Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நேற்று நடந்ததை கவனித்தீர்களா?.. அடுத்த போட்டிக்கும் செம ஸ்கெட்ச்.. சிஎஸ்கே வெற்றிபெறுவது கஷ்டம்தான்!

துபாய்: ஹைதராபாத் அணிக்கு எதிராக வெள்ளிக்கிழமை நடக்கும் போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே உள்ளது. ஆனால் அடுத்த போட்டியில் சிஎஸ்கே வெற்றிபெறுவது அவ்வளவு சுலபம் இல்லை.

2020 ஐபிஎல் தொடரில் அதிகம் கவனிக்கப்பட்ட 2 அணிகள் என்று பார்த்தால் அது சிஎஸ்கேவும், ஹைதராபாத் அணியும்தான்.இந்த சீசனில் மிக முக்கியமான அணிகளாக, ஐபிஎல் கோப்பையை வெல்ல வாய்ப்பு இருக்கும் அணிகளாக இரண்டு அணிகளும் பார்க்கப்பட்டது.

ஆனால் ஆச்சர்யமாக இரண்டு அணிகளும் வரிசையாக தோல்விகளை தழுவி வருகிறது. அதிலும் ஹைதராபாத் அணி வரிசையாக இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்து பெரிய அளவில் அதிர்ச்சி கொடுத்தது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஹைதராபாத் அணியிடம் பேட்டிங்கை விட பவுலிங்தான் அதிக வலிமையாக இருக்கிறது. இதனால் ஹைதராபாத் அணியை அவ்வளவு சுலபமாக எடை போட்டு விட முடியாது. எப்போது வேண்டுமானாலும் ஹைதராபாத் சர்ப்ரைஸ் கொடுக்கும். இந்த நிலையில்தான் நேற்று நடந்த போட்டியில் ஹைதராபாத் கம் - பேக் கொடுத்தது. நேற்று டெல்லிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் வென்றது.

வலுவான அணி

வலுவான அணி

மிக வலுவான டெல்லி அணியை நேற்று ஹைதராபாத் வென்றது. முக்கியமாக ஹைதராபாத் அணியின் ஸ்பின் பவுலர் ரஷீத் கான் மீண்டும் பார்மிற்கு திரும்பி உள்ளார். நேற்று நடந்த போட்டியில் 4 ஓவரில் 3 விக்கெட் எடுத்து வெறும் 14 ரன்கள் மட்டுமே இவர் விட்டுக்கொடுத்தார். அதேபோல் இன்னொரு பக்கம் புவனேஷ்வர் குமாரும் பார்மிற்கு திரும்ப தொடங்கி உள்ளார்.

பார்ம்

பார்ம்

நேற்று நடந்த போட்டியில் 4 ஓவரில் 25 ரன்கள் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். அதோடு இன்னொரு பக்கம் கலீல் அகமது நேற்று ஒரு விக்கெட் எடுத்தார். இதெல்லாம் போக தமிழகத்தை சேர்ந்த வீரரை நடராஜன் 4 ஓவரில் வெறும் 25 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். இவர் ஒரே ஓவரில் 6 யார்க்கர் பந்துகளை 140+ கிமீ வேகத்தில் வீசி சாதனை படைத்துள்ளார்.

சென்னை

சென்னை

இதனால் சென்னை - ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னை வெற்றிபெறுமா என்று சந்தேகம் வந்துள்ளது. ஹைதராபாத் அணியின் பவுலிங் முழு பார்மிற்கு திரும்பி உள்ளது. நேற்று போட்டியில் போட்டதை போல முழு திட்டத்துடன் அடுத்த போட்டிக்கும் ஹைதராபாத் அணி வரும். இதேபோல் யார்க்கர் பந்துகளை 145+ வேகத்தில் வீசுவார்கள்.

ஆனால் சென்னை

ஆனால் சென்னை

ஆனால் சென்னை பேட்ஸ்மேன்கள் ராஜஸ்தான் பவுலிங்கையே தாக்கு பிடிக்க முடியாமல் அவுட்டானார்கள். அப்படி இருக்கையில் ஹைதராபாத் அணியின் பவுலிங்கை தாக்கு பிடிப்பார்களா என்று கேள்வி எழுந்துள்ளது. எல்லாம் போக முரளி விஜய், கேதார் ஜாதவ் போன்ற வீரர்கள் ஹைதராபாத்தின் வேகப்பந்து வீச்சு முன் ஆட முடியுமா என்றும் சந்தேகம் வந்துள்ளது. ஹைதராபாத் பவுலர்கள் டெல்லி பேட்ஸ்மேன்களையே ''கொத்துக்கறி'' போட்டார்கள்.

டெல்லி பேட்ஸ்மேன்

டெல்லி பேட்ஸ்மேன்

ஷ்ரேயாஸ் ஐயர், பிரீத்வி போன்றவர்களையே சென்ற போட்டியில் ஹைதராபாத் வீரர்கள் ''பிரியாணி'' போட்டார்கள். அப்படி இருக்கையில் சென்னையின் ''டெஸ்ட்'' வீரர்களை அவர்கள் நினைத்தால் எளிதாக அவுட் செய்ய முடியும். அதேபோல் வெற்றியை தக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஹைதராபாத் நெருப்பு போல ஆடும். இதை சிஎஸ்கே எப்படி சமாளிக்க போகிறது.. அடுத்த போட்டியிலாவது சிஎஸ்கே திரும்பி வருமா என்று கேள்வி எழுந்துள்ளது.

Story first published: Wednesday, September 30, 2020, 21:24 [IST]
Other articles published on Sep 30, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+