Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எல்லாம் மாறிவிட்டது.. சிஎஸ்கே கடந்த 5 நாட்களாக என்ன செய்தது?.. பயிற்சியாளர் பிளமிங் சொன்ன சீக்ரெட்!

துபாய்: சிஎஸ்கே கடந்த 5 நாட்களாக எப்படி எல்லாம் பயிற்சி மேற்கொண்டது என்பது குறித்து சென்னை அணியின் பயிற்சியாளர் பிளமிங் கருத்து தெரிவித்துள்ளார்.

சிஎஸ்கே அணி 6 நாட்களுக்கு பின் நாளை மீண்டும் ஐபிஎல் போட்டியில் ஆட உள்ளது. டெல்லி, ராஜஸ்தான் என்று அடுத்தடுத்து இரண்டு அணிகளிடம் சிஎஸ்கே தோல்வி அடைந்தது.

முதலில் மும்பைக்கு எதிரான போட்டியில் சென்னை வென்று இருந்தாலும் தொடர்ச்சியாக இரண்டு தோல்விகள் சிஎஸ்கே அணியை பாதித்துள்ளது. இந்த நிலையில் நாளை ஹைதராபாத் அணியை துபாயில் சிஎஸ்கே எதிர்கொள்கிறது.

என்ன பயிற்சி

என்ன பயிற்சி

இந்த நிலையில் கடந்த 5 நாட்களாக சிஎஸ்கே செய்த பயிற்சி தொடர்பாக சிஎஸ்கே பயிற்சியாளர் பிளமிங் பேட்டி அளித்து உள்ளார். அதில், எங்களுக்கு நாளை நடக்கும் போட்டி சரியான நேரத்தில் வந்துள்ளது. எங்களுக்கு முதல் மூன்று போட்டிகள் அடுத்தடுத்து வந்தது. இதனால் சரியான பயிற்சியை மேற்கொள்ள முடியவில்லை.

மூன்று போட்டிகள் வந்தது

மூன்று போட்டிகள் வந்தது

அதேபோல் மூன்று போட்டிகளும் வேறு வேறு மைதானத்தில் நடந்தது. இதனால் போட்டிக்கு முன் தயார் ஆவதும். புதிய பிட்சிற்கு ஏற்றபடி மாறுவதும் கஷ்டமாக இருந்தது. அதேபோல் ஐபிஎல் 2020ல் இந்த மூன்று பிட்சிலும் விளையாடிய முதல் அணி சிஎஸ்கேதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திட்டங்கள் எப்படி

திட்டங்கள் எப்படி

அதேபோல் சில திட்டங்கள் எங்களுக்கு கை கொடுக்கவில்லை. ஆனால் இனி அது தொடராது. 5 நாட்களில் எல்லாம் மாறிவிட்டது. நாங்கள் எங்கள் தவறுகள் குறித்த தெளிவை பெற்று இருக்கிறோம். அதற்கு ஏற்றபடி பயிற்சியை மாற்றி அமைத்தோம். புதிய வகையில் பயிற்சிகளை செய்தோம்.

சிஎஸ்கே தவறு

சிஎஸ்கே தவறு

எங்கே தவறு இருக்கிறது என்று பார்த்து சரி செய்துள்ளோம். கடந்த போட்டியில் இதே துபாய் மைதானத்தில் டெல்லியிடம் தோல்வி அடைந்தோம். அதை சரி செய்யும் வகையில் பயிற்சிகளை மேற்கொண்டோம். சில இடங்களில் அணி தரப்பு நம்பிக்கை அளிக்கவில்லை. அதை நான் மாற்றி இருக்கிறேன்.

என்ன மாற்றி உள்ளோம்

என்ன மாற்றி உள்ளோம்

அணியில் இருக்கும் வீரர்கள் இன்னும் கற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள். மூன்று மைதானங்களின் அமைப்பும் வேறு வேறு மாதிரி இருந்தது. ஒவ்வொரு போட்டியிலும் நிலைமை முற்றிலும் வேறு மாதிரி இருந்தது. இதை பற்றி எல்லாம் கடந்த 5 நாட்களாக ஆலோசனை செய்து, அதற்கு ஏற்றபடி அணிகளை மாற்றி இருக்கிறோம் , என்று பிளமிங் கூறியுள்ளார்.

Story first published: Thursday, October 1, 2020, 19:17 [IST]
Other articles published on Oct 1, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+