Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"சென்னை என்றாலே இப்படித்தான்".. போட்டிக்கு முன் வந்த பிளமிங்.. டு பிளசிஸிடம் சொன்னது என்ன? - பின்னணி

துபாய்: நேற்று பஞ்சாப்பிற்கு எதிரான ஐபிஎல் போட்டிக்கு முன் சிஎஸ்கே அணிக்குள் என்ன நடந்தது என்று டு பிளசிஸ் பேட்டி அளித்துள்ளார்.

பஞ்சாப்பிற்கு எதிரான ஐபிஎல் போட்டியை சிஎஸ்கே நேற்று தூசு தட்டுவது போல தட்டி வெற்றிபெற்றுள்ளது. நேற்று முதலில் ஆடிய பஞ்சாப் 4 விக்கெட்டிற்கு 178 ரன்கள் எடுத்தது. அதன்பின் ஆடிய சிஎஸ்கே ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் 181 ரன்கள் எடுத்து அதிரடி வெற்றி பெற்றது.

ஒரு விக்கெட் கூட இழக்காமல் வென்று 2020 ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே புதிய சாதனை படைத்து உள்ளது.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

இந்த போட்டியில் வெற்றிபெற்றது குறித்து டு பிளசிஸ் பேட்டி அளித்துள்ளார். அதில், முதலில் சில விஷயங்கள் எங்களுக்கு சாதகமாக நடக்கவில்லை. கடைசிவரை ஆட வேண்டும், கடைசி வரை பேட்டிங் செய்ய வேண்டும் என்பதே என்னுடைய நோக்கமாக இருந்தது. 30 அல்லது 40 ரன்கள் அடித்துவிட்டு அவுட் ஆவதில் எனக்கு விருப்பம் இல்லை.

பேட்டி

பேட்டி

இன்று பார்ட்னர்ஷிப் அமைத்து ஆட வேண்டும் என்று நினைத்தேன். அதேபோல் எல்லாம் கை கூடி வந்தது. வாட்சன் இப்படி அதிரடியாக ஆடி ரன் எடுத்தது சந்தோசம் அளிக்கிறது. எங்கள் அணியில் இருக்கும் சிறப்பான வீரர் வாட்சன். அவர் மிகப்பெரிய பிளேயர். கடந்த போட்டியில் நாங்கள் நன்றாக பவுலிங் செய்தோம்.

ஆட வேண்டும்

ஆட வேண்டும்

ஆனால் நாங்கள் சரியாக பேட்டிங் செய்யவில்லை. அதை தற்போது சரி செய்து இருக்கிறோம். வாட்சன் இன்று போட்டியை மொத்தமாக மாற்றிவிட்டார். நாங்கள் பல நாட்களாக கிரிக்கெட் விளையாடவில்லை. கொரோனா காரணமாக பலருக்கு டச் விட்டு போய்விட்டது. நாங்கள் உடனே பார்மிற்கு வர வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது நடக்காது.

பார்மிற்கு வருவார்கள்

பார்மிற்கு வருவார்கள்

பார்மிற்கு திரும்ப சில நாட்கள் ஆகும். அணியில் இருக்கும் மற்ற வீரர்களும் வரும் நாட்களில் பார்மிற்கு திரும்புவார்கள் என்று நம்புகிறேன் . போட்டிக்கு முன்பாக எங்களிடம் பிளமிங், தோனி இருவரும் நம்பிக்கையாக பேசினார்கள். எங்களிடம் வந்து நம்பிக்கை ஊட்டும் விதமாக பேசினார்கள். அவர்கள் எங்களுக்கு உறுதுணையாக இருந்தனர்.

விமர்சனங்கள் பல வந்தது

விமர்சனங்கள் பல வந்தது

விமர்சனங்களுக்கு இடையிலும் அவர்கள் எங்கள் பக்கம் இருந்தனர். சென்னை என்றாலே இப்படித்தான். சென்னை எப்போதும் தங்கள் வீரர்களை விட்டுக்கொடுக்காது. மற்ற அணிகளில் நீங்கள் இந்த குணத்தை பார்க்க முடியாது. இது வீரர்களுக்கு ஊட்டம் கொடுக்கும். அணி மேனேஜ்மெண்டிற்குதான் நன்றி சொல்ல வேண்டும்.

உறுதுணையாக நின்றார்கள்

உறுதுணையாக நின்றார்கள்

அவர்கள் எங்களுடன் உறுதுணையாக நின்றார்கள். வீரர்களின் அனுபவம் பெரிய அளவில் உதவியது. பார்க்க உங்களுக்கு இது எளிதாக இருக்கலாம். ஆனால் ஒரு அணி நிர்வாகம் இப்படி முடிவு செய்வது எளிதல்ல. வீரர்களை தோல்விக்கு பின்பும் சப்போர்ட் செய்வது எளிதல்ல. சென்னை அதை செய்துள்ளது. பிளமிங் முகத்தை பார்த்தேன், நேற்று அவர் பதற்றமாக இருந்தார்.

இப்படி இல்லை

இப்படி இல்லை

அவர் இதற்கு முன் இப்படி இருந்து பார்த்தது கிடையாது. அவர் தாடி வளர்ப்பதால் இப்படி இருக்கிறாரா என்று தெரியவில்லை. எங்களுக்கு பெரிய அழுத்தம் இருந்தது. அழுத்தம் இருந்தாலும் அணி நிர்வாகம் எங்களுக்கு ஆதரவு அளித்தது. கஷ்டமான நேரத்தில் அணி நிர்வாகம் வீரர்கள் பக்கம் நிற்பது சாதாரண விஷயம் கிடையாது. சிஎஸ்கேவிற்கு நன்றி என்று டு பிளசிஸ் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Monday, October 5, 2020, 10:17 [IST]
Other articles published on Oct 5, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+