Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவரை பார்த்தாலே அச்சம்தான்.. தோனி பற்றி பேச மறுக்கும் வர்ணனையாளர்கள்.. வெளுத்து வாங்கிய ஸ்ரீகாந்த்!

துபாய்: சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி குறித்து விமர்சனம் செய்ய வர்ணனையாளர்கள் அஞ்சுகிறார்கள் என்று புகார் வைக்கப்பட்டு வருகிறது.

சிஎஸ்கே அணியின் தொடர் தோல்விகள் காரணமாக கேப்டன் தோனி மீது இணையத்தில் கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. இதுவரை 10 போட்டிகளில் ஆடி உள்ள சிஎஸ்கே வெறும் 3 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது.

இதனால் சிஎஸ்கே அணி பெரும்பாலும் பிளே ஆப் செல்ல வாய்ப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. சிஎஸ்கேவின் தொடர் தோல்விக்கு அணியின் கேப்டன் தோனிதான் காரணம் என்று புகார் வைக்கப்பட்டுள்ளது.

புகார் என்ன

புகார் என்ன

தோனியின் கேப்டன்சி, பவுலிங் ரொட்டேஷன், பேட்டிங் ஆர்டர் என்று எதுவும் சரியில்லை. அதேபோல் இன்னொரு பக்கம் தோனியின் தனிப்பட்ட பேட்டிங்கும் சரியாக இல்லை. தனிப்பட்ட வகையில் தோனியின் பேட்டிங் மிக மோசமாக சொதப்பி வருகிறது.

விமர்சனம்

விமர்சனம்

தோனியை போல வேறு அணியை சேர்ந்த வீரர்கள், மூத்த வீரர்கள் இப்படி பேட்டிங் செய்து இருந்தால் அவர்கள் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு இருப்பார்கள். முக்கியமாக வர்ணனையாளர்கள் அந்த பேட்ஸ்மேன்களை கடுமையாக விமர்சனம் செய்து இருப்பார்கள். முரளி விஜய், ஸ்மித் தொடங்கி கோலியின் பேட்டிங் சொதப்பல் வரை வர்ணனையாளர்கள் பலரை விமர்சனம் செய்து உள்ளனர்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் தோனியை மட்டும் வர்ணனையாளர்கள் போட்டியின் போது விமர்சனம் செய்வதே இல்லை. ஒரு கேட்ச் பிடித்தால் கூட அதை பெரிய விஷயமாக பேசும் இவர்கள், தோனி மோசமாக பேட்டிங் செய்தால் அதை விமர்சனம் செய்வது இல்லை. தோனியின் டெஸ்ட் இன்னிங்க்ஸை விமர்சனம் செய்வதே இல்லை. தோனியை பற்றி வாய் திறக்கவே பல வர்ணனையாளர்கள் அஞ்சி நடுங்குகிறார்கள்.

சர்வதேச போட்டி

சர்வதேச போட்டி

சர்வதேச போட்டிகளில் எல்லாம் தோனியை வர்ணனையாளர்கள் விமர்சனம் செய்துள்ளனர். ஆனால் ஐபிஎல் போட்டிகளில் மட்டும் தோனியை யாருமே விமர்சனம் செய்வது இல்லை. இதை பலரும் இணையத்தில் எடுத்துக்காட்டி குறிப்பிட்டு இருந்தனர். தோனி என்றால் அவ்வளவு பயமா? ஏன் அவரை பற்றி வர்ணனையாளர்கள் யாருமே பேசுவது இல்லை என்று பலர் இணையத்தில் கேள்வி எழுப்பி இருந்தனர்.

துவைத்து எடுத்துவிட்டார்

துவைத்து எடுத்துவிட்டார்

தோனியை பற்றி பேசுவதற்கு இப்படி ஐபிஎல் வர்ணனையாளர்கள் பலர் அஞ்சிய போது நேற்று முன்னாள் கிரிக்கெட் வீரர் கிரிஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தோனியை கடுமையாக விமர்சனம் செய்தார். அதில், தோனியின் அணி தேர்வு சரியாக இல்லை. இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது இல்லை. தோனி சொல்லும் விஷயங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. தோனி கதை விடுகிறார் என்றார்.

தவறு

தவறு

மேலும், தோனி ஜெகதீசனுக்கு வாய்ப்பு கொடுக்காமல், அவரிடம் ஸ்பார்க் இல்லை என்று கூறுகிறார். ஜாதவிடம் என்ன ஸ்பார்க்கை பார்த்தார் தோனி என்று ஸ்ரீகாந்த் கடுமையாக கேள்விகளை எழுப்பி உள்ளார். தோனி குறித்து மற்ற வர்ணனையாளர்கள் பேச அஞ்சிய நிலையில் ஸ்ரீகாந்த் மட்டும் தைரியமாக தோனியை விமர்சனம் செய்துள்ளார். ஸ்ரீகாந்த் போல மற்ற வர்ணனையாளார்களும் நேர்மையான விமர்சனத்தை வைக்க வேண்டும் என்று இணையத்தில் கோரிக்கைகள் எழ தொடங்கி உள்ளது.

Story first published: Tuesday, October 20, 2020, 16:43 [IST]
Other articles published on Oct 20, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+