Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜாதவிற்கு பை பை.. இன்னொரு வீரருக்கும் நோ சொன்ன தோனி.. சிஎஸ்கேவில் இன்று பெரிய மாற்றம்.. பின்னணி!

துபாய்: பெங்களூர் அணிக்கு எதிராக களமிறங்கும் சிஎஸ்கே அணியில் இன்று இடம்பெறப்போகும் வீரர்களின் விவரங்கள் வெளியாகி உள்ளது.

ஐபிஎல் தொடரில் இன்று மிக முக்கியமான நாள். மிகவும் வலுவான பெங்களூர் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையில் இன்று போட்டி நடக்கிறது. இந்த ஐபிஎல் சீசனில் பெங்களூர் அணி மிகவும் வலிமையான அணியாக உருவெடுத்து உள்ளது.

எல்லா சீசன்களில் மோசமாக சொதப்பி வரும் பெங்களூர் அணி இந்த சீசனில் நல்ல டீமுடன் களமிறங்கி உள்ளது. ஆரோன் பின்ச், டி வில்லியர்ஸ், கோலி, தேவ்தத் படிக்கல், சைனி என்று இந்த முறை பெங்களூர் அணி மிகவும் வலிமையான அணியாக உள்ளது.

எப்படி

எப்படி

இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 3 போட்டிகளில் பெங்களூர் வென்றுள்ளது. சிஎஸ்கே மொத்தம் 6 போட்டிகளில் 2 போட்டியில்தான் வென்றுள்ளது. இந்த நிலையில் வலிமையான பெங்களூர் அணியை இன்று சிஎஸ்கே எதிர்கொள்கிறது. எப்போதும் பெங்களூர், சென்னை இடையிலான போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும். இந்த நிலையில் சிஎஸ்கே தொடர் தோல்விகளுக்கு இடையில் இன்று பெங்களூரை சந்திக்கிறது.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

இதனால் இன்று நடக்கும் போட்டி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இரண்டு அணிகளுமே இன்று நடக்கும் போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த நிலையில் பெங்களூருக்கு எதிராக இன்று துபாயில் களமிறங்கும் சிஎஸ்கே அணி குறித்த விவரங்கள் வெளியாகி இருக்கிறது. சிஎஸ்கே அணியில் முக்கியமான ஒரு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

என்ன மாற்றம்

என்ன மாற்றம்

அதன்படி இன்று சிஎஸ்கே அணியில் கேதார் ஜாதவ் நீக்கப்பட்டுள்ளார். கேதார் ஜாதவ் இந்த சீசனில் மிக மோசமாக பேட்டிங் செய்து வருகிறார். அதேபோல் சரியாக பீல்டிக்கும் செய்வது இல்லை. கடந்த 4 போட்டிகளில் சிஎஸ்கே அணியின் தோல்விக்கும் கேதார் ஜாதவ் முக்கியமான காரணமாக இருந்தார். இதனால் இவரை நீக்க வேண்டும் என்று கடுமையான அழுத்தம் வைக்கப்பட்டு வருகிறது.

நீக்கம்

நீக்கம்

இந்த தொடர் அழுத்தங்கள் காரணமாக இன்று இவர் நீக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக தமிழக வீரர் என் ஜெகதீசன் அணிக்குள் வந்துள்ளார். வலது கை பேட்ஸ்மேனான இவர் டிஎன்பிஎல் போட்டியில் திண்டுக்கல் அணிக்காக விளையாடினார்.

வேறு யார்

வேறு யார்

அதேபோல் இன்றும் அணிக்குள் இன்னொரு முக்கியமான வீரரான பியூஸ் சாவ்லாவிற்கு வாய்ப்பு வழங்கப்படாது என்று கூறுகிறார்கள். கடந்த போட்டியில் சாவ்லாவிற்கு பதிலாக களமிறங்கிய கரன் சர்மா மிகவும் சிறப்பாக பந்து வீசினார்.4 ஓவரில் வெறும் 25 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அதிலும் இரண்டு முக்கியமான விக்கெட்டுகளை எடுத்தார்.

இன்றும்

இன்றும்

ஆனால் பியூஸ் சாவ்லா அதிக விக்கெட்டுகளை எடுத்தாலும் ரன்களை வாரி வழங்கினார். கரன் சர்மா அப்படி கிடையாது. இதனால் இன்று நடக்கும் போட்டியிலும் கரன் சர்மா ஆடுவார்.

Story first published: Saturday, October 10, 2020, 19:15 [IST]
Other articles published on Oct 10, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+