For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இதுதான் ஒரே வழி.. "டிரான்ஸ்பர்'' அஸ்திரத்தை கையில் எடுத்த சிஎஸ்கே.. அணிக்குள் வரும் புதிய வீரர்கள்?

துபாய்: ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வி அடைந்த காரணத்தால் தற்போது அணிக்குள் புதிய வீரர்கள் களமிறக்கப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. எல்லா அணிகளும் ஒரு வெற்றி, ஒரு தோல்வி என்று புள்ளிகள் பட்டியலில் மேலே இருக்கிறது. ஆனால் சென்னை அணி இரண்டு தோல்வி, ஒரு வெற்றி என்று புள்ளிகள் பட்டியலில் பின்தங்கி உள்ளது.

சென்னை அணியின் தொடர் தோல்விக்கு பேட்டிங் காரணமாக கூறப்படுகிறது. சென்னையின் ஓப்பனிங் வீரர்கள் சரியாக ஆடுவது இல்லை என்று புகார் வைக்கப்பட்டுள்ளது.

டிரான்ஸ்பர்

டிரான்ஸ்பர்

இந்த நிலையில் சிஎஸ்கே அணி தற்போது தொடருக்கு இடையே புதிய வீரர்களை ஏலம் எடுக்க யோசித்து வருகிறது. அதாவது தொடர் நடந்து கொண்டு இருக்கும் போதே டிரான்ஸ்பர் முறைப்படி, மற்ற அணிகளில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் வீரர்களை அணிக்குள் எடுக்க சிஎஸ்கே நினைத்து வருகிறது. சிஎஸ்கேவின் பேட்டிங் திணறுவதால், இந்த முடிவை அந்த அணி எடுக்கும் என்கிறார்கள்.

அணியில் எடுக்கலாம்

அணியில் எடுக்கலாம்

தற்போது அணியில் இருந்து ரெய்னா வெளியேறி உள்ளார். ரெய்னா இந்த தொடர் முழுக்க கண்டிப்பாக திரும்ப வர மாட்டார். இதனால் இவரின் இடத்திற்கு புதிய வீரரை அணியில் எடுக்க சிஎஸ்கேவிற்கு அதிகாரம் உள்ளது. அதேபோல் இன்னொரு பக்கம் ஹர்பஜன் இடத்திற்கும் புதிய வீரர் ஒருவரை சென்னை தனது அணியில் எடுக்கலாம்.

யார் எல்லாம்

யார் எல்லாம்

இதற்காக சென்னை அணி நிர்வாகம் புதிய லிஸ்ட் ஒன்றை எடுத்து வருகிறது என்றும் கூறுகிறார்கள். மொத்தம் 5 வீரர்களை சென்னை அணி குறி வைத்து உள்ளது. அதன்படி மும்பை அணியில் இருக்கும் கிறிஸ் லின்னை சென்னை அணி குறி வைத்து உள்ளது. மும்பையில் நிறைய ஓப்பனர்கள் இருப்பதால் இவருக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை .

யார் எல்லாம் ஒப்பனர்கள்

யார் எல்லாம் ஒப்பனர்கள்

கிறிஸ் லின்னை மும்பை அணி அடிப்படை விலைக்கு மட்டுமே ஏலம் எடுத்தது. ஆனாலும் அவரை சரியாக பயன்படுத்தவில்லை. இவர் பிஎஸ்எல் 2020 போட்டியில் பார்மிற்கு திரும்பினார். தற்போது சிறப்பான பார்மில் இருக்கிறார். இதனால் போட்டிக்கு இடையே இவரை முரளி விஜய்க்கு மாற்றாக சென்னை தங்கள் அணிக்கு இழுக்க வாய்ப்புள்ளது.

வாய்ப்பு

வாய்ப்பு

அதேபோல் பெங்களூர் அணியில் இருக்கும் ஜோஷ் பிளிப் சென்னை அணியின் ஒன் டவுன் பிரச்சனையை தீர்க்க வாய்ப்புள்ளது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த விக்கெட் கீப்பரான இவரை பெங்களூர் நன்றாக பயன்படுத்தி வருகிறது . ஆனால் பெங்களூரில் ஒன் டவுன் பிரச்சனை இல்லை என்பதால், இவரை பெங்களூர் அணி சென்னைக்கு கொடுக்கவும் வாய்ப்புள்ளது .

வேறு யார் எல்லாம்

வேறு யார் எல்லாம்

அதேபோல் கொல்கத்தாவில் இருக்கும் இங்கிலாந்து வீரர் கிறிஸ் பண்டன் சென்னைக்கு வர வாய்ப்புள்ளது . இவரை கடந்த ஏலத்தின் போதே சென்னை அணி எடுக்க விரும்பியது . கொல்கத்தாவில் நல்ல பேட்டிங் ஆர்டர் இருப்பதால் இவருக்கு வாய்ப்பு கிடைப்பது இல்லை. இதனால் இவர் சிஎஸ்கேவிற்கு மாற்றப்படலாம். இதேபோல் ஜார்க்கண்டை சேர்ந்த விராட் சிங், அண்டர் 19ல் இருக்கும் ஸ்பின் பவுலர்களை சென்னை அணி குறி வைத்து வருகிறது.

Story first published: Saturday, September 26, 2020, 14:22 [IST]
Other articles published on Sep 26, 2020
English summary
IPL 2020: Chennai may use transfer method for bring new players in the team that is struggling.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+