Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"நீண்டு வந்த அந்த ஒரு கை".. போட்டியை புரட்டி போட்ட நிமிடம்.. எவ்வளவு ஆட்டம்.. சிஎஸ்கே மாஸ் பதிலடி!

துபாய்: ராஜஸ்தானுக்கு எதிராக இன்று சிஎஸ்கே விளையாடும் போட்டியில் களத்தில் நடந்த சம்பவம் ஒன்று மொத்தமாக ஆட்டத்தை புரட்டி போட்டுள்ளது.

ராஜஸ்தான் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் தொடக்கத்தில் இருந்து சிஎஸ்கே மோசமாக ஆடி வந்தது.

இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே பேட்டிங் தேர்வு செய்தது. ராஜஸ்தானுக்கு எதிராக பேட்டிங்கில் மிக மோசமாக சொதப்பிய சிஎஸ்கே வெறும் 125 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. சிஎஸ்கே அணியின் பேட்ஸ்மேன்கள் எல்லோரும் மிக மோசமாக இன்று பேட்டிங் செய்தனர்.

எப்படி

எப்படி

இதில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கேவில் ஜடேஜா மட்டுமே அதிரடியாக ஆடி 35 ரன்கள் எடுத்தார். டு பிளசிஸ் 10, வாட்சன் 8, சாம் கரன் 22, ராயுடு 13 ரன்களுக்கு அவுட் ஆனார்கள். தோனியும் 28 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதனால் சிஎஸ்கே 20 ஓவரில் வெறும் 125 ரன்கள் மட்டுமே எடுத்தது.

சொதப்பல்

சொதப்பல்

அதன்பின் களமிறங்கிய ராஜஸ்தான் 15 ஓவரில் வெற்றிபெற்றுவிடும் என்றுதான் பலரும் நினைத்தார்கள். ஆனால் ராஜஸ்தான் முதல் பவர் பிளேவிலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. பென் ஸ்டாக்ஸ் 19 ரன்களுக்கும், ராபின் உத்தப்பா 4 ரன்களுக்கு அவுட் ஆனார்கள்.

ஆனால் சஞ்சு

ஆனால் சஞ்சு

ஆனால் சஞ்சு சாம்சன் களமிறங்கிய பின் சிஎஸ்கே டீம் கொஞ்சம் ஆடிப்போனது. ஏனென்றால் ராஜஸ்தானுக்கு எதிராக கடந்த போட்டியில் சிஎஸ்கே தோல்வி அடைய சஞ்சு சாம்சன்தான் காரணமாக இருந்தார். கடந்த போட்டியில் 32 பந்துகள் பிடித்த சஞ்சு சாம்சன் 74 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் ராஜஸ்தான் 216 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

வந்தார்

வந்தார்

அதனால் இன்று சஞ்சு சாம்சன் வந்ததும் இன்று சிஎஸ்கே படை கொஞ்சம் நடுங்கி போனது. ஆனால் சஞ்சு சாம்சன் வந்ததும் அவரின் விக்கெட்டை தீபக் சாகர் எடுத்தார். 5வது ஓவரின் மூன்றாவது பந்தில் சஞ்சு சாம்சன் டக் அவுட் ஆனார். கீப்பர் தோனியிடம் கேட்ச் கொடுக்க.. தோனி அதை தாவி வந்து.. கையை நீட்டி.. தரையில் பந்து குத்துவதற்கு முன் கடைசி நொடியில் அதை பிடித்தார்.

கேட்ச் பிடித்தார்

கேட்ச் பிடித்தார்

உள்ளே நீண்டு வந்த தோனியின் கை சஞ்சு சாம்சன் விக்கெட்டை எடுத்தது. தோனியின் இந்த கேட்ச் பெரிய அளவில் வைரலாகி உள்ளது. இது தோனி பிடித்த 150 கேட்ச் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் மொத்தமாக ராஜஸ்தான் டாப் ஆர்டர் தடம் புரண்டது. சிஎஸ்கேவின் முதல் கட்ட பவுலிங் பிளான் இதில் வெற்றிபெற்றுள்ளது.

Story first published: Tuesday, October 20, 2020, 8:18 [IST]
Other articles published on Oct 20, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+