Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"அதுதான் ஆட்டத்தை மாற்றியது".. சிஎஸ்கே தோல்விக்கு இப்படி ஒரு காரணமா?.. பழியை தூக்கி போட்ட தோனி

துபாய்: நேற்று டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கேவின் தோல்விக்கு என்ன காரணம் என்று கேப்டன் தோனி விளக்கம் கொடுத்துள்ளார்.

நேற்று டெல்லிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே மிக மோசமாக தோல்வி அடைந்தது. வெற்றிபெறுவதற்கு வாய்ப்பு இருந்தும் கூட சிஎஸ்கே மோசமாக ஆடி தோல்வி அடைந்தது.

நேற்று முதலில் ஆடிய சிஎஸ்கே 179 ரன்கள் எடுத்தது. அதன்பின் இறங்கிய டெல்லி தொடக்கத்தில் இருந்து அதிரடியாக ஆடி 20 ஓவரில் 185 ரன்கள் எடுத்தது.

காரணம்

காரணம்

இந்த நிலையில் சிஎஸ்கேவின் தோல்விக்கு கேப்டன் தோனி பல்வேறு காரணங்களை அடுக்கினார். அதில், நேற்று மைதானத்தில் போதுமான அளவு பனி நேற்று இருந்தது. இதனால் முதல் மற்றும் இரண்டாம் ஆட்டத்திற்கு இடையில் வேறுபாடு ஏற்பட்டது. முதலில் சிஎஸ்கே ஆடுவதற்கும் இரண்டாவது டெல்லி ஆடுவதற்கும் இடையில் வேறுபாடு ஏற்பட இதுதான் காரணம்.

பனி எப்படி

பனி எப்படி

இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் செய்ய சாதகமாக சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது டெல்லிக்கு சாதகமாக மாறியது. மிடில் ஓவர்களில் எங்களால் ஸ்கோர் செய்ய முடியவில்லை. ஆனால் டெல்லி அணி பேட்டிங் செய்த போது மிடில் ஓவர்களில் அவர்களால் நன்றாக பேட்டிங் செய்ய முடிந்தது. அதுதான் வித்தியாசமாக மாறியது.

அதிக ரன்கள்

அதிக ரன்கள்

நாங்கள் ஏற்கனவே 10 ரன்கள் குறைவாக அடித்து இருந்தோம். இன்னொரு பக்கம் டெல்லி தேவையான ரன் ரேட்டை விட 10 ரன்கள் அதிகமாகவே அடித்து இருந்தது. இதுதான் வேறுபாடாக அமைத்துவிட்டது. இந்த 20 ரன்கள்தான் ஆட்டத்தை மாற்றிவிட்டது.

சாம் ஓவர்

சாம் ஓவர்

சாம் போட்ட 19வது ஓவர் மிகவும் சிறப்பாக இருந்தது. அவரால் ஆப் யார்க்கர் பந்துகளை போட முடிகிறது. அது ஒருவகையில் நல்ல விஷயம். அவரால் அப்படிப்பட்ட பந்துகளை போட முடிகிறது .இந்த கேம் கண்டிப்பாக சாம் கரனுக்கு மிகப்பெரிய அளவில் தன்னம்பிக்கை கொடுத்து இருக்கும். சாம் கரன் கடைசி கட்டத்தில் சிறப்பாக பந்து வீசினார்.

ஆப் சைட் யார்க்கர்

ஆப் சைட் யார்க்கர்

ஆப் சைட் யார்க்கர்களை அடிப்பது மிகவும் கடினம்.,இதனால் அவரின் ஓவரில் ரன் செல்லவில்லை என்று தோனி குறிப்பிட்டு இருக்கிறார் . நேற்று சிஎஸ்கே தோல்விக்கு அணியின் மோசமான பேட்டிங் தொடங்கி மிடில் ஆர்டர் ஓவர் வரை நிறைய காரணங்கள் இருந்தது. அதிலும் சிஎஸ்கே வீரர்களும் மிக மோசமாக பீல்டிங் செய்து கேட்ச்களை விட்டனர்.

காரணம்

காரணம்

நேற்று சிஎஸ்கேவின் தோல்விக்கு இப்படி பல காரணங்கள் இருந்தாலும்.. தோனி பழியை தூக்கி பனி மீது போட்டுள்ளார். சிஎஸ்கேவின் தோல்விக்கு ஒவ்வொரு முறையும் ஒரு காரணங்களை சொல்வதை தோனி வழக்கமாக வைத்து இருக்கிறார். ஆனால் சிஎஸ்கே அணி மொத்தமாக சரியாக விளையாடுவது இல்லை, கேப்டன்சி சரியில்லை என்பதை மட்டும் அவர் ஒப்புக்கொள்வதே இல்லை.

Story first published: Sunday, October 18, 2020, 8:25 [IST]
Other articles published on Oct 18, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+