Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எல்லோரும் அப்படி பேசினால் என்ன செய்வார்? தினேஷ் கார்த்திக் கற்றுக்கொடுத்த பாடம்.. தோனி பரபர முடிவு!

துபாய்: கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில் பெங்களூருக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே கேப்டன் தோனி தனது பேட்டிங் ஆர்டரை மாற்றி உள்ளார்.

பெங்களூர் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தொடக்கத்தில் மோசமாக பேட்டிங் செய்த பெங்களூர் போக போக அதிரடி காட்டியது.

முதலில் பேட்டிங் இறங்கிய பெங்களூர் அணியில் ஆரோன் பின்ச், தேவதத் படிக்கல், டி வில்லியர்ஸ் என்று எல்லோரும் வரிசையாக விக்கெட்டுகளை இழந்தனர்.

கோலி

கோலி

ஆனால் இன்னொரு பக்கம் கோலி முதலில் மெதுவாக ஆடி போக போக வேகம் எடுத்தார். முதல் 30 ரன்களை 30 பந்தில் எடுத்தவர்.. அதன்பின் அதிரடி காட்டினார். கடைசி கட்டத்தில் வேகமாக 2..2 ரன்களாக ஓடினார். இன்னொரு பக்கம் அதிரடி சிக்ஸர்களை அடித்தார். இதன் மூலம் 52 பந்தில் 90 ரன்கள் எடுத்தார். இதில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர் அடக்கம். இதனால் பெங்களூர் 20 ஓவரில் 169 ரன்கள் எடுத்தது.

சிஎஸ்கே

சிஎஸ்கே

அதன்பின் களமிறங்கிய சிஎஸ்கே அணியில் பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. தொடக்க வீரர்கள் முதல் பவர் பிளேவில் ஆட முடியாமல் திணறினார்கள். இதனால் வாட்சன், டு பிளசிஸ் இருவரும் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள். டு பிளசிஸ் அவுட்டான பின் அம்பதி ராயுடு களமிறங்கினார். இன்னொரு பக்கம் வாட்சன் அவுட்டான பின் தோனி களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் இந்த முறை தோனிக்கு பதிலாக புதிய தமிழக வீரர் ஜெகதீசன் 4வது இடத்தில் பேட்டிங் இறங்கினார். இந்த தொடரின் தொடக்கத்தில் இரண்டு போட்டிகளில் 4வது இடத்தில் கேதார் ஜாதவ் களமிறங்கி ஆடி வந்தார். ஆனால் அந்த இடத்தில் ஜாதவ் சரியாக ஆடவில்லை. அதிலும் சிஎஸ்கே அணியின் தோல்விக்கும் இவர் காரணமாக இருந்தார்.

அதன்பின் என்ன

அதன்பின் என்ன

அதற்கு அடுத்தடுத்த போட்டிகளில் 4வது இடத்தில் தோனி களமிறங்கினார். கடந்த மூன்று போட்டிகளில் இரண்டு போட்டியில் 4வது இடத்தில் தோனி களமிறங்கினார். ஆனால் 4வது இடத்தில் பேட்டிங் இறங்கிய தோனியும் சரியாக பேட்டிங் செய்யவில்லை. இவர் 4வது இடத்தில் பேட்டிங் இறங்கிய இரண்டு போட்டியிலும் சிஎஸ்கே தோல்வி அடைந்தது. 4வது இடத்தில் இறக்கிவிட்டு... இவர் டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடியது பெரிய சர்ச்சையானது.

சர்ச்சை

சர்ச்சை

இந்த நிலையில் தோனியின் பேட்டிங் பெரிய அளவில் விமர்சனத்திற்கு உள்ளானது. தோனியிடம் பார்ம் இல்லை. அவர் உடனே பேட்டிங் ஆர்டரை மாற்ற வேண்டும். அவர் டாப் ஆர்டரில் இறங்காமல் கடைசி கட்டத்தில் இறங்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டது. அதோடு கம்பீர், சேவாக், பதான் போன்ற வீரர்கள் தோனியின் பேட்டிங்கை கடுமையாக விமர்சனம் செய்தனர்.

எப்படி

எப்படி

இந்த நிலையில்தான் கடும் விமர்சனங்களை தொடர்ந்து தோனி தனது பேட்டிங்கை மாற்றி உள்ளார். 4வது இடத்தில் தோனி பேட்டிங் இறங்காமல் இந்த முறை என் ஜெகதீசனை பேட்டிங் இறக்கிவிட்டுள்ளார். தொடர் விமர்சனங்களை அடுத்து தோனி பின்வாங்கி உள்ளார். இது ஒருவகையில் நல்ல முடிவுதான் என்றும் கூறுகிறார்கள்.

கொல்கத்தா

கொல்கத்தா

கொல்கத்தா அணியில் தினேஷ் கார்த்திக் இதேபோல் 4வது இடத்தில் இறங்கி திணறினர். அதன்பின் தினேஷ் கார்த்திக் பேட்டிங் ஆர்டரை மாற்றினார். தற்போது அவர் நன்றாக ஆடி வருகிறார். இதனால் தினேஷ் கார்த்திக்கை பார்த்து தோனி பாடம் கற்றுள்ளார் என்கிறார்கள்.

Story first published: Saturday, October 10, 2020, 22:29 [IST]
Other articles published on Oct 10, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+