Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவர்களால் முடிகிறது.. உங்களால் முடியாதா?.. தோனிக்கு பறக்கும் வார்னிங்.. அடுத்தடுத்த திருப்பங்கள்!

துபாய்: ஐபிஎல் போட்டிகளில் தொடர் தோல்வி காரணமாக சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு கடுமையான அழுத்தங்கள் வைக்கப்பட்டு வருகிறது.

ஐபிஎல் தொடர் இப்போதே அடுத்தடுத்து திருப்பங்களுடன் களைகட்ட தொடங்கி உள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு மாஸ் திருப்பங்களுடன் ஐபிஎல் தொடரின் ஆரம்பமே சிறப்பாக அமைந்துள்ளது.

எப்போதும் ஐபிஎல் தொடர் என்று வந்தால் சிஎஸ்கே போட்டிகள் மாஸ்ஸாக இருக்கும். கடைசி வரை சிஎஸ்கே போட்டிகளில் எப்போதும் ஒரு திரில் இருக்கும். பெங்களூர், ராஜஸ்தான் ஆடும் போட்டிகள் எல்லாம் டிவியை ஆப் செய்துவிட்டு தூங்கும் அளவுக்கே கடந்த சீசன்களில் இருந்துள்ளது.

நிலைமை

நிலைமை

ஆனால் இந்த ஐபிஎல் தொடரில் நிலைமை அப்படியே தலைகீழாக மாறியுள்ளது. இந்த முறை ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி போன்ற அணிகள்தான் ஐபிஎல் போட்டியில் அனலை கிளப்பி உள்ளது. ஐபிஎல் தொடர் முழுக்க பெங்களூர், பஞ்சாப், டெல்லி, ராஜஸ்தான் அணிகள் விளையாடும் போட்டிகள்தான் மிகவும் பரபரப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

சென்னை போட்டிகள்

சென்னை போட்டிகள்

மாறாக சென்னை ஆடும் போட்டிகள் டெஸ்ட் மேட்ச் போல மிக மிக மெதுவாக செல்கிறது. காமெண்டரி பாக்சில் இருப்பவர்களே மேட்ச் எப்ப முடியும், எப்போது வீட்டிற்கு போய் தூங்கலாம் என்று நினைக்கும் அளவிற்கு சென்னையின் போட்டிகள் டல் அடிக்கிறது. இந்த தொடரில் சென்னையிடம் இருந்த மேஜிக் காணாமல் போய் உள்ளது.

போராட்டம்

போராட்டம்

சென்னையின் வெற்றிக்கு எப்போதும் அதன் போராட்ட குணம்தான் காரணமாக இருக்கும். ஆனால் இந்த முறை சென்னை போராடாமல் தோல்வியை எளிதாக மாலை போல வாங்கி மாட்டிக் கொள்கிறது. இதனால் சென்னை ஆடும் போட்டிகளை காணும் ரசிகர்களின் எண்ணிக்கையும் குறைய தொடங்கி உள்ளது. சென்னையின் கடந்த இரண்டு போட்டிகளை இணையத்தில் பார்த்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்துள்ளது.

ஆனால் ஏற்றம்

ஆனால் ஏற்றம்

ஆனால் இன்னொரு பக்கம் ராஜஸ்தான் - பஞ்சாப் போட்டி, பஞ்சாப் - டெல்லி போட்டி, நேற்று நடந்த மும்பை பெங்களூர் போட்டியை அதிகமான மக்கள் இணையத்தில் பார்த்து உள்ளனர். சிஎஸ்கே கொஞ்சம் கொஞ்சமாக தனது மதிப்பை இழக்க தொடங்கி உள்ளது தெளிவாகிறது. இதனால் தற்போது சிஎஸ்கே ரசிகர்கள் தோனியிடம் இணையத்தில் கடுமையான கேள்விகளை வைக்க தொடங்கி உள்ளனர் .

முடியாதா?

முடியாதா?

சின்ன சின்ன அணிகள் எல்லாம் ஐபிஎல் போட்டியில் தூள் கிளப்புகிறது. பெங்களூர் போன்று தொடர் தோல்விகளை சந்தித்த அணிகள் எல்லாம் இந்த முறை பார்மிற்கு வந்துள்ளது. ராஜஸ்தான் போன்ற பெரிய வீரர்கள் இல்லாத அணிகள் இருக்கிற வீரர்களை வைத்தே மாயம் நிகழ்த்துகிறது. அப்படி இருக்கையில் உங்களால் ஏன் சிஎஸ்கேவை வெற்றிபெற வைக்க முடியவில்லை என்று தோனிக்கு பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

.

அறிவுரை

அறிவுரை

இப்படியே சோதனை முயற்சிகளை செய்து வந்தால் இந்த முறை பிளே ஆப்பிற்கு கூட செல்ல முடியாது. உடனே தோனி அணியில் மாற்றங்களை செய்ய வேண்டும். இல்லையென்றால் மொத்தமாக பிளே ஆப் கனவை தோனி மறக்க வேண்டியதுதான் என்று தோனிக்கு ரசிகர்கள் வார்னிங் கொடுத்துள்ளனர். இப்போதே சிஎஸ்கே டீம் ரசிகர்களை இழந்துவிட்டது. இனியும் இழக்க கூடாது என்றால் சிஎஸ்கே உடனே தனது தவறுகளை திருத்த வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.

நீக்க வேண்டும்

நீக்க வேண்டும்

முக்கியமாக அணியில் இருக்கும் முரளி விஜய் போன்ற டெஸ்ட் வீரர்களை நீக்க வேண்டும். பின் ரன் தேவைப்படும் நேரங்களில் டெஸ்ட் ஆட்டம் ஆடுவதை தோனி கைவிட வேண்டும். சஞ்சு சாம்சன், திவாதியா, இஷான் கிஷான் போன்ற இளைஞர்கள் உயிரை கொடுத்து ஆடுகிறார்கள். சிஎஸ்கேவும் வெற்றிபெற வேண்டும் என்ற ஆர்வத்துடன் விளையாட வேண்டும், என்று அறிவுரை செய்ய தொடங்கி உள்ளனர்

Story first published: Tuesday, September 29, 2020, 11:47 [IST]
Other articles published on Sep 29, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+