Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சொதப்பிய பேட்டிங்.. மோசமான கேப்டன்சி.. ஆர்வம் இன்றி ஆடிய தோனி.. ராஜஸ்தானிடம் வீழ்ந்தது சிஎஸ்கே

துபாய்:ராஜஸ்தானுக்கு எதிராக பேட்டிங்கில் மிக மோசமாக சொதப்பிய சிஎஸ்கே வெறும் 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதை சேஸ் செய்த ராஜஸ்தான் 17.3 ஓவரில் 3 விக்கெட்டிற்கு 126 ரன்கள் எடுத்து வென்றது.

ராஜஸ்தான் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி அபுதாபியில் நடந்தது. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே பேட்டிங் தேர்வு செய்தது.

இன்று நடந்த போட்டியில் சிஎஸ்கேவில் இருந்து சாம் கரன், பிராவோ நீக்கப்பட்டனர். இதற்கு பதிலாக பியுஷ் சாவ்லா, ஹஸல்வுட் அணியில் சேர்க்கப்பட்டனர்.

அணியில் சேர்ப்பு

அணியில் சேர்ப்பு

ராஜஸ்தானுக்கு எதிராக இன்று ஆடும் சிஎஸ்கே அணியில் சாம் கரன், டு பிளசிஸ், வாட்சன், ராயுடு, தோனி, ஜடேஜா, ஹசல்வுட், சாவ்லா, சாகர், ஷர்துல் தாகூர் ஆகியோர் ஆடுகிறார்கள். இன்று டாஸ் பேட்டிங் தேர்வு செய்த சிஎஸ்கே தொடக்கத்தில் இருந்தே மிக மோசமாக சொதப்பியது.

மோசமான ஆட்டம்

மோசமான ஆட்டம்

தொடக்கத்தில் இருந்து வரிசையாக சிஎஸ்கேவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்தனர். முதல் 5 ஓவருக்குள் இரண்டு விக்கெட் விழுந்தது. அதன்பின் 10 ஓவருக்குள் 4 விக்கெட் விழுந்தது. இதனால் சிஎஸ்கேவின் டாப் ஆர்டர் மொத்தமாக முடங்கியது.

பேட்ஸ்மேன்கள் சொதப்பல்

பேட்ஸ்மேன்கள் சொதப்பல்

சிஎஸ்கே சார்பாக இறங்கிய டு பிளசிஸ் 10 ரன்களுக்கும், வாட்சன் 8 ரன்களுக்கும், சாம் கரன் 22 ரன்களுக்கும், ராயுடு 13 ரன்களுக்கும் அவுட் ஆனார்கள். அதன்பின் நிதானமாக டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடிய தோனியும் 28 ரன்கள் இருக்கும் போது ரன் அவுட் ஆனார் .

ஜடேஜா மட்டுமே

ஜடேஜா மட்டுமே

ஜடேஜா மட்டும் ஒரு பக்கம் கொஞ்சம் சொல்லிக்கொள்ளும்படி ஆடினார் . 30 பந்துகளில் இவர் 35 ரன்கள் அடித்தார். ஜாதவ் எப்போதும் போல கடைசியில் கட்டை போட்டு 7 பந்தில் 4 ரன்கள் அடித்தார். இதனால் சிஎஸ்கே 20 ஓவரில் 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. ராஜஸ்தான் சார்பாக ஆர்ச்சர், தியாகி, ஷ்ரேயாஸ் கோபால், திவாதியா தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

அதன்பின் என்ன

அதன்பின் என்ன

அதன்பின் இறங்கிய ராஜஸ்தான் தொடக்கத்தில் 3 விக்கெட்டுகளை இழந்தது. பென் ஸ்டோக்ஸ் 19 ரன்னுக்கும், உத்தாப்பா 4 ரன்னுக்கும், சாம்சன் டக் அவுட்டும் ஆனார். ஆனால் அதன்பின் இறங்கிய ஸ்மித், பட்லர் நிதானமாக ஆடினார்கள். ஸ்மித் இதில் 26 ரன்களும், பட்லர் 48 பந்தில் 70 ரன்களும் எடுத்தனர். இதனால் ராஜஸ்தான் 17.3 பந்தில் 3 விக்கெட்டிற்கு 126 ரன்கள் எடுத்து வென்றது. இதன் மூலம் ராஜஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

Story first published: Monday, October 19, 2020, 23:23 [IST]
Other articles published on Oct 19, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+