Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அதிசயம் நடந்தால்தான் உண்டு.. பிளே ஆப் வாய்ப்பை இழக்கும் தருவாயில் சிஎஸ்கே.. இது மட்டும்தான் ஒரே வழி!

துபாய்: 2020 ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே மற்றும் பஞ்சாப் அணிகள் பிளே ஆப் செல்வதற்கான வாய்ப்புகள் குறைந்து கொண்டே வருகிறது .

2020 ஐபிஎல் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மும்பை எப்போதும் போல இந்த சீசனிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இன்னொரு பக்கம் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் இந்த சீசன் ஐபிஎல் தொடரில் நம்பர் 1 அணியாக உள்ளது. முழுக்க முழுக்க இளம் படையுடன் இந்த இரண்டு அணிகளும் களமிறங்கி உள்ளது.

மற்ற அணிகள் நிலை

மற்ற அணிகள் நிலை

இதனால் இந்த இரண்டு அணிகளும் கண்டிப்பாக பிளே ஆப் செல்லும் என்பது உறுதியாகி உள்ளது. இந்த நிலையில் இன்னொரு பக்கம் கொல்கத்தா, பெங்களூர் இரண்டு அணிகளும் சமமாக 6 போட்டிகளில் 4 போட்டிகளில் வென்றுள்ளது. இதனால் இந்த இரண்டு அணிகளும் ஐபிஎல்லில் பிளே ஆப் செல்ல அதிக வாய்ப்புள்ளது.

சிஎஸ்கே நிலை என்ன

சிஎஸ்கே நிலை என்ன

இங்குதான் சென்னை அணிக்கு பிளே ஆப் செல்வதற்கான வாய்ப்பு வெகுவாக குறைந்துள்ளது. தற்போது வரை 7 போட்டிகளில் ஆடி இருக்கும் சிஎஸ்கே 5 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. 2 போட்டிகளில் மட்டுமே சிஎஸ்கே வென்றுள்ளது.

பஞ்சாப் எப்படி

பஞ்சாப் எப்படி

இன்னொரு பக்கம் பஞ்சாப் அணி 7 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. 6 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. பஞ்சாப் ஏறத்தாழ பிளே ஆப் வாய்ப்பை இழந்துவிட்டது. இனி நடக்கும் 7 போட்டிகளிலும் பஞ்சாப் அதிக ரன் அல்லது விக்கெட் வித்தியாசத்தில் வென்றால் பிளே ஆப் செல்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஆனால் அது மிகவும் கஷ்டம்

பிளே ஆப் சென்னை

பிளே ஆப் சென்னை

சென்னை அணி பிளே ஆப் செல்ல வேண்டும் என்றால் மீதம் நடக்க உள்ள 7 போட்டிகளில் 5 போட்டிகளில் கண்டிப்பாக அதிக ரன் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும். இல்லையென்றால் குறைவான ரன் வித்தியாசத்தில் 6 போட்டிகளில் வெல்ல வேண்டும். இதுதான் சிஎஸ்கே அணி பிளே ஆப் செல்வதற்கு இருக்கும் ஒரே வழியாகும்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் தற்போது இருக்கும் பார்மில் பிளே ஆப் செல்வதற்கான வாய்ப்பு சிஎஸ்கேவிற்கு கிடைக்குமா என்பது சந்தேகம்தான். சிஎஸ்கே அணியின் பேட்டிங் ஆர்டர். மோசமான பீல்டிங் ஆகியவற்றை பார்க்கும் போது சிஎஸ்கே பிளே ஆப் செல்வதற்கான வாய்ப்புகள் கைநழுவி போக கூட வாய்ப்புள்ளது.

Story first published: Wednesday, October 14, 2020, 13:44 [IST]
Other articles published on Oct 14, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+