Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

போட்டு வைத்த திட்டம் எல்லாம் காலி.. தோனி நினைத்து பார்க்காத சிக்கல்.. எப்படி சமாளிக்க போகிறார்?

துபாய்: 2021 ஐபிஎல் தொடருக்கு முன் பெரிய அளவில் ஏலம் எதுவும் நடக்காது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. சின்ன ஏலம் மட்டுமே நடக்கும் என்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.

2020 ஐபிஎல் தொடரில் பிளே ஆப் செல்லும் வாய்ப்பை சிஎஸ்கே அணி இழந்துள்ளது. இந்த நிலையில் சிஎஸ்கே அணி இந்த சீசனை ஒரு கெட்ட கனவாக மறந்துவிட்டு.. அடுத்த சீசன் மீது கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது.

அடுத்த சீசனில் பெரிய அளவில் புதிய வீரர்களை அணியில் எடுக்க வேண்டும். அணிக்குள் வலிமையான வீரர்களை கொண்டு வர வேண்டும் என்று சிஎஸ்கே முடிவு செய்துள்ளது.

தோனி

தோனி

இது தொடர்பாக தோனியே சில நாட்களுக்கு முன் பேட்டி அளித்தார். இந்த சீசனில் பிளே ஆப் செல்லும் வாய்ப்பு எங்களுக்கு இல்லை. நாங்கள் அடுத்த சீசனுக்கு தயார் ஆக வேண்டும். அணியில் நல்ல வீரர்களை எடுக்க வேண்டும்.

ஏலம்

ஏலம்

எங்கே ஏலம் நடக்கிறது, எங்கே போட்டி நடக்கிறது என்பதை பார்த்து அணியை தேர்வு செய்ய வேண்டும் என்று தோனி குறிப்பிட்டு இருந்தார். அடுத்த வருடம் பெரிய அளவில் ஏலம் நடக்கும் என்று நம்பி தோனி இப்படி குறிப்பிட்டு இருந்தார். ஆனால் 2021 ஐபிஎல் தொடருக்கு முன் பெரிய அளவில் ஏலம் எதுவும் நடக்காது என்று கூறுகிறார்கள்.

சின்னது

சின்னது

அடுத்த வருடம் சின்ன ஏலம் மட்டுமே நடக்கும் என்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. வரும் பிப்ரவரி மாதம் இந்த ஏலம் நடக்க உள்ளது. இதனால் சிஎஸ்கே அணியில் மொத்தமாக பெரிய மாற்றங்களை எல்லாம் கொண்டு வர முடியாது. சின்ன சின்ன மாற்றங்களை மட்டுமே ஏற்படுத்த முடியும்.

தோனி

தோனி

தோனி கனவு கண்டது போல மொத்தமாக அணியை மாற்ற முடியாது. சின்ன ஏலம் என்றால் அதிகபட்சம் 3-4 வீரர்கள் மாற்றப்படலாம். சமயங்களில் ஒரே ஒரு வீரர் மட்டுமே மாற்றப்பட கூட வாய்ப்புள்ளது. இதனால் தோனிக்குதான் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சிக்கல்

சிக்கல்

ஆம் சிஎஸ்கே அணியில் இருந்து யாரை நீக்க வேண்டும், யாரை வைக்க வேண்டும் என்று தோனிதான் முடிவு செய்ய வேண்டும். அதேபோல் இன்னொரு பக்கம் பெரிய அளவில் மற்ற அணி வீரர்களை வெளியிட வாய்ப்பு இல்லை. இதனால் தோனி முக்கியமான சில வீரர்களை அணிக்குள் கொண்டு வரவும் வாய்ப்பு இல்லை என்கிறார்கள்.

அனுபவம்

அனுபவம்

மீண்டும் அனுபவ வீரர்கள், வயதானவர்களை தேர்வு செய்ய முடியாது. இதனால் 4-5 வீரர்களை வெளியே அனுப்பிவிட்டு, அதிக விலை கொடுத்து 2-3 வீரர்களை வேண்டுமானால் சிஎஸ்கே வாங்கலாம். ஆனால் யாரெல்லாம் அடுத்த வருடம் ஏலம் விடப்படுவார்கள் என்று சந்தேகம் நிலவி வருவதால்.. சிஎஸ்கே அணிக்கு இப்போதே சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Story first published: Saturday, October 31, 2020, 12:14 [IST]
Other articles published on Oct 31, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+