Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்படி ஏமாத்திட்டீங்களே.. ரெய்னாவால் அதிகரிக்கும் பிரஷர்.. அப்படியே ஆடிப்போன சிஎஸ்கே..#ComeBackRaina

துபாய்: சென்னை அணியில் ரெய்னாவை மீண்டும் எடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

கடந்த ஒரு மாதமாக சென்னை அணிக்குள் தொடர்ந்து குழப்பங்கள் நிலவி வருகின்றன. அணியில் இருந்து ரெய்னா வெளியேறியதில் இருந்தே நிறைய பிரச்சனைகள் நடந்து வருகின்றன. முக்கியமாக ரெய்னா இல்லாமல் சென்னையின் பேட்டிங் மிக மோசமாக சொதப்ப தொடங்கி உள்ளது.

சென்னை அணியில் இரண்டு ஓப்பனிங் வீரர்களும் சரியாக ஆடுவது இல்லை. டு பிளசிஸ் தவிர வேறு யாரும் சென்னையில் சரியாக பேட்டிங் செய்வது இல்லை.

ரெய்னா வருவாரா?

ரெய்னா வருவாரா?

இதனால் சென்னை அணிக்குள் மீண்டும் ரெய்னா வருவாரா என்று கேள்வி எழுந்தது. கஷ்டப்படும் சென்னை அணியை மீட்டு கொண்டு வர ரெய்னா வருவாரா, அணியில் மீண்டும் அவர் மூன்றாவது இடத்தில் ஆடுவார் என்று கேள்வி எழுந்தது. இதற்கான அறிகுறிகளும் லேசாக தெரிய தொடங்கியது.

உறுதிப்படுத்தப்படாத தகவல்கள்

உறுதிப்படுத்தப்படாத தகவல்கள்

இதன்பின் ரெய்னா அணிக்கு திரும்புவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வந்தது. ரெய்னா சிஎஸ்கே நிர்வாகத்திடம் பேசிவிட்டார். அவர் மீண்டும் அணிக்கு திரும்ப உள்ளார். பாதி தொடரில் அணியில் இணைவார் என்று கூறப்பட்டது.

ஆனால் மறுப்பு

ஆனால் மறுப்பு

ஆனால் இதை சிஎஸ்கே நிர்வாகம் மறுத்தது. ரெய்னா அணிக்கு வர போவதில்லை. அவர் 2020 ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ள போவதில்லை என்று உறுதியாக அறிவித்துவிட்டார். அவர் முடிவை நாங்கள் மதிக்கிறோம். அவர் இல்லாமல் சிஎஸ்கே அணி இந்த தொடரில் விளையாடும் என்று சிஎஸ்கே நிர்வாகம் உறுதியாக அறிவித்தது.

ரசிகர்கள் கோரிக்கை

ரசிகர்கள் கோரிக்கை

இதனால் ரெய்னாவின் ரசிகர்கள் கடந்த இரண்டு நாட்களாக அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். டிவிட்டரில் இதற்காக ரெய்னா மீண்டும் வர வேண்டும் என்று பொருள்படும் வகையில் #ComeBackRaina என்ற டேக்கை டிரெண்ட் செய்து வருகிறார்கள். சிஎஸ்கேவிற்கு இது தொடர்பாக அழுத்தம் கொடுத்து வருகிறார்கள்.

அணியில் எடுக்க வேண்டும்

அணியில் எடுக்க வேண்டும்

ரெய்னாவை அணியில் எடுக்க வேண்டும். சிஎஸ்கவை நம்பித்தான் அவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அவரை ஏமாற்ற கூடாது. உடனே அவரை மீண்டும் சிஎஸ்கே நிர்வாகம் அழைக்க வேண்டும். ரெய்னாவை மீண்டும் அணியில் எடுப்பதுதான் சிஎஸ்கே நிர்வாகத்திற்கு நல்லது.

வெற்றி பெற்று ஆக வேண்டும்

வெற்றி பெற்று ஆக வேண்டும்

சிஎஸ்கே அணி அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிபெற வேண்டும் என்றால் ரெய்னா அணியில் இருக்க வேண்டும். எல்லா வருடமும் சிஎஸ்கேவிற்கு ரெய்னாதான் அதிக ரன்களை எடுப்பார். அதை சிஎஸ்கே மறக்க கூடாது. அதனால் பழசை மறந்து.. ரெய்னா மீண்டும் சிஎஸ்கேவில் விளையாட வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது.தேசிய அளவில் இந்த டேக் இரண்டு நாட்களாக வைரலாகி வருகிறது.

Story first published: Sunday, September 27, 2020, 17:07 [IST]
Other articles published on Sep 27, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+