For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பயிற்சியிலேயே என்னா அடி.. உண்மையில் இவர்தான் ரெய்னாவிற்கு மாற்றா?.. சிஎஸ்கேவில் விரைவில் டிவிஸ்ட்!

சென்னை: சென்னை அணியில் ரெய்னாவின் இடத்தை யார் நிரப்ப போவது என்று கேள்வி நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இதற்கான பதில் விரைவில் கிடைத்துவிடும் என்கிறார்கள்.

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. பெரும்பாலும் இன்றைய போட்டியில் சென்னை அணியில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்று கூறுகிறார்கள்.

அதிகபட்சம் ஓப்பனிங் வீரரை மாற்ற வாய்ப்புள்ளது. ஆனால் அணியில் மொத்தமாக மாற்றம் நடக்க வாய்ப்பு இல்லை என்று கூறுகிறார்கள்.

தோனி ஸ்டைல்

தோனி ஸ்டைல்

தோனி பொதுவாக ஒரே போட்டியில் அணியில் அதிரடி மாற்றங்களை செய்ய மாட்டார். ஒரு போட்டியில் ஒரு வீரர் சரியாக விளையாடவில்லை என்றாலும் கூட தோனி அவர்களுக்கு அடுத்த போட்டியில் வாய்ப்பு வழங்குவார். இந்த நிலையில்தான் சென்னை அணியில் விரைவில் புதிய மாற்றம் ஒன்று வரும். இன்றைய போட்டியில் இல்லை என்றாலும் இன்னும் இரண்டு மூன்று போட்டிகளில் பெரிய மாற்றம் வரும் என்கிறார்கள்.

தோனி இடம்

தோனி இடம்

அதன்படி சென்னை அணியில் விரைவில் ரெய்னாவின் இடத்தை இளம் வீரர் ரூத்துராஜ் கெய்காவாட் நிரப்புவார் என்று உறுதியாக கூறுகிறார்கள். கொரோனாவில் இருந்து இவர் மீண்டும் சென்னை அணியின் பயிற்சியில் இணைந்துள்ளார். சென்னை அணியில் இளம் வீரர் ரூத்துராஜ் கெய்காவாட் பயிற்சி ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி வருகிறார்

செம ஆட்டம்

செம ஆட்டம்

அதிலும் நேற்று மாலையில் நடந்த பயிற்சி ரூத்துராஜ் கெய்காவாட் மிகவும் சிறப்பாக ஆடினார் என்று கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோக்கள் கூட இணையத்தில் வெளியாகி உள்ளது. பயிற்சியில் மற்ற வீரர்களை விட துடிப்பாக இருக்கிறார். கடினமான பந்துகளை கூட எளிதாக எதிர்கொள்கிறார். இவர் மொத்தமாக தோனி, பிளமிங் இருவரையும் கவர்ந்து உள்ளார்.

வாய்ப்பு உள்ளது

வாய்ப்பு உள்ளது

அதனால் இவரை அணியில் எடுத்தால் பெரிய அளவில் சிஎஸ்கேவிற்கு அது பலம் கொடுக்கும் என்று அணியின் பயிற்சியாளர்கள் நினைக்கிறார்கள். இன்னும் சில நாட்கள் அவர் பயிற்சியில் ஆடுவதை பார்த்துவிட்டு வாய்ப்பு கொடுப்பார். பிளே ஆப் போட்டிக்கு முன் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும்.அதில் சரியாக விளையாடினால் அடுத்தடுத்து வாய்ப்பு வழங்கப்படும் என்கிறார்கள்.

திருப்பம் எப்படி

திருப்பம் எப்படி

இந்த ஐபிஎல் தொடரில் இளம் வீரர்கள் சிறப்பாக ஆடி வருகிறார்கள். நேற்று பெங்களூர் அணியில் படிக்கல் நன்றாக ஆடினார். அதேபோல் பஞ்சாப் அணியில் ரவி பிசோனோய் சிறப்பாக ஆடினார். இதனால் சென்னை அணியும் 'எங்க கிட்டயும் சீப்பு' இருக்கு என்று இளம் வீரர் ரூத்துராஜ் கெய்காவாட்டை இறக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள் .

Story first published: Tuesday, September 22, 2020, 22:52 [IST]
Other articles published on Sep 22, 2020
English summary
IPL 2020: Chennai Super Kings almost found a surprise youngster as a replacement for Raina.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+