Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலி கிடையாது.. சாஹலுக்கு ஸ்கெட்ச் போட்டு தந்தது வேற ஒருத்தர்.. SRHஐ வீழ்த்தியது எப்படி? பின்னணி!

துபாய்: ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி நேற்று மிக முக்கியமான கட்டத்தில் திருப்பத்தை சந்தித்தது. போட்டியின் போக்கையே பெங்களூர் பவுலர் சாஹல் மாற்றினார். இவர் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது எப்படி என்று பேட்டி அளித்துள்ளார்.

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி தற்போது தனது ஐபிஎல் தொடரை வெற்றியோடு தொடங்கி உள்ளது. நேற்று டாஸ் தோல்வி அடைந்த பெங்களூர் முதலில் பேட்டிங் செய்தது. முதலில் களமிறங்கிய பெங்களூர் 163 ரன்கள் எடுத்த நிலையில், அதன்பின் இறங்கிய ஹைதராபாத் 153 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையம் இழந்து தோல்வி அடைந்தது.

ஹைதராபாத் கையில்தான் முதலில் போட்டி இருந்தது. ஆனால் சாஹல் செய்த பிளாக் மேஜிக் காரணமாக வரிசையாக ஹைதராபாத் விக்கெட்டுகளை இழந்தது.

எப்படி இருந்தது

எப்படி இருந்தது

இந்த போட்டியில் ஹைதராபாத் அணி தொடக்கத்தில் மிகவும் வலிமையாக இருந்தது. 15 ஓவர்களில் 121 ரன்கள் வரை அந்த அணி எடுத்து இருந்தது. அதன்பின் 40 ரன்கள் எடுத்தாலே போதும். ஆனால் 16வது ஓவரில்தான் எல்லாம் மாறியது. அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் மிகவும் வலுவாக இருந்த ஜானி பிரைஸ்டோ விக்கெட்டை சாஹல் வீழ்த்தினார். இந்த நொடிதான் போட்டி மாறியது.

அடுத்தடுத்து விக்கெட்

அடுத்தடுத்து விக்கெட்

அடுத்த பந்திலேயே விஜய் சங்கர் விக்கெட்டையும் வீழ்த்தினார். அதன்பின் வரிசையாக ஹைதராபாத் கோட்டை, செங்கல் செங்கல்லாக உடைந்து விழுந்தது. வரிசையாக பிரியம் கார்க், அபிஷேக் சர்மா, புவனேஷ்வர் குமார் , ரஷீத் கான் என்று எல்லோரும் அவுட்டானார்கள். மிட்சல் மார்ஷ், சந்தீப் சர்மாவும் அவுட்டான காரணத்தால் போட்டி

ஹைதராபாத் அணியின் கையை விட்டு போனது.

பேட்டி அளித்தார்

பேட்டி அளித்தார்

இது தொடர்பாக சாஹல் தற்போது பேட்டி அளித்துள்ளார். அதில், நான் போட்ட முதல் 3 ஓவர்களில் 1 விக்கெட் மட்டுமே எடுத்து இருந்தேன். 18 ரன்கள் சென்று இருந்தது. அதன்பின் கோலி என்னுடைய கடைசி ஓவரை நேரம் பார்த்து கொடுத்தார். 16வது ஓவரை எனக்கு கொடுத்தார். அந்த ஓவரில் ஒவ்வொரு பந்தையும் எப்படி வீச வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தேன்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் ஜானி பிரைஸ்டோ களத்தில் மிகவும் வலிமையாக இருந்தார். இதனால் நான் போட்ட திட்டம் வெற்றிபெறுமா, விக்கெட் விழுமா என்று கேள்வி இருந்தது. அப்போதுதான் டி வில்லியர்ஸ் என்னிடம் வந்து புதிய திட்டத்தை கூறினார். பிரைஸ்டோவிற்கு அவுட் சைட் ஆப் ஸ்டம்ப் போடும்படி கூறினார். பிரைஸ்டோ பேட்டை சுற்றுவதை பார்த்து அப்படி கூறினார்.

குறைவான வேகம்

குறைவான வேகம்

அதேபோல் அந்த பந்தை குறைவான வேகத்தில் வீச சொன்னார். அதேபோல் வீசினேன். சரியாக பிரைஸ்டோ பேட்டை சுற்றினார். பந்தின் வேகத்தைக கணிக்க முடியாததால், விக்கெட்டை இழந்தார். அதேபோல் அடுத்து விஜய சங்கருக்கும் இதேபோல் வில்லியர்ஸ் கொடுத்த ஐடியா வேலை செய்தது. விஜய் சங்கர் வந்ததும் கூக்லி போடும்படி, வில்லியர்ஸ்தான் கூறினார்.

 விக்கெட் விழுந்தது

விக்கெட் விழுந்தது

அதேபோல் அந்த பந்தை குறைவான வேகத்தில் வீச சொன்னார். அதேபோல் வீசினேன். சரியாக பிரைஸ்டோ பேட்டை சுற்றினார். பந்தின் வேகத்தை கணிக்க முடியாததால், விக்கெட்டை இழந்தார். அதேபோல் அடுத்து விஜய் சங்கருக்கும் இதேபோல் வில்லியர்ஸ் கொடுத்த ஐடியா வேலை செய்தது. விஜய் சங்கர் வந்ததும் கூக்லி போடும்படி, வில்லியர்ஸ்தான் கூறினார்.

Story first published: Tuesday, September 22, 2020, 9:44 [IST]
Other articles published on Sep 22, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+