Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கேவின் சிம்ம சொப்பனம்.. மொத்தமாக மாறும் சூழ்நிலை.. தோனிக்கு அடுத்தடுத்து அடிக்கும் அதிர்ஷ்டம்!

துபாய்: டெல்லிக்கு எதிராக இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோத இருக்கும் நிலையில், சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு அடுத்தடுத்து சில நல்ல செய்திகள் வந்துள்ளது.

ஐபிஎல் தொடரின் மிக முக்கியமான போட்டி இன்று நடக்க உள்ளது. சென்னை அணி, ராஜஸ்தானுக்கு எதிரான தோல்விக்கு பின் இன்று டெல்லி அணியை எதிர்கொள்கிறது.

முழுக்க முழுக்க இளைஞர்கள் நிரம்பிய இளம் படையுடன் இன்று டெல்லி களமிறங்க உள்ளது. மாறாக சென்னை அணியில் அனுபவம் மிகுந்த வீரர்கள் உள்ளனர். இந்த நிலையில் போட்டி தொடங்குவதற்கு முன் சென்னை அணிக்கு சில முக்கிய நல்ல செய்திகள் கிடைத்துள்ளது .

சிஎஸ்கே

சிஎஸ்கே

சென்னை அணிக்கு வந்திருக்கும் முதல் நல்ல செய்தி, பிராவோவின் உடல்நிலை தொடார்பானது. ஐபிஎல் தொடரில் கலந்து கொள்வதற்கு முன் பிராவோ சிபிஎல் தொடரில் கலந்து கொண்டார். இந்த தொடரில் இவருக்கு காலில் அடிப்பட்டது. இதனால் சென்னை அணி விளையாடிய முதல் இரண்டு போட்டிகளில் இவரால் கலந்து கொள்ள முடியவில்லை. இது சென்னைக்கு கொஞ்சம் பின்னடைவாக இருந்தது.

டெத் ஓவர்கள்

டெத் ஓவர்கள்

முக்கியமாக சென்னைக்கு டெத் ஓவர்களில் இது பெரிய அழுத்தமாக இருந்தது. பொதுவாக பிராவோதான் சென்னை அணிக்கு டெத் ஓவர்களில் பந்து வீசுவார். அதேபோல் கடைசி நேரத்தில் வந்து போட்டியின் போக்கையே மாற்றும் திறமை கொண்டவர். இப்படி இருக்கும் நிலையில் இவர் காயத்துடன் இருந்தது , சென்னை அணிக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது.

நல்ல செய்தி 2

நல்ல செய்தி 2

இந்த நிலையில் தற்போது இவர் முழு உடல் தகுதியை பெற்றுள்ளார். இந்த போட்டியில் அவர் விளையாடுவாரா என்பது சந்தேகம்தான். ஆனால் அடுத்த போட்டியில் விளையாட வாய்ப்புள்ளது. இவர் முழு உடல் தகுதியோடு உள்ளார். இதனால் தோனிக்கு பழைய டெத் ஓவர் எக்ஸ்பர்ட் கிடைத்துவிட்டார் என்று கூறுகிறார்கள். தோனிக்கு இன்னொரு நல்ல செய்தி இன்றைய போட்டிக்கு முன் கிடைத்துள்ளது.

இன்று இல்லை

இன்று இல்லை

அதன்படி இன்றைய போட்டியில் அஸ்வின் விளையாட மாட்டார். அவருக்கு பஞ்சாப்பிற்கு எதிரான கடந்த போட்டியில் தோள் பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் பாதி போட்டியில் இருந்து வெளியேறினார். தற்போது இவர் காயம் குணமடைந்துள்ளது. ஆனால் இன்றைய போட்டியில் இவர் விளையாட வாய்ப்பில்லை. இது சென்னை அணிக்கு சாதகமாக முடிந்துள்ளது.

ஸ்பின்னர் அஸ்வின்

ஸ்பின்னர் அஸ்வின்

ஸ்பின்னர் அஸ்வின் துபாய் பிட்சில் அதிக விக்கெட்டுகளை எடுக்க கூடியவர். அதேபோல் சென்னை அணிக்கு இவர் சிம்ம சொப்பனமாக திகழ கூடியவர். இப்படி இருக்கையில் இவர் இன்று விளையாட மாட்டார் என்பது சென்னை அணிக்கு நல்ல செய்தியாகும். முக்கியமாக ஒரு ஜாம்பவான் வீரரின் ஸ்பின் பவுலிங்கில் இருந்து இன்று சிஎஸ்கே தப்பித்துள்ளது.

ராயுடு வருகிறார்

ராயுடு வருகிறார்

இன்னொரு பக்கம் சென்னையின் அணியின் மிடில் ஆர்டர் வீரர் அம்பதி ராயுடு குணமடைந்து உள்ளார்.இந்த போட்டியிலேயே அவரை எடுக்க வாய்ப்பு இருந்தது. ஆனாலும் பாதுகாப்பு கருதி அவர் இன்று விளையாட மாட்டார். அடுத்த போட்டிக்கு வருவது உறுதி என்கிறார்கள். இதனால் தோனியின் பழைய சிஎஸ்கே டீம் எந்த சேதாரமும் இல்லாமல் அடுத்த போட்டியில் களமிறங்கும் என்று கூறுகிறார்கள்.

Story first published: Friday, September 25, 2020, 18:33 [IST]
Other articles published on Sep 25, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+