மாற்றவே முடியாது.. நிர்வாகத்திடம் உறுதியாக சொன்ன தோனி.. சிஎஸ்கே போடும் பிளான் பி.. பின்னணி!
துபாய்: கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இன்று களமிறங்க உள்ள சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவன் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது.
சிஎஸ்கே அணி பொதுவாக தனது பிளேயிங் லெவன் வீரர்களை மாற்றியது கிடையாது. வீரர்கள் அடுத்தடுத்த போட்டிகளில் சொதப்பினாலும் கூட சிஎஸ்கே அணி நிர்வாகம் அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கும்.
வீரர்கள் மீது எப்போதும் நம்பிக்கை வைப்பதே சிஎஸ்கேவின் பலம் ஆகும். இந்த நிலையில் கொல்கத்தா அணிக்கு எதிராகவும் சிஎஸ்கே இதே நடைமுறையை பின்பற்ற உள்ளது.

மூன்று பேர்
இன்று நடக்கும் போட்டியில் சிஎஸ்கே சார்பாக யாரெல்லாம் விளையாட போகிறார்கள் என்று விவரங்கள் வெளியாகி உள்ளது. சிஎஸ்கே சார்பாக வாட்சன் மற்றும் டு பிளசிஸ் எப்போதும் போல ஓப்பனிங் இறங்குவார்கள். அதன்பின் ராயுடு ஒன் டவுன் இறங்குவார். இந்த மூன்று வீரர்களின் ஆர்டரில் எந்த விதமான மாற்றமும் இன்று இருக்காது.

அடுத்து யார்
இன்றைய பிளேயிங் லெவனில் கேதார் ஜாதவ் கண்டிப்பாக ஆடுவார். அவர் அணியில் இடம்பெறுவது உறுதி என்று கூறுகிறார்கள். அவர் நான்காவது இடத்தில் இறங்குவார். அதன்பின் தோனி, ஜடேஜா, சாம் கரன் இறங்குவார்கள்.

பிராவோ
இவர்களுக்கு அடுத்துதான் பிராவோ பேட்டிங் இறங்குவார். இதற்கு அடுத்து சர்த்துல் தாக்கூர், சாகர்,பியூஸ் சாவ்லா ஆகியோர் பேட்டிங் இறங்குவார்கள். இன்றைய பிளேயிங் லெவனில் எந்த விதமான மாற்றமும் இருக்காது. ஆடும் அணியில் இருந்து கேதார் ஜாதவை நீக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டது. ஆனால் இதை தோனி ஏற்கவில்லை என்கிறார்கள்.

தோனி
அணியில் மாற்றம் செய்ய முடியாது. இதே அணியுடன்தான் ஆட போகிறேன் என்று தோனி கூறியதாக தகவல்கள் வருகிறது. கடந்த போட்டியிலும் அணி நிர்வாகத்துடன் தோனி இதற்காக வாக்குவாதம் செய்ததாக தகவல் வந்தது.இதனால் இன்று அதே அணி களமிறங்கினாலும் பேட்டிங் ஆர்டரில் சில மாற்றங்கள் இருக்கும் என்கிறார்கள்.ஒருவேளை இன்று சிஎஸ்கே சேசிங் செய்தால் பேட்டிங் ஆர்டரில் மாற்றம் இருக்கும்.

மாற்றம்
சிஎஸ்கே ஒருவேளை சேஸிங் செய்து, ஓப்பனிங் வீரர்கள் சொதப்பினால் பேட்டிங் ஆர்டரில் மாற்றம் செய்யப்படும். தோனி 7 விக்கெட்டிற்கு பின் இறங்குவார். சாம் கரன் அல்லது ஜடேஜா முன்பே டாப் ஆர்டரில் 4-5 இடங்களில் இறங்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். சிஎஸ்கே இந்த பிளான் பியை மனதில் வைத்துள்ளது. இன்று ஓப்பனிங் சொதப்பினால் கண்டிப்பாக இந்த மாற்றம் நடக்கும் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications