Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உங்க பிளானுக்கு எல்லாம் ஒத்துழைக்க முடியாது.. சிஎஸ்கே குறி வைத்த 2 பேருக்கும் செக்.. கதை க்ளோஸ்!

துபாய்: 2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே குறி வைத்து இருந்த முக்கியமான இரண்டு வீரர்கள் டிரான்ஸ்பர் செய்யப்பட மாட்டார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஐபிஎல் 2020 தொடரின் முதல் பாதி போட்டிகள் முடிந்துள்ளது. அனைத்து அணிகளும் 7 போட்டிகளில் இதுவரை விளையாடி உள்ளது. இதன் காரணமாக இனி வரும் நாட்களில் வீரர்களை டிரான்ஸ்பர் செய்ய முடியும்.

டிரான்ஸ்பர் என்றால் ஒரு அணியில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் வீரர்களை இன்னொரு அணிக்கு அனுப்ப முடியும். ஒரு அணியில் பெஞ்சில் இருக்கும் வீரர்களை பிற அணிகள் காசு கொடுத்து வாங்க முடியும்.

வாங்கலாம்

வாங்கலாம்

மொத்தம் ஒரு அணியில் 2 போட்டி அல்லது அதற்கும் குறைவான போட்டிகளில் விளையாடியவர்கள் இப்படி டிரான்ஸ்பர் மூலம் மாற்றம் செய்யப்படுவார்கள். இதற்கான பணிகள் தற்போது தொடங்கி உள்ளது. சிஎஸ்கே அணி தங்கள் அணியில் இருக்கும் மிடில் ஆர்டர் பிரச்சனையை இந்த டிரான்ஸ்பர் மூலம் சரி செய்யும் என்று தகவல்கள் வந்தது.

மிடில் ஆர்டர்

மிடில் ஆர்டர்

சிஎஸ்கேவின் மிடில் ஆர்டர் மற்றும் ஓப்பனிங்கில் சில பிரச்சனைகள் உள்ளது. இதை சரி செய்வதற்காக சிஎஸ்கே புதிய வீரர்களை ஏலம் மூலம் எடுக்கும் என்று தகவல்கள் வந்தது. இதற்காக இரண்டு வீரர்களின் பெயர்களும் கூட அடிப்பட்டது. ஒருவர் டெல்லி அணியில் வாய்ப்பு இன்றி கஷ்டப்படும் ரஹானே. இன்னொருவர் மும்பை அணியில் இருக்கும் கிறிஸ் லைன்.

என்ன

என்ன

டெல்லி அணியில் இருக்கும் ரஹானே இந்த சீசனில் இதுவரை ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடி உள்ளார். அதேபோல் மும்பை அணியில் இருக்கும் லைன் இதுவரை வாய்ப்பு கிடைக்காமல் கஷ்டப்பட்டு வருகிறார். இவர்கள் இருவரையும் தங்கள் அணிக்குள் எடுக்கலாம் என்று சிஎஸ்கே பிளான் போட்டு இருந்தது. மிடில் ஆர்டர், ஓப்பனிங் பிரச்னையை தீர்க்க சிஎஸ்கே இந்த திட்டத்தை வகுத்து இருந்தது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் டெல்லி அணியில் தற்போதுதான் பண்ட் காயம் காரணமாக விளையாட முடியாமல் போய் உள்ளது. இதனால் அடுத்த சில போட்டிகளில் இவர் விளையாட வாய்ப்பு இல்லை. இதனால் அந்த இடத்தில் ரஹானேதான் ஆடுவார் என்று உறுதியாகி உள்ளது. இதனால் இவரை டிரான்ஸ்பர் செய்ய முடியாது என்று டெல்லி அணி நிர்வாகம் அறிவித்துவிட்டது.

லைன்

லைன்

அதேபோல் மும்பை அணியும் கிறிஸ் லைனை கொடுக்க முடியாது என்று அறிவித்துவிட்டது. மும்பை அணியில் மாற்று ஓப்பனர்கள் யாரும் இல்லை. இதனால் லைனை கொடுக்க முடியாது என்று மும்பையும் அறிவித்துவிட்டதாம். இதனால் இந்த இரண்டு வீரர்களும் சிஎஸ்கே உட்பட எந்த அணிக்கும் இந்த முறை டிரான்ஸ்பர் செய்யப்பட மாட்டார்கள்.

காலி

காலி

இந்த இரண்டு வீரர்களை அணிக்குள் கொண்டு வந்து அணியை பலப்படுத்தலாம் என்று சிஎஸ்கே திட்டமிட்டதாக தகவல்கள் வந்தது. ஆனால் தற்போது இரண்டு பேருமே சிஎஸ்கேவிற்கு மாற முடியாது. இவர்கள் இருவரும் கூட தாங்கள் இருக்கும் டெல்லி, மும்பை அணியை விட்டு செல்ல மறுத்துவிட்டனர் என்றும் கூறப்படுகிறது.

விருப்பம் என்ன

விருப்பம் என்ன

இதே அணியில் இருக்கவே இவர்கள் இருவரும் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதனால் சிஎஸ்கே எடுத்த டிரான்ஸ்பர் அஸ்திரமும் தற்போது காலியாகிவிட்டது என்றுதான் கூற வேண்டும். அதே சமயம் சிஎஸ்கேவும் இவர்களை முழுக்க முழுக்க நம்பி இல்லை. இன்னும் சில வீரர்களை சிஎஸ்கே மனதில் வைத்துள்ளது. அவர்களை டிரான்ஸ்பர் மூலம் சிஎஸ்கே பெற வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

Story first published: Wednesday, October 14, 2020, 13:54 [IST]
Other articles published on Oct 14, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+