எவ்வளவு முக்கியம் தெரியுமா?.. ஜாதவை வெளியே அனுப்பிய தோனி.. அதிரடியாக சொன்ன காரணம்.. மாஸ் பேச்சு
துபாய்: பெங்களூருக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணியில் இருந்து இன்று கேதார் ஜாதவ் நீக்கப்பட்டுள்ளார்.
பெங்களூர் மற்றும் சென்னைக்கு இடையிலான ஐபிஎல் போட்டி இன்று துபாயில் நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இந்த போட்டியிலும் இதனால் சேஸிங் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு சிஎஸ்கே தள்ளப்பட்டுள்ளது. இன்று ஆடும் பெங்களூர் அணியில் கிறிஸ் மோரிஸ் களமிறங்குகிறார்.

நீக்கம்
இந்த நிலையில் சிஎஸ்கே அணியில் இருந்து இன்று நினைத்தபடி கேதார் ஜாதவ் நீக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக தற்போது அணிக்குள் தமிழக வீரர் என் ஜெகதீசன் இணைந்துள்ளார். பல நாட்களாக சிஎஸ்கேவில் எதிர்பார்க்கப்பட்ட மாற்றமா இன்று அணிக்குள் செய்யப்பட்டுள்ளது. கேதார் ஜாதவிற்கு எதிராக விமர்சனங்கள் வைக்கப்பட்ட நிலையில் அவர் நீக்கப்பட்டுள்ளார்.

குழப்பம்
இதனால் சிஎஸ்கே அணிக்குள் மிடில் ஆர்டர் குழப்பங்கள் தீரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெகதீசனை அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்த நிலையில் தற்போது தோனி அந்த கோரிக்கையை நிறைவேற்றி உள்ளார். இந்த நிலையில் ஜாதவை நீக்கியது ஏன் என்றும் தோனி தனது பேச்சில் இன்று வெளிப்படையாக குறிப்பிட்டார்.

பேச்சு
தோனி தனது பேச்சில், பொதுவாக ஒரு அணிக்குள் வேறு அணியை சேர்ந்த வீரர்கள் வர மாட்டார்கள். ஒரே அணியோடு இருப்பதைதான் பெரும்பாலான அணிகள் விரும்பும். வெளி ஆட்கள் வருவதை பெரும்பாலும் அணிகள் விரும்பாது. ஒரே அணியாக இருப்பதுதான் முக்கியமான விஷயம்.

முக்கியம்
நாங்கள் புள்ளிகளை பெற வேண்டும். இன்று நடக்கும் போட்டி எங்களுக்கு முக்கியம். நாங்கள் சில தவறுகளை செய்து இருக்கிறோம். போட்டியில் கவனம் செலுத்த வேண்டும். நான் வலை பயிற்சியில் நன்றாக ஆடினேன். அதை ஆட்டத்தில் காட்ட வேண்டும். அதை செய்வேன் என்று நம்புகிறேன் என்று தோனி குறிப்பிட்டுள்ளார்.

என்ன சொன்னார்
தோனி தனது பேச்சில் நாங்கள் புள்ளிகளை பெற வேண்டும். இன்று நடக்கும் போட்டி எங்களுக்கு முக்கியம் என்று குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாகவே தோனி சீரியசாக இறங்கி இந்த முடிவை எடுத்துள்ளார் என்று கூறுகிறார்கள். அதாவது அணியில் இனியும் நட்பு பார்க்காமல் ஜாதவை நீக்கி உள்ளார் என்று கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications