
சிஎஸ்கே எப்படி
சிஎஸ்கே அணியின் தொடர் தோல்விக்கு முக்கிய காரணமாக அணியின் பேட்டிங் ஆர்டர் பார்க்கப்படுகிறது. சென்னை அணியின் ஓப்பனிங் வீரர்கள் தற்போது பார்மிற்கு வந்துவிட்டனர். வாட்சன் - டு பிளசிஸ் இருவரும் நல்ல பார்மில் உள்ளனர். இன்னொரு பக்கம் ஒன் டவுன் இறங்க ராயுடு இருக்கிறார். இவர் சிஎஸ்கே அணிக்காக ஒன் டவுன் இறங்கி நன்றாக ஆடி வருகிறார்.

ஒன் டவுன் வீரர்
ஆனால் அதன்பின் 4வது இடத்தில் இறங்கும் வீரர் யார் என்பதில் நிறைய குழப்பங்கள், சந்தேகங்கள் உள்ளது. சிஎஸ்கே அணியில் ரெய்னா இல்லாத காரணத்தால் 4வது இடத்தில் இறங்கும் வீரர் குறித்து நிறைய விவாதங்கள் எழுந்துள்ளது. முதலில் இரண்டு போட்டிகளில் சிஎஸ்கே அணியில் 4வது இடத்தில் கேதார் ஜாதவ் களமிறங்கி ஆடி வந்தார். ஆனால் அந்த இடத்தில் ஜாதவ் சரியாக ஆடவில்லை.

தோனி பேட்டிங்
அதன்பின் 4வது இடத்தில் தோனி களமிறங்கினார். கடந்த மூன்று போட்டிகளில் இரண்டு போட்டியில் 4வது இடத்தில் தோனி களமிறங்கினார். ஆனால் 4வது இடத்தில் பேட்டிங் இறங்கிய தோனியும் சரியாக பேட்டிங் செய்யவில்லை. இவர் 4வது இடத்தில் பேட்டிங் இறங்கிய இரண்டு போட்டியிலும் சிஎஸ்கே தோல்வி அடைந்தது. 4வது இடத்தில் இறக்கிவிட்டு... இவர் டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடியது சிஎஸ்கேவின் தோல்விக்கு காரணமாக பார்க்கப்பட்டது.

டெஸ்ட் தோனி
மிடில் ஆர்டரில் இறங்கி தோனி பந்தை குடித்துவிட்டு கடைசி நேரத்தில் அவுட்டாகி விடுகிறார். இதனால் கடைசி ஓவரில் 20-30 ரன்கள் அடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு சிஎஸ்கே தோல்வி அடைகிறது. இந்த நிலையில் இன்று நடக்கும் போட்டியில் தோனி தனது பேட்டிங் ஆர்டரை மாற்றுவாரா என்று கேள்வி எழுந்துள்ளது. அதாவது 4வது இடத்தில் தோனி பேட்டிங் இறங்காமல்.. சாம் கரன், பிராவோ,ஜடேஜா இறங்கிய பின் தோனி வருவாரா என்று கேள்விகள் எழுந்துள்ளது.

பெங்களூர் வலிமை
ஆனால் இன்று பெங்களூருக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே கேப்டன் தோனியின் பேட்டிங் ஆர்டரில் மாற்றம் இருக்காது என்று கூறுகிறார்கள். கண்டிப்பாக தோனி 4வது இடத்தில்தான் பேட்டிங் இறங்குவார் என்று கூறுகிறார்கள். தோனி தனது பேட்டிங் ஆர்டரை மாற்ற வாய்ப்பே இல்லை. அவர் 4வது இடத்தில் பேட்டிங் இறங்கி தன்னை நிரூபிக்க பார்க்கிறார். இதனால் கண்டிப்பாக தோனி பேட்டிங் ஆர்டரை மாற்ற வாய்ப்பில்லை என்று கூறுகிறார்கள்.

ஆனால் என்ன
தோனி தன் மீது வைத்திருக்கும் இந்த அதீத நம்பிக்கை கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது. தான் சரியாக பேட்டிங் செய்யவில்லை என்றதும் தினேஷ் கார்த்திக் கொல்கத்தா அணியில் தனது பேட்டிங் ஆர்டரை மாற்றினார். அதேபோல் தோனி பேட்டிங் ஆர்டரை மாற்ற வேண்டும். ஆனால் தோனி தன் மீது இருக்கும் அதீத நம்பிக்கை காரணமாக இப்படி பேட்டிங் ஆர்டரை மாற்றாமல் இருப்பது தவறு என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications