Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அதுதான் மிஸ்ஸிங்.. மொத்தமாக பேட்டிங் ஆர்டரே மாறும்.. சிஎஸ்கே குறி வைத்த 2 தமிழக வீரர்கள்..செம பிளான்

துபாய்: சிஎஸ்கே அணி அடுத்து வரும் போட்டிகளில் முக்கியமான மாற்றங்களை அணிக்குள் செய்ய இருப்பதாக தகவல்கள் வருகிறது.

ஐபிஎல் தொடரில் எப்படியாவது வெற்றிப்பாதைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே அணி உள்ளது. மொத்தம் 6 போட்டிகளில் விளையாடி இருக்கும் சிஎஸ்கே வெறும் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்று உள்ளது.

சிஎஸ்கே அணியின் தொடர் தோல்விக்கு முக்கிய காரணம் அணியின் பேட்டிங் ஆர்டர்தான் என்று புகார் உள்ளது. ஓப்பனிங் வீரர்கள் நன்றாக ஆடினாலும் மிடில் ஆர்டரில் ஆடும் வீரர்கள் சரியாக ஆடுவது இல்லை என்று புகார் உள்ளது.

மிடில் ஆர்டர்

மிடில் ஆர்டர்

சிஎஸ்கே அணியின் மிடில் ஆர்டர்.. ஐபிஎல் தொடரில் மற்ற அணிகளின் மிடில் ஆர்டரை விட மிக மோசமாக இருக்கிறது. பஞ்சாப் அணியிலும் கூட மிடில் ஆர்டர் வீரர்கள் நன்றாக பேட்டிங் செய்கிறார்கள். ஆனால் சிஎஸ்கேவில்தான் மிடில் ஆர்டர் மிக மோசமாக உள்ளது.

பேட்ஸ்மேன்கள்

பேட்ஸ்மேன்கள்

சிஎஸ்கேவில் பேட்ஸ்மேன்கள் இல்லாமல் இல்லை.. ஆனால் இருக்கிற பேட்ஸ்மேன்களை சரியாக பயன்படுத்துவது இல்லை என்பதே புகாராக உள்ளது. பிராவோ அணியில் இருக்கிறார் ஆனால் அவரை பயன்படுத்துவது இல்லை. ஜடேஜா மிகவும் தாமதமாக இறங்குகிறார். கேதார் ஜாதவ் பார்ம் இல்லாமல் இருந்தும் கூட அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

மிஸ் ஆகும் விஷயம்

மிஸ் ஆகும் விஷயம்

சிஎஸ்கேவில் முக்கியமான ஒரு விஷயம்தான் தற்போது மிஸ்ஸாகி வருகிறது. அது அணியில் இளம் வீரர்கள் இல்லாதது. சாம் கரன் போன்ற இளம் வீரர் இருந்தாலும், சிஎஸ்கே அணியில் ஒரு இளம் இந்திய பேட்ஸ்மேன் இல்லை. மற்ற அணிகள் எல்லாம் குறைந்தது ஒரு இந்திய இளம் வீரரையாவது தங்கள் பேட்டிங் ஆர்டரில் வைத்து இருக்கிறது.. சிஎஸ்கே இந்த ஒரு விஷயத்தை சரி செய்தால் அது அணிக்குள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறுகிறார்கள்.

மாற்றம்

மாற்றம்

தற்போது ராயுடுவிற்கு பின் தோனி களமிறங்குகிறார். ஆனால் தோனிக்கு பதில் இங்கு தமிழக வீரர் ஒருவர் களமிறங்கினால் நன்றாக இருக்கும் என்று அணி நிர்வாகம் கருதுகிறது. ஒரு இளம் தமிழக பேட்ஸ்மேன் இந்த இடத்தில் களமிறங்கினால் நன்றாக இருக்கும் என்று சிஎஸ்கே நிர்வாகம் கருதுகிறது. இதற்காக சிஎஸ்கே நிர்வாகம் இரண்டு வீரர்களை மனதில் வைத்து உள்ளது.

இரண்டு பேர்

இரண்டு பேர்

இதற்காக தமிழகத்தை சேர்ந்த என். ஜெகதீசன் மற்றும் சாய் கிஷோர் இருவருக்கும் சிஎஸ்கே பயிற்சி கொடுத்து தயார் செய்து வருகிறது. இதில் என் ஜெகதீசன் விரைவில் சிஎஸ்கேவின் மிடில் ஆர்டரில் களமிறங்குவார் என்று கூறுகிறார்கள். என் ஜெகதீசன் வலதுகை பேட்ஸ்மேன் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னொரு பக்கம் சாய் கிஷோர் ஸ்பின் பவுலர். ஆனாலும் இவர் இடது கை பேட்டிங்கும் செய்ய கூடியவர்.

லெப்ட்

லெப்ட்

சிஎஸ்கே அணியில் ரெய்னா இல்லாத காரணத்தால் இடது - வலது இணை இல்லாமல் உள்ளது. இதனால் வரிசையாக வலது கை பேட்ஸ்மேன்கள் பேட்டிங் இறங்குகிறார்கள். ஆகவே சாய் கிஷோரை நான்காவது வீரராகவோ அல்லது ஐந்தாவது வீரராகவோ கொண்டு வர சிஎஸ்கே ஆலோசனை செய்து வருகிறது. இவர்கள் இருவரில் ஒரு வீரர் கண்டிப்பாக சிஎஸ்கே அணிக்குள் விரைவில் இடம்பெறுவார் என்று கூறுகிறார்கள்.

பேட்டிங் ஆர்டர்

பேட்டிங் ஆர்டர்

அதோடு சிஎஸ்கே அணியின் பேட்டிங் ஆர்டரும் மாற வாய்ப்புள்ளது என்கிறார்கள். வாட்சன், டு பிளசிஸ், அம்பதி ராயுடு, ஜடேஜா, சாம் கரன், தமிழக வீரர் (அல்லது கேதார் ஜாதவ்) அதன்பின் பிராவோ, தோனி களமிறங்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இன்றைய போட்டியில் இல்லையென்றாலும் வரும் போட்டியில் இந்த மாற்றம் நடக்கும் என்கிறார்கள்.

Story first published: Saturday, October 10, 2020, 16:31 [IST]
Other articles published on Oct 10, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+