Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மிடில் ஆர்டரில் இப்படித்தான் ஆடணும் பாஸ்.. தோனிக்கு பாடம் எடுத்த தமிழக வீரர்.. இதை கவனித்தீர்களா?

துபாய்: பெங்களூருக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே மோசமாக தோல்வி அடைந்தாலும், சிஎஸ்கேவில் இன்று களமிறங்கிய என் ஜெகதீசன் பெரிய அளவில் நம்பிக்கை அளித்தார்.

தொடர் தோல்விகளுக்கு பிறகு இன்று சிஎஸ்கே அணி ஆர்சிபியை துபாயில் எதிர்கொண்டது. கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்த அதிர்ச்சியில் சிஎஸ்கே டீம் இருந்தது.

இன்று கண்டிப்பாக வென்றாக வேண்டிய கட்டாயம் சிஎஸ்கே அணிக்கு இருந்தது. பெங்களூர் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடந்தது.

தொடக்கம்

தொடக்கம்

தொடக்கத்தில் மோசமாக பேட்டிங் செய்த பெங்களூர் போக போக அதிரடி காட்டியது. கடைசி கட்டத்தில் வந்த கோலி காட்டிய அதிரடி காரணமாக பெங்களூர் பெரிய சரிவில் இருந்து மீண்டு வந்தது . பெங்களூர் அணியில் ஆரோன் பின்ச், தேவதத் படிக்கல், டி வில்லியர்ஸ் என்று எல்லோரும் வரிசையாக அவுட்டான பின்பும் கவலையே இன்றி கோலி மட்டும் தனியாக காட்டி அடி அடித்தார்.

கோலி செம

கோலி செம

தொடக்கத்தில் மெதுவாக ஆடி வந்த கோலி போக போக வேகம் எடுத்து அதிரடி காட்ட தொடங்கினார். இதன் மூலம் 52 பந்தில் 90 ரன்கள் எடுத்தார். இதில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர் அடக்கம். 360 டிகிரியில் இவர் ஷாட்களை அடித்தார். இந்த சீரியசில் இவர் இப்படி ஒரு ஆட்டம் ஆட மாட்டாரா என்று எல்லோரும் எதிர்பார்த்த நிலையில்.. தனது ருத்ர தாண்டவத்தை சிஎஸ்கேவிற்கு எதிராக நிகழ்த்தினார். இதனால் பெங்களூர் 20 ஓவரில் 169 ரன்கள் எடுத்தது.

மோசமான பேட்டிங்

மோசமான பேட்டிங்

எப்போதும் போல இன்றும் சிஎஸ்கே பேட்டிங் சேஸிங்கில் சொதப்பியது. முதல் பவர் பிளே மிக மோசமாக இருந்தது. 5 ஓவர்களில் 30 ரன்கள் அடிக்கவே சிஎஸ்கே கடுமையாக திணறியது. வாட்சன், டு பிளசிஸ் இருவரும் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள். அதன்பின் இறங்கிய அம்பதி ராயுடு, ஜெகதீசன் இருவரும் டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடினார்கள். 13 ஓவருக்கு பின்தான் இரண்டு பேருமே கொஞ்சம் வேகம் காட்ட தொடங்கினார்கள்.

ஜாதவ்

ஜாதவ்

சிஎஸ்கே அணியில் கேதார் ஜாதவிற்கு பதிலாக இன்று என் ஜெகதீசன் ஆடினார். அணியில் மற்ற வீரர்கள் மோசமாக ஆடினாலும் இன்று ஜெகதீசன் ஆட்டத்தில் கொஞ்சம் தீவிரம் இருந்தது. ஜாதவிடம் இல்லாத ஆர்வம் இன்று ஜெகதீசனிடம் காணப்பட்டது. முக்கியமான நேரங்களில் இவர் பவுண்டரி அடித்தார். அதேபோல் தேவையான நேரங்களில் இவர் ஸ்டிரைக் ரொட்டேஷனும் செய்தார்.

மிடில் ஆர்டரில் இப்படித்தான் ஸ்டிரைக் ரொட்டேட் செய்ய வேண்டும் என்று தோனி, ஜாதவிற்கு இவர் பாடம் எடுத்துள்ளார்.

சிறப்பு

சிறப்பு

முதல் 15 பந்துகளில் மெதுவாக ஆடினாலும் போக போக அதிரடி காட்டினார். 28 பந்துகளில் இவர் 33 ரன்கள் எடுத்தார். அதேப்போல் 4 பவுண்டரிகளும் அடித்தார். சிஎஸ்கே இந்த போட்டியிலும் மோசமாக தோல்வி அடைந்து இருந்தாலும் முதல் முறையாக மிடில் ஆர்டரில் ஆடுவதற்கு நல்ல வீரரை கண்டுபிடித்து உள்ளது. இனி வரும் போட்டிகளில் கண்டிப்பாக சிஎஸ்கே ஜெகதீசனை பயன்படுத்தினால்.. அவர் சிறப்பான மிடில் ஆர்டர் வீரராக உருவெடுக்க வாய்ப்புள்ளது.

Story first published: Saturday, October 10, 2020, 23:14 [IST]
Other articles published on Oct 10, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+