Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

திடீரென ஆர்ஆர் அனுப்பிய செய்தி.. தப்பு கணக்கு போட்ட சிஎஸ்கே.. மொத்தமாக பிளானை மாற்ற வேண்டிய கட்டாயம்

சார்ஜா: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டு வைத்து இருந்த பிளான் மொத்தத்தையும் மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் இன்று மிக முக்கியமான ஆட்டம் நடக்க உள்ளது. சென்னை அணிக்கும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையில் இன்று போட்டி நடக்க உள்ளது. இந்த தொடரின் முக்கியமான போட்டியாக இந்த போட்டி பார்க்கப்பட நிறைய காரணங்கள் உள்ளது.

ராஜஸ்தான் அணியில் முக்கியமான வீரர்கள் பலர் ஆப்சன்ட் ஆன காரணத்தால் இன்றைய போட்டி, அந்த அணியின் வலிமை என்ன என்பதை காட்டிவிடும். அதேபோல் சென்னை அணியும், உண்மையில் பலமுடன் இருக்கிறதா என்று தெரிந்துவிடும்.

என்ன பிளான்

என்ன பிளான்

இந்த போட்டியில் முதலில் ராஜஸ்தான் அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் விளையாடுவது சந்தேகமாக இருந்தது. காரணம் இவருக்கு தலையில் ஏற்பட்ட காயம். ஆம், கடந்த இங்கிலாந்து தொடரின் போது வலை பயிற்சியில் ஸ்டீவ் ஸ்மித் காயம் அடைந்தார். இவருக்கு தலையில் அடிபட்டது.

எப்படி இருக்கிறார்

எப்படி இருக்கிறார்

இவருக்கு தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக இவர் அதிர்ச்சியில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் இங்கிலாந்திற்கு எதிரான ஒருநாள் தொடரில் இவரால் மூன்று போட்டிகளில் விளையாட முடியவில்லை. இவரை ஓய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதனால் ஸ்டீவ் ஸ்மித் அமீரகம் வந்து, தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு, ஓய்வும் எடுத்தார்.

நிலை என்ன

நிலை என்ன

இவர் முதல் போட்டியில் விளையாடுவது சந்தேகமாக இருந்தது. ஏனென்றால் நேற்று காலை வரை இவர் காயத்தில் இருந்து விடுப்படவில்லை. இந்த நிலையில் சென்னை ஸ்டீவ் ஸ்மித் இல்லாத ராஜஸ்தான் அணியை எதிர்கொள்ள திட்டங்களை வகுத்து இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் நேற்று ஸ்டீவ் ஸ்மித் தனது பிட்னஸை நிரூபித்தார். நேற்று பயிற்சியின் போதே இவர் பிட்னஸை நிரூபித்தார்.

ஓடினார்

ஓடினார்

பயிற்சியின் போது சிக்-சாக் ஓட்டத்தில் இவர் ஈடுப்பட்டார். பொதுவாக உடல் தகுதியை நிரூபிக்க இந்த ஓட்டம் அவசியம். இதை ஸ்டீவ் ஸ்மித் மேற்கொண்ட காரணத்தால், இன்று கண்டிப்பாக இவர் விளையாடுவார் என்று உறுதியாகி உள்ளது. அதேபோல் ராஜஸ்தான் அணியில் இன்னொரு மாஸ் வீரர் ஜோப்ரா ஆர்ச்சர் இணைய உள்ளார் என்பதும் உறுதியாகி உள்ளது.

மாற்ற வேண்டும்

மாற்ற வேண்டும்

இன்னொரு பக்கம் ராஜஸ்தான் அணியில் இன்று டாம் கரன் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் விளையாட வாய்ப்புள்ளது. ஏனென்றால் அப்பாவின் உடல்நிலை காரணமாக பென் ஸ்டோக்ஸ் விளையாட வாய்ப்பில்லை. அதேபோல் ஜோஸ் பட்லர் கொரோனா விதிமுறை காரணமாக விளையாட வாய்ப்பு இல்லை. இதனால் புதிய அணியோடு ராஜஸ்தான் இன்று இறங்கும்.

எல்லாம் போச்சு

எல்லாம் போச்சு

இதனால் சென்னை அணி, இந்த புதிய அணிக்கு எதிராக திட்டங்களை வகுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் சஞ்சு சாம்சன், ராபின் உத்தப்பாவும் இன்று ராஜஸ்த்தான் அணிக்காக விளையாட வாய்ப்புள்ளது. இப்படி கடைசி கட்டத்தில் ஆர்ஆர் பல மாற்றங்களை செய்வதால், சென்னை அணி புதிய வியூகத்தை வகுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

Story first published: Tuesday, September 22, 2020, 22:28 [IST]
Other articles published on Sep 22, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+