Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஏன் இப்படி செய்கிறார்கள்?.. சிஎஸ்கே வீரர்கள் நடந்து கொண்ட விதம்.. வலுக்கும் சந்தேகம்.. பரபர சம்பவம்!

துபாய்: நேற்று பெங்களூருக்கு அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே வீரர்கள் நடந்து கொண்ட விதம் வலுவான கேள்விகளை எழுப்பி உள்ளது.

நேற்று பெங்களூர் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி துபாயில் நடைபெற்றது. இந்த போட்டியில் தொடக்கத்தில் இருந்து பெங்களூர் ஆதிக்கம் செலுத்தியது.

பெங்களூரின் பேட்டிங் தொடக்கத்தில் கொஞ்சம் மோசமாக இருந்தது. ஆனாலும் போக போக ஆட்டத்தை பெங்களூர் கட்டுக்குள் வந்தது. நேற்று முதலில் ஆடிய பெங்களூர் 20 ஓவரில் 169 ரன்கள் எடுத்தது. அதன்பின் களமிறங்கிய சென்னை வெறும் 132 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

தோல்வி

தோல்வி

பெங்களூருக்கு எதிரான இந்த போட்டியில் சிஎஸ்கே வீரர்கள் ஆடிய விதம்தான் கேள்விக்கு உள்ளாகி உள்ளது. அணியில் நேற்று ஆடிய எந்த வீரரும் வெற்றிபெற வேண்டும் என்ற எந்த ஆசையும் இன்றி ஆடினார்கள். முதல் 5 ஓவர்களில் எல்லா அணிகளும் 40-50 ரன்கள் அடிக்கும் போது நேற்று சிஎஸ்கே 30 ரன்களை கூட அடிக்க முடியாமல் திணறியது.

ஏன் இப்படி

ஏன் இப்படி

169 ரன்கள் அடிக்க வேண்டும் என்று பெரிய இலக்கு இருந்த போதும் கூட சிஎஸ்கேவின் தொடக்க வீரர்கள் சரியாக ஓப்பனிங் இறங்கி ஆடவில்லை. முதல் பத்து ஓவர்களில் 60 ரன்களை எடுக்கவே சிஎஸ்கே கடுமையாக திணறியது. அதிலும் நேற்று அம்பதி ராயுடு, என் ஜெகதீசன் ஆடிய விதம் பெரிய அளவில் கேள்விகளை எழுப்பியது. பவுண்டரி எல்லைக்கு அருகில் அடித்துவிட்டு இவர்கள் சிங்கிள் ஓடியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

பரபரப்பு

பரபரப்பு

பவுண்டரி எல்லை வரை பந்து சென்றாலும் கூட இவர்கள் இருவரும் சிங்கிள் ஓடினார்கள். இரண்டு ரன்கள் ஓட வாய்ப்பு இருந்தும் இவர்கள் களத்தில் ஜாகிங் செய்தனர். அதிலும் 10 ஓவர்களுக்கு பின் இரண்டு ரன்கள் ஓட வாய்ப்பு இருந்தும் கூட ராயுடு மிக மோசமாக சிங்கிள் மட்டுமே எடுத்தார். இவரின் இந்த செயல் சிஎஸ்கே ரசிகர்களை கோபத்திற்கு உள்ளாக்கியது.

எப்படி அவுட்

எப்படி அவுட்

இதெல்லாம் போக இன்னொரு பக்கம் நேற்று என் ஜெகதீசன் ரன் ஓட விருப்பமே இன்றி ஓடினார். இவர் மிகவும் மெதுவாக ஓடியதால்தான் நேற்று ரன் அவுட் ஆனார். தன்னை ரன் அவுட் செய்ய போகிறார்கள் என்று தெரிந்தும் கூட இவர் டைவ் செய்யவில்லை. சிஎஸ்கே வீரர்கள் இப்படி கொஞ்சம் கூட விருப்பமே இல்லாமல் வெற்றிபெறும் ஆர்வமே இல்லாமல் ஆடுவது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது.

சந்தேகம்

சந்தேகம்

வீரர்கள் இப்படி ஆர்வம் இன்றி ஆடுவதால் பலரும் சிஎஸ்கே நிர்வாகத்திடம் கேள்விகளை வைக்க தொடங்கி உள்ளனர். வீரர்கள் இப்படி ஆடுகிறார்கள் என்றால் அணிக்குள் ஏதாவது பிரச்சனை இருக்கும். ஏதாவது கருத்து வேறுபாடு, முரண்பாடுகள் இருக்கும். இதை உடனே சரி செய்ய வேண்டும் என்று சந்தேகம் எழுப்பி உள்ளனர். வீரர்கள் இடையே சரியாக உறவு இல்லாதது போல தெரிகிறது என்று சந்தேகம் எழுப்பி உள்ளனர்.

மாற்ற வேண்டும்

மாற்ற வேண்டும்

இதனால் தோனி உடனே வீரர்களை சந்தித்து பேச வேண்டும். அணிக்குள் ஏதாவது பிரச்சனை இருந்தால் அதை சரி செய்ய வேண்டும். இனியும் காலம் தாழ்த்த கூடாது. மிடில் ஓவர்களில் ரன் எடுக்க வீரர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழ தொடங்கி உள்ளது.

Story first published: Wednesday, October 14, 2020, 13:44 [IST]
Other articles published on Oct 14, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+