Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்போதுதான் வெற்றி பாதைக்கு திரும்பினோம்.. அதற்குள் இப்படி ஒரு சிக்கலா? சிஎஸ்கே இன்று என்ன செய்யும்?

துபாய்: 2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பி உள்ள நிலையில் இன்று நடக்கும் போட்டியில் அந்த அணிக்கு நிறைய சவால்கள் காத்து இருக்கிறது.

ஐபிஎல் தொடரின் மிக முக்கியமான போட்டி இன்று நடக்க உள்ளது. ஐபிஎல் தொடரில் மீதம் இருக்கும் 6 போட்டிகளில் 5 போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே உள்ளது.

இதனால் இன்று டெல்லிக்கு எதிராக நடக்கும் போட்டி சிஎஸ்கேவிற்கு வாழ்வா சாவா ஆட்டமாக இருக்க போகிறது என்று கூறுகிறார்கள். பிளே ஆப் கனவை தக்க வைக்க இன்று வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே உள்ளது.

என்ன சிக்கல்

என்ன சிக்கல்

ஆனால் இன்று சிஎஸ்கே அணிக்கு நிறைய சிக்கல்கள் காத்திருக்கிறது. கடந்த போட்டி துபாய் மைதானத்தில் நடந்தது. இந்த துபாய் மைதானம் சிஎஸ்கேவின் ஹோம் கிரவுண்ட். இதனால் சிஎஸ்கே அணி இந்த மைதானத்தை தங்களுக்கு ஏற்றபடி தயார் செய்து கொள்ள முடியும். இதன் காரணமாக சிஎஸ்கே இந்த பிட்சை சேப்பாக்கம் மைதானம் போலவே மாற்றி வைத்தது.

மாறியது

மாறியது

இந்த பிட்சை சேப்பாக்கம் போல சிஎஸ்கே மாற்றினாலும் கூட தொடக்கத்தில் நடந்த போட்டிகளில் பிட்ச் பெரிய அளவிற்கு சிஎஸ்கேவிற்கு ஒத்துழைக்கவில்லை. ஆனால் கடந்த போட்டியில் சிஎஸ்கே ஸ்பின் பவுலிங்கிற்கு துபாய் பிட்ச் நன்றாக கை கொடுத்தது. இதன் காரணமாக எளிதாக ஹைதராபாத் அணியை வீழ்த்தி சிஎஸ்கே வெற்றிபெற முடிந்தது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் சிஎஸ்கே விளையாட இருக்கும் மீதம் உள்ள 6 போட்டிகளில் முதல் 3 போட்டி (இன்றைய போட்டியையும் சேர்த்து) துபாய் மைதானத்திற்கு வெளியே நடக்கிறது. இரண்டு போட்டி சார்ஜாவிலும், ஒன்று அபுதாபியிலும் நடக்கிறது. இன்று நடக்கும் டெல்லி மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான போட்டி சார்ஜா மைதானத்தில் நடக்கிறது.

சார்ஜா எப்படி

சார்ஜா எப்படி

சார்ஜா மைதானத்தில் நடந்த போட்டிகளில் எல்லாம் டெல்லி மிகவும் சிறப்பாக ஆடி உள்ளது. சார்ஜா மைதானம் மிகவும் சிறியது என்பதால் டெல்லி வீரர்கள் இங்கு மிகவும் அதிரடியாக ஆடுகிறார்கள். மிக எளிதாக சார்ஜா மைதானத்தில் டெல்லி வீரர்கள் 200+ ரன்கள் எடுக்கிறார்கள். இதற்கு முன் ஒரே ஒரு போட்டியில்தான் சார்ஜாவில் சிஎஸ்கே விளையாடியது.

சார்ஜா ஆட்டம்

சார்ஜா ஆட்டம்

ராஜஸ்தானுக்கு எதிராக சார்ஜாவில் ஆடிய சிஎஸ்கே அங்கு மோசமாக தோல்வி அடைந்தது. ஒரு அணியில் பெரியஷாட் அடிக்க கூடிய ஹிட்டர்கள் இருந்தால் சார்ஜாவில் எளிதாக ரன் குவிக்க முடியும். ஆனால் சிஎஸ்கேவின் பேட்டிங் ஆர்டர் டெல்லியுடன் ஒப்பிட்டால் அவ்வளவு வலிமையான பேட்டிங் ஆர்டர் கிடையாது. இதனால் இன்று சார்ஜாவில் டெல்லி 200+ ஸ்கோர்களை அடித்தால் அது சிஎஸ்கேவிற்குதான் சிக்கலாக மாறும்.

பவுலர்கள்

பவுலர்கள்

சிஎஸ்கேவால் 200+ ஸ்கோர்களை எல்லாம் சேஸ் செய்ய முடியாது. டெல்லி அணியின் பேட்ஸ்மேன்கள் எல்லோரும் பார்மில் இருக்கிறார்கள். இன்று நடக்கும் போட்டியில் பண்ட் மீண்டு வர வாய்ப்புள்ளது என்று தகவல்கள் வருகிறது. இதனால் சிஎஸ்கேவிற்கு மேலும் அழுத்தம் அதிகரித்துள்ளது. வெற்றிப்பாதைக்கு திரும்பி இருக்கும் சிஎஸ்கே அதை தக்க வைக்குமா என்று சந்தேகம் வந்துள்ளது.

Story first published: Saturday, October 17, 2020, 11:54 [IST]
Other articles published on Oct 17, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+