Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"இப்படி எல்லாம் செய்ய கூடாது".. தோனியை சீண்டும் பிளமிங்.. சிஎஸ்கேவில் குழப்பம்.. என்னமோ நடக்கிறது?!

துபாய்: கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே தோல்வி அடைந்தது குறித்து சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் பிளமிங் கருத்து தெரிவித்துள்ளார்.

நேற்று கொல்கத்தாவிற்கு எதிராக நடந்த ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே படுதோல்வி அடைந்தது. வெல்ல வேண்டிய போட்டியில் சிஎஸ்கே தேவையில்லாமல் தோல்வி அடைந்தது.

நேற்று முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 167 ரன்கள் எடுத்தது.அதன்பின் பேட்டிங் இறங்கிய சிஎஸ்கே வெறும் 157 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

பேட்டி

பேட்டி

இந்த நிலையில் சிஎஸ்கே தோல்வி அடைந்தது குறித்து சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் பிளமிங் கருத்து தெரிவித்துள்ளார். அதில், சிஎஸ்கேவின் பேட்டிங் ஆர்டர் மிகவும் வலிமையானது. சிஎஸ்கேவில் அனுபவம் நிறைந்த வீரர்கள் பலர் இருக்கிறார்கள். அனுபவம் வாய்ந்த பேட்டிங் ஆர்டர் இப்படி பேட்டிங் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

எதிரணி

எதிரணி

இப்படி ஆட்டத்தை தூக்கி எதிரணியிடம் கொடுக்க கூடாது. அணியின் தொடக்கம் நன்றாக இருந்தது. ஆனால் சிஎஸ்கே செட் பேட்ஸ்மேன்கள் இப்படி ஏமாற்றி இருக்க கூடாது. மொத்தமாக ஆட்டம் கை நழுவி போக மிடில் ஆர்டர் பேட்டிங்தான் காரணம். இதை கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ள முடியாது.

அனுபவம்

அனுபவம்

நமக்கு எவ்வளவு அனுபவம் இருக்கிறது. அப்படி அனுபவத்தை வைத்துக்கொண்டு இப்படி ஒரு ஆட்டத்தை ஆடலாமா ? இதை நான் உங்களிடமே விட்டுவிடுகிறேன். ஐபிஎல் போட்டியில் முதலில் ஒரு வீரர் நன்றாக ஆடினார் என்றால் கடைசி வரை அதை கொண்டு செல்ல வேண்டும்.

வேகம் முக்கியம்

வேகம் முக்கியம்

அந்த வீரர் அவுட்டான பின் இறங்கும் வீரர்கள் அந்த வேகத்தை பின்பற்ற வேண்டும். ஆனால் நரேன், ரசல் போட்ட பவுலிங் காரணமாக எல்லாம் சொதப்பியது. அணியில் வீரர்கள் களத்திற்கு சென்று பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டும் . 75 ரன்களுக்கு இருவரும் பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டும். அப்படி செய்தால் ஆட்டமே வேறு மாதிரி இருக்கும்.

கொல்கத்தா எப்படி

கொல்கத்தா எப்படி

கொல்கத்தா அணி கடைசி கட்டத்தில் எங்கள் மீது அதிக அழுத்தம் கொடுத்தது. எங்களால் கடைசி நேரத்தில் வேகம் எடுக்க முடியவில்லை. கடைசி நேரத்தில் ஆட்டம் கையைவிட்டு போய்விட்டது. நாங்கள் மிடில் ஆர்டரில் ஆட்டத்தை தவறவிட்டதுதான் கடைசியில் சொதப்ப காரணமாக இருந்தது என்று பிளமிங் குறிப்பிட்டு இருக்கிறார்.

ஜாதவ் வேண்டாம்

ஜாதவ் வேண்டாம்

பிளமிங் தனது பேச்சு மூலம் ஜாதவ் மற்றும் தோனியை மறைமுகமாக சீண்டி உள்ளார் என்று கூறுகிறார்கள். சிஎஸ்கேவில் நேற்று சொதப்பிய இரண்டே பேர் தோனி மற்றும் ஜடேஜா மட்டும்தான். இவர்கள்தான் நேற்று சரியாக பேட்டிங் செய்யவில்லை. அதிக அனுபவம் இருந்தும் இவர்கள்தான் சரியாக பேட்டிங் செய்யவில்லை.

விமர்சனம்

விமர்சனம்

இதனால்தான் பிளமிங் அனுபவத்தை சுட்டிக்காட்டி விமர்சனம் செய்துள்ளார் என்று கூறுகிறார்கள். பிளமிங் நேரடியாக தோனி பெயரை குறிப்பிடாமல் இப்படி விமர்சனம் செய்துள்ளது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் சிஎஸ்கேவில் குழப்பம் ஏற்பட்டுள்ளதா என்று கேள்விகள் எழுந்துள்ளது.

Story first published: Thursday, October 8, 2020, 12:03 [IST]
Other articles published on Oct 8, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+