸ்வின் எடுத்தார்.

பெரிய வைரல்
அந்த வருடம் முழுக்க அஸ்வின் எடுத்த மன்கட் விக்கெட் பெரிய அளவில் பேசப்பட்டது. அப்போதில் இருந்தே பட்லர் - அஸ்வின் இடையே லேசான உரசல் இருந்தது. இந்த நிலையில்தான் இன்றும் பட்லர் விக்கெட்டை அஸ்வின் எடுப்பாரா என்று கேள்வி நிலவியது. ஆனால் இன்றைய போட்டியில் உஷாரான பட்லர் கிரீஸை விட்டு ஒரு இன்ச் கூட நகர்ந்து வரவில்லை.

விக்கெட் எடுத்தார்
அஸ்வின் பவுலிங்கில் முழுக்க முழுக்க கிரீஸுக்கு உள்ளேயே பட்லர் இருந்தார். இந்த சீசனின் தொடக்கத்திலேயே அஸ்வின் மன்கட் விக்கெட் குறித்த எச்சரிக்கையை கொடுத்துவிட்டார். இதனால்தான் பட்லர் இன்று அடக்கமாக கிரீசுக்குள் இருந்தார்.

விக்கெட்
ஆனாலும் அவரின் விக்கெட்டை அஸ்வின் தனது பவுலிங் மூலம் எடுத்தார். பட்லர் அடித்த பந்தை தவான் கேட்ச் பிடித்தார். இதனால்தான் பட்லரை தற்போது இணையத்தில் பலரும் கிண்டல் செய்து வருகிறார்கள். எப்படி பார்த்தாலும் நீங்கள் அஸ்வின் ஓவரில் அவுட்டாகி விடுகிறீர்கள் என்று கூறி அவரை கிண்டல் செய்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications