Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பொற்காலம் முடிந்துவிட்டது.. சிஎஸ்கேவிற்கு இனிதான் பிரச்சனையே.. கணிக்கும் வல்லுநர்கள்..என்ன நடக்கும்?

துபாய்: ஐபிஎல் 2020 சீசனில் சிஎஸ்கேவின் பொற்காலம் முடிந்துவிட்டது.. இனிதான் அணிக்கு கஷ்டமான காலங்கள் வர போகிறது என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்க தொடங்கி உள்ளனர்.

ஐபிஎல் 2020 தொடரில் சிஎஸ்கே அணி மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. மிகவும் நம்பிக்கையுடன் இந்த தொடரை தொடங்கிய சிஎஸ்கே..வரிசையாக அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.

சிஎஸ்கேவின் தொடர் தோல்விகள் காரணமாக அணி நிர்வாகம் மீது ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர். மோசமான அணியை தேர்வு செய்துவிட்டீர்கள் என்று சிஎஸ்கே மீது ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர்.

கோபம்

கோபம்

ஒரு பக்கம் சிஎஸ்கே மீது ரசிகர்கள் கோபத்தில் இருக்க இன்னொரு பக்கம் விமர்சகர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் சிஎஸ்கேவின் கதை முடிந்துவிட்டது என்று கூறுகிறார்கள். இந்த வருட சீசனில் சிஎஸ்கே மீண்டு வருவது கடினம். இந்த சீசன் சிஎஸ்கேவின் கையை விட்டு போய்விட்டது என்று கணித்து உள்ளனர்.

கணிப்பு

கணிப்பு

அதோடு 2021 சீசனில் சிஎஸ்கே புதிய வீரர்களை அணியில் எடுக்க வேண்டும். அப்போது பெரிய அளவில் ஏலம் நடக்கும். அப்போது புதிய வீரர்களை சிஎஸ்கே அணிக்குள் எடுக்க வேண்டும். அதுவரை சிஎஸ்கேவால் மீண்டு வர முடியாது. இந்த சீசனில் சிஎஸ்கேவிடம் இருந்து எந்த மேஜிக்கையும் எதிர்பார்க்க கூடாது என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கணித்துள்ளனர் .

மைக்கேல்

மைக்கேல்

சிஎஸ்கேவின் சரிவு குறித்து கருத்து தெரிவித்து இருக்கும் முன்னாள் இங்கிலாந்து வீரர் மற்றும் கிரிக்கெட் வல்லுனர், மைக்கேல் வாகன்.. சிஎஸ்கே அணி தற்போது மிக மோசமான நிலையில் உள்ளது. அந்த அணி இந்த சீசனில் மீண்டு வர முடியாது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் சிஎஸ்கேவின் பொற்காலம் முடிந்துவிட்டது.

பாதிப்பு

பாதிப்பு

சிஎஸ்கேவிற்கு இனிதான் பிரச்சனையே ஆரம்பிக்கிறது.ஆம் சிஎஸ்கே இந்த சீசனில் இனியும் தோல்வி அடைய வாய்ப்புள்ளது . எல்லா வருடமும் பிளே ஆப் சென்ற சிஎஸ்கே இந்த வருடம் பிளே ஆப் செல்வது மிகவும் கடினம். சிஎஸ்கே இனி வரும் போட்டிகளில் வலுவான அணிகளை எதிர்கொள்ள போகிறது.. சிஎஸ்கேவிற்கு இனிதான் பிரச்சனையே காத்திருக்கிறது என்று கூறியுள்ளார்.

வல்லுநர்கள்

வல்லுநர்கள்

இவர் மட்டுமின்றி மேலும் பல வல்லுநர்கள் சிஎஸ்கே குறித்து இதே கருத்தை தெரிவித்துள்ளனர். ஆனால் சிஎஸ்கே ரசிகர்கள் சிலர் இன்னும் அணி நிர்வாகம் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். எங்களுக்கு சிஎஸ்கே மீது நம்பிக்கை உள்ளது. கண்டிப்பாக சிஎஸ்கே மீண்டு வரும். இந்த சீசனில் சிஎஸ்கே பைனல் செல்லும் என்று ரசிகர்கள் நம்பிக்கையாக தெரிவித்துள்ளனர்.

Story first published: Wednesday, October 14, 2020, 20:57 [IST]
Other articles published on Oct 14, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+