
எப்படி நடக்கும்
ஐபிஎல் டிரான்ஸ்பர் எப்போதும் தொடரின் மத்தியில் நடக்கும். எல்லா அணிகளும் 7 போட்டிகளில் விளையாடிய பின் இந்த டிரான்ஸ்பர் பணிகள் நடக்கும். ஒரு அணியில் இருக்கும் வீரர் அந்த அணியில் 2 அல்லது அதற்கும் குறைவான போட்டிகளில் விளையாடி இருந்தால் அவரை டிரான்ஸ்பர் செய்ய முடியும்.

காரணம் என்ன
இதன் மூலம் ஒரு அணி தங்களது பலவீனத்தை சரி செய்ய முடியும். அணியின் ஓப்பனிங் சரி இல்லை என்றால் அதற்கு ஏற்ற வீரர்களை வாங்கி ஓப்பனிங்கை சரி செய்ய முடியும். அணிகள் தங்களின் தவறுகளை சரி செய்வதற்காகவே இந்த டிரான்ஸ்பர் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை இல்லை
இந்த நிலையில் டிரான்ஸ்பர் வாய்ப்பு வழங்கப்பட்டு இரண்டு நாட்கள் ஆகியுள்ள நிலையில் இதுவரை எந்த அணியும் டிரான்ஸ்பர் செய்ய விருப்பம் தெரிவிக்கவில்லை. தங்கள் அணியில் இருக்கும் வீரர்களை டிரான்ஸ்பர் செய்யவோ, வேறு அணியில் இருக்கும் வீரர்களை வாங்கவே எந்த அணியும் விருப்பம் தெரிவிக்கவில்லை.இனி வரும் நாட்களில் அணிகள் டிரான்ஸ்பர் குறித்த முடிவை எடுக்க வாய்ப்புள்ளது.

சிஎஸ்கே முடிவு
இன்னொரு பக்கம் மொத்தமாக டிரான்ஸ்பர் முறையில் கலந்து கொள்ளாமல் இருக்க சிஎஸ்கே முடிவு செய்துள்ளது. அதாவது எந்த வீரரையும் நீக்கவோ, அணியில் சேர்க்கவோ வேண்டாம் என்று சிஎஸ்கே முடிவு செய்துள்ளது. இந்த முறை சிஎஸ்கேவில் இருந்து எந்த வீரரும் நீக்கப்பட மாட்டார். அதேபோல் சிஎஸ்கேவில் எந்த வீரரும் சேர்க்கப்பட மாட்டார் என்பது உறுதியாகி உள்ளது .

மும்பை அணியின் முடிவு
மும்பை அணியும் இதேபோல் தங்கள் அணியில் இருந்து யாரையும் நீக்க வேண்டாம், எடுக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளது. மும்பையில் இருந்து கிறிஸ் லைன் நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வந்தது. இந்த நிலையில் அவரை நீக்க முடியாது என்று தகவல் வெளியாகி உள்ளது.மற்ற அணிகள் இந்த டிரான்ஸ்பர் வாய்ப்பை பயன்படுத்துமா என்று கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











