Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெளி ஆட்கள் வேண்டாம்.. என்ன தோனி இப்படி சொல்லிட்டாரு!.. சிஎஸ்கே துணிச்சலான முடிவு.. செம திருப்பம்!

துபாய்: 2020 ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே எந்த புதிய வீரரையும் டிராஸ்பர் முறை மூலம் அணிக்குள் எடுக்க வாய்ப்பு இல்லை என்று கூறுகிறார்கள். இன்று போட்டிக்கு முன் பேசிய தோனி.. சிஎஸ்கேவின் முடிவு குறித்து ஹிண்ட் கொடுத்துள்ளார்.

பெங்களூர் மற்றும் சென்னைக்கு இடையிலான ஐபிஎல் போட்டி இன்று துபாயில் நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

இந்த நிலையில் இன்று நடக்கும் போட்டியில் சென்னை அணியில் இருந்து ஜாதவ் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக தமிழக வீரர் என். ஜெகதீசன் அணிக்குள் சேர்க்கப்பட்டு உள்ளார்.

என்ன நடந்தது

என்ன நடந்தது

இந்த நிலையில் இந்த ஐபிஎல் சீசனில் பாதியில் சிஎஸ்கே அணிக்குள் புதிய வீரர்கள் வர வாய்ப்புள்ளது என்று தகவல்கள் வந்தது. அதாவது டிரான்ஸ்பர் முறையின் மூலம் புதிய வீரர்கள் அணிக்குள் வர வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டது. ஐபிஎல் தொடருக்கு மத்தியில் 8 அணிகளுக்கும் டிரான்ஸ்பர் வாய்ப்பு வழங்கப்படும். எல்லா அணிகளும் 7 போட்டிகள் விளையாடிய பின் இந்த பணிகள் தொடங்கும்.

வீரர் மாற்றம்

வீரர் மாற்றம்

டிரான்ஸ்பர் என்பது ஒரு அணியில் இருக்கும் வீரரை இன்னொரு அணி தொடருக்கு மத்தியில் ஏலம் எடுப்பது ஆகும். ஒரு அணியில் 2 போட்டிகள் அல்லது அதற்கும் குறைவான போட்டிகள் ஆடிய வீரர்களை டிரான்ஸ்பர் முறை மூலம் வேறு அணிகள் எடுக்க முடியும். இந்த நிலையில் சிஎஸ்கே இந்த முறை மூலம் புதிய வீரர்களை எடுக்க வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டது.

மிடில் ஆர்டர்

மிடில் ஆர்டர்

சிஎஸ்கே அணியின் மிடில் ஆர்டர் வலிமை இன்றி இருக்கிறது. இதனால் மிடில் ஆர்டர் பலத்தை அதிகரிக்கும் வகையில் புதிய வீரர்களை சிஎஸ்கே எடுக்கும் என்று கூறப்பட்டது. ரஹானே, விராட் சிங், பர்தீவ் பட்டேல் போன்ற வீரர்களை சிஎஸ்கே அணிக்குள் டிரான்ஸ்பர் முறையில் எடுக்க வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் தற்போது சிஎஸ்கே எந்த புதிய வீரரையும் டிராஸ்பர் முறை மூலம் அணிக்குள் எடுக்க வாய்ப்பு இல்லை என்று கூறுகிறார்கள். இன்று போட்டிக்கு முன் பேசிய தோனி.. சிஎஸ்கேவின் முடிவு குறித்து ஹிண்ட் கொடுத்துள்ளார். ஆம் இன்றைய போட்டிக்கு முன் பேசிய தோனி, பொதுவாக ஒரு அணிக்குள் வேறு அணியை சேர்ந்த வீரர்கள் வர மாட்டார்கள். ஒரே அணியோடு இருப்பதைதான் பெரும்பாலான அணிகள் விரும்பும்.

வெளி ஆட்கள் வேண்டாம்

வெளி ஆட்கள் வேண்டாம்

வெளி ஆட்கள் வருவதை பெரும்பாலும் அணிகள் விரும்பாது. ஒரே அணியாக இருப்பதுதான் முக்கியமான விஷயம். இதை தவறாக நினைக்க கூடாது, என்று தோனி கூறியுள்ளார். இதனால் சிஎஸ்கே இந்த சீசனில் டிரான்ஸ்பர் முறையில் வீரர்களை எடுக்க வாய்ப்பு இல்லை என்று கூறுகிறார்கள். புதிய வீரர்கள் இல்லாமல் அதே வீரர்களுடன் விளையாட சிஎஸ்கே நினைக்கிறது என்று தகவல்கள் வருகிறது.

Story first published: Saturday, October 10, 2020, 19:54 [IST]
Other articles published on Oct 10, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+