டாப் 4 அணிகள்.. சிஎஸ்கே இவ்வளவு கீழ போயிடுச்சா.. ஐபிஎல் பாயிண்ட் டேபிளில் செம சர்ப்ரைஸ்.. திருப்பம்!
துபாய்: ஐபிஎல் தொடரின் இந்த சீசனில் அடுத்தடுத்த திருப்பங்கள் நடந்து வருகிறது. தற்போது வெளியாகி இருக்கும் ஐபிஎல் டேபிள் சிஎஸ்கே ரசிகர்களுக்கு பெரிய அளவில் அதிர்ச்சியை அளித்துள்ளது.
ஐபிஎல் தொடர் தற்போது வேகம் எடுத்து இருக்கிறது. 2020 ஐபிஎல் தொடரில் வெளிநாட்டு வீரர்களை விட இந்தியாவை சேர்ந்த டொமஸ்டிக் வீரர்கள்தான் மிகவும் சிறப்பாக ஆடி வருகிறார்கள்.
சஞ்சு சாம்சங், இஷான் கிஷான், ராகுல் திவாதியா, சுப்மான் கில், ஷ்ரேயாஸ் ஐயர், மயங்க் அகர்வால், தேவதத் படிக்கல் என்று இந்தியாவில் ரஞ்சி, சையது முஷ்டாக் கோப்பையில் கலக்கும் வீரர்கள்தான் ஐபிஎல் தொடரிலும் கலக்கி வருகிறார்கள்.

அணிகள் எப்படி
அதேபோல் ஐபிஎல் தொடரில் இந்த டொமஸ்டிக் வீரர்களை கொண்ட அணிகள்தான் மாஸ் காட்டி வருகிறது. பெங்களூர், ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி போன்ற அணிகள்தான் ஐபிஎல் தொடரில் இந்த முறை மாஸ் காட்டி வருகிறது. இதில் ஏதாவது ஒரு அணி இந்த முறை கோப்பை வென்றாலும் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

செம மாற்றம்
இந்த நிலையில் தற்போது வெளியாகி உள்ள ஐபிஎல் டேபிள் நிறைய சர்ப்ரைஸ் திருப்பங்களை கொண்டுள்ளது. இந்த ஐபிஎல் டேபிளில் முதல் இடத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி உள்ளது. 2 போட்டிகள் விளையாடி அந்த அணி இரண்டிலும் வென்றுள்ளது. இரண்டாவது இடத்தில் ராஜஸ்தான் உள்ளது. அந்த அணியும் இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வென்றுள்ளது.

எப்படி
ரன் ரேட் அடிப்படையில் ராஜஸ்தான் இரண்டாம் வகிக்கிறது. அதற்கு அடுத்த இடத்தில் பெங்களூர் இடம்பிடித்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. 3 போட்டிகள் விளையாடி அதில் இரண்டில் வென்று, ஒன்றில் தோல்வி அடைந்து பெங்களூர் மூன்றாம் இடத்தில் உள்ளது. பஞ்சாப் அணி 3ல் விளையாடி 2ல் தோல்வி அடைந்து ரன் ரேட் (+1.498) அடிப்படையில் நான்காம் இடத்தில் உள்ளது.

மும்பை
மும்பையும் இதேபோல் மூன்று போட்டிகளில் 2ல் தோல்வி அடைந்து +0.654 ரன் ரேட் உடன் ஐந்தாம் இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணி 2 போட்டிகளில் ஒன்றில் தோல்வி அடைந்து -0.767 ரன் ரேட் உடன் ஆறாம் இடத்தில் உள்ளது. ஆனால் இங்குதான் சென்னை எல்லோருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.

சென்னை எப்படி
சென்னை அணி மூன்று போட்டிகளில் 2ல் தோல்வி அடைந்து உள்ளது. ஆனால் சென்னை அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த காரணத்தால் -0.840 ரன் ரேட் உடன் 7ம் இடத்தில் உள்ளது. ஹைதராபாத் அணி 2 போட்டிகளில் 2ல் தோல்வி அடைந்து -0.730 ரன் ரேட் உடன் கடைசி இடத்தில் உள்ளது.

கடந்த சீசன்
கடந்த 2 ஐபிஎல் சீசனில் சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள்தான் டாப் இடங்களில் இருந்தது. அசைக்க முடியாத வலிமையுடன் இரண்டு அணிகளும் இருந்தது. ஆனால் இந்த முறை இரண்டு அணிகளும் கடைசி இடத்திற்கு போட்டி போட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications