Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஓகே சொன்ன சிஎஸ்கே.. முக்கியமான திருப்பம்.. 2018 மேஜிக்கை மீண்டும் நிகழ்த்தும் தோனி.. பக்கா பிளான்!

துபாய்: நேற்று பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே வெற்றிபெற்றதை தொடர்ந்து கேப்டன் தோனி புதிய நம்பிக்கையை பெற்றுள்ளார். 2018ல் சிஎஸ்கே நிகழ்த்திய மேஜிக்கை மீண்டும் நிகழ்த்த வாய்ப்புள்ளது என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

நேற்று பஞ்சாப் அணிக்கு எதிராக நடந்த ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே மிகவும் சிறப்பாக ஆடி கம் பேக் கொடுத்தது. ராஜஸ்தான், டெல்லி, ஹைதராபாத் என்று மூன்று அணிகளிடம் தோல்வி அடைந்து அடி வாங்கிய புலியாக சிஎஸ்கே களத்திற்கு வந்தது.

ஒரு பக்கம் அணி நிர்வாகம் கொடுத்த அழுத்தம், இன்னொரு பக்கம் வல்லுனர்களின் கடுமையான விமர்சனம், இதெல்லாம் போக ரசிகர்களின் சரமாரி கிண்டல் என்று பல விஷயங்களை சிஎஸ்கே எதிர்கொண்டு வந்தது. இந்த நிலையில் அனைத்து விமர்சனங்களுக்கும் சிஎஸ்கே தற்போது பதிலடி கொடுத்துள்ளது.

நேற்று என்ன நடந்தது

நேற்று என்ன நடந்தது

நேற்று பஞ்சாப்பிற்கு எதிராக ஆடிய சிஎஸ்கேவில் நிறைய முக்கியமான திருப்பங்கள் நடந்தது. முதல் விஷயம் வாட்சன் பார்மிற்கு வந்தது. வாட்சன் எப்போதும் ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சென்ற பின்தான் பார்மிற்கு திரும்புவார். ஆனால் இந்த முறை தொடரில் தொடக்கத்திலேயே வாட்சன் பார்மிற்கு திரும்பிவிட்டார். ஒருமுறை வாட்சன் பார்மிற்கு வந்தால்... அவ்வளவு எளிதாக இவரை அவுட் செய்ய முடியாது என்பது ஆஸ்திரேலிய போட்டிகளை பார்த்தவர்களுக்கே தெரியும்.

செம

செம

இதனால் இந்த தொடரில் இனி வரும் போட்டிகள் முழுக்க வாட்சன் தனது வாட்டோ ஆட்டத்தை போடுவார் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். இதெல்லாம் போக கடந்த இரண்டு போட்டிகளாக ஜடேஜா மிகவும் சிறப்பாக ஆடி வருகிறார். முதலில் ஹைதராபாத் அணிக்கு எதிராக ஜடேஜாவின் பேட்டிங் பார்மிற்கு திரும்பியது. அதன்பின் நேற்றைய போட்டியில் ஜடேஜாவின் பவுலிங் மீண்டும் பார்மிற்கு வந்தது.

பார்ம்

பார்ம்

நேற்று முக்கியமான விக்கெட்டான மன்தீப் சிங் விக்கெட்டை ஜடேஜாதான் எடுத்தார் . அதேபோல் இவரின் ஸ்பின்னும் நீண்ட நாட்களுக்கு பின் சரியான வேகத்தில், சரியான லென்தில் வந்தது. ஒரு பக்கம் ஜடேஜா, வாட்சன் பார்மிற்கு திரும்ப இன்னொரு பக்கம் சிஎஸ்கேவில் இரண்டு போட்டிகளாக சர்த்துல் தாக்கூர் நம்பிக்கை அளித்து வருகிறார். ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியிலேயே இவர் சிறப்பாக டெத் ஓவர் செய்தார்.

நேற்று

நேற்று

நேற்று நடந்த போட்டியிலும் இவர் அடுத்தடுத்து இரண்டு விக்கெட் எடுத்து போட்டியை மாற்றினார். இதனால் தற்போது சிஎஸ்கே ஒருவகையில் செட்டாக தொடங்கி உள்ளது. வாட்சன், டு பிளசிஸ் போக ராயுடு இன்னொரு பக்கம் பார்மில் இருக்கிறார். தோனியும் கடந்த போட்டியில் அரை சதம் நெருங்கினார். அதேபோல் பிராவோ, சுட்டி பையன் சாம் கரன் என்ற இரண்டு வீரர்கள் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

செம

செம

ஜாதவை தவிர அணியில் தற்போது கிட்டத்ட்ட எல்லோரும் பார்மிற்கு வந்துவிட்டனர். இதனால் ரெய்னா இல்லாமலே வெல்ல முடியும் என்ற நம்பிக்கை சிஎஸ்கேவிற்கு வந்துள்ளது. 2018ல் நிகழ்த்திய மேஜிக்கை மீண்டும் நிகழத்த தோனி முடிவு செய்துள்ளார் என்கிறார்கள்.

பிளே அப்

பிளே அப்

இப்போது அடுத்தது வரிசையாக போட்டிகளில் வென்று பிளே ஆப் செல்வதே நோக்கம் என்று கூறுகிறார்கள். அதேபோல் தோனியும் கண்டிப்பாக தனது அணியை அடுத்த 6-7 போட்டிகளுக்கு மாற்ற மாட்டார் என்று கூறுகிறார்கள். ஆம் இனி பிளே ஆப் செல்லும் வரை சிஎஸ்கே இதே அணியுடனானதான் விளையாட போகிறது. அணியில் எந்த மாற்றமும் இருக்காது என்கிறார்கள்.

Story first published: Monday, October 5, 2020, 12:25 [IST]
Other articles published on Oct 5, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+