கோபமே படாத ஆள்.. சிஎஸ்கே ஆட்டத்தை பார்த்து இப்படி ஒரு ரியாக்சனா.. அணிக்குள் ஏதோ நடக்கிறது!?
துபாய்: சிஎஸ்கே அணி இன்று பஞ்சாப்பிற்கு எதிராக செய்த பவுலிங் பலருக்கும் கோபத்தை உண்டாக்கி உள்ளது. அதேபோல் சிஎஸ்கே அணியின் பீல்டிங்கும் இன்று மிக மோசமாக இருந்தது.
பஞ்சாப் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி தற்போது நடந்து வருகிறது. தொடர் தோல்விகளை தொடர்ந்து இன்று கண்டிப்பாக வென்றாக வேண்டிய கட்டாயத்தோடு சென்னை ஆடி வருகிறது.
எப்போதும் போல இந்த முறையும் சென்னைக்கு டாஸ் கை கொடுக்கவில்லை. இன்று டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்ய முடிவு செய்தது.

பேட்டிங்
பஞ்சாப் அணி பேட்டிங் செய்ய தொடங்கிய பின் மிகவும் மெதுவாகவே ஆடியது. பெரிய அளவில் அதிரடியான ஷாட்களை அடிக்கவில்லை. பொதுவாக பஞ்சாப் அணியில் டாப் ஆர்டர் வீரர்களான கே. எல் ராகுல், மயங்க் அகர்வால் இருவரும் மிகவும் அதிரடியாக ஆடுவார்கள். ஆனால் இருவரும் இன்று மிகவும் மெதுவாகவே ஆடினார்கள்.

சில ஷாட்கள்
தேவையான நேரங்களில் மட்டும் சிஎஸ்கே வீரர்களின் பந்துகளில் கே.எல் ராகுல், மயங்க் அகர்வால் இருவரும் பவுண்டரி அடித்தனர். 19 பந்துகள் பிடித்த அகர்வால் 3 பவுண்டரி மட்டுமே அடித்தார். 26 ரன்கள் அடித்து அவுட்டான இவர் ஒரு சிக்ஸ் கூட அடிக்கவில்லை. அதேபோல் கே . எல் ராகுலும் ;பெரிய அளவில் சிக்ஸ் பவுண்டரி என்று தொடக்கத்தில் ஷோ காட்டவில்லை.

100 ஸ்டிரைக்
100 ஸ்டிரைக் ரேட்டை தொடர்ந்து கே. எல் ராகுல் பின் தொடர்ந்து வந்தார். 15 ஓவர் வரை கே.எல் ராகுல் ஒரு சிக்ஸ் கூட அடிக்கவில்லை. கடைசியாக அரை சதம் அடிக்கும் போதுதான் கே. எல் ராகுல் முதல் சிக்ஸ் அடித்தார். சரியாக சொல்லவேண்டும் என்றால் சிஎஸ்கே பவுலிங் பெரிய அளவில் முன்னேறிய உள்ளது. முதல் 15 ஓவர்கள் சிஎஸ்கே பவுலிங் நன்றாகவே இருந்தது.

மோசம்
ஆனால் 15 ஓவர்களுக்கு பின் கே. எல் ராகுல் அதிரடி காட்ட தொடங்கினார். இதனால் பஞ்சாப் ரன் ரேட் வேகமாக உயர்ந்தது. இதன் காரணமாக பிளமிங் கடும் கோபம் அடைந்தார். சிஎஸ்கே பயிற்சியாளர் பிளமிங் இன்று மிகவும் கோபமாக காணப்பட்டார். ஒவ்வொரு முறை பவுண்டரி சென்ற போதும் முகத்தில் கோபத்தை காட்டினார். தலையில் இருக்கும் தொப்பியை தூக்கி எறிந்து கடுப்பானார்.

மாட்டார்
பொதுவாக பிளமிங் கோபம் அடையும் ஆள் கிடையாது. தான் கிரிக்கெட் வீரராக இருந்த போதும் சரி, ஐபிஎல்லில் சிஎஸ்கே அணிக்கு தொடர்ந்து பயிற்சி வழங்கிய போதும் சரி ஒருமுறை கூட கோபம் அடைந்தது இல்லை. ஆனால் இன்று வெளிப்படையாக பிளமிங் தனது முகத்தில் கோபத்தை காட்டினார். இவர் இப்படி கோபம் அடைந்தது ஏன். இதற்கு என்ன காரணம் என்று பலரும் கேட்க தொடங்கி உள்ளனர்.

என்ன நடக்கிறது
இதனால் அணிக்குள் தற்போது என்ன நடக்கிறது என்று கேள்வி எழுந்துள்ளது. பிளமிங் இப்படி கோபம் அடையும் ஆள் கிடையாது. இப்போது கோபப்படுகிறார் என்றால் கண்டிப்பாக அவர் மீது அழுத்தம் இருக்கும். அவர் கோபமாக இருக்கிறார் என்றால் அணியில் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்றுதான் அர்த்தம் என்று கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications