Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவர் பெயரை கூட சொல்லவில்லை.. தமிழக வீரரை அவமானப்படுத்திவிட்டு.. புலம்பும் சிஎஸ்கே.. என்ன நடந்தது?

துபாய்: சிஎஸ்கே அணி தமிழக வீரர் ஒருவரை கடந்த 2018ன் ஏலத்தின் போது எடுக்க மறுத்தது தற்போது சிஎஸ்கே அணிக்கே எதிராக திரும்பி உள்ளது.

2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே மோசமாக ஆடி வருகிறது. வரிசையாக அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வி அடைந்து சிஎஸ்கே அதிர்ச்சி அளித்துள்ளது.

ஹைதராபாத், கொல்கத்தா போன்ற அணிகளுக்கு எதிராக வெற்றிபெற வாய்ப்பு இருந்தும் கூட சிஎஸ்கே மோசமாக தோல்வி அடைந்து உள்ளது. சிஎஸ்கேவின் தொடர் தோல்விக்கு நிறைய காரணங்கள் சொல்லப்படுகிறது .

முக்கிய காரணம்

முக்கிய காரணம்

சிஎஸ்கேவின் தோல்விக்கு முக்கியமான காரணம் என்று பார்த்தால் அது அணியில் ஸ்பின் பவுலிங் பெரிய அளவில் எடுபடாததுதான். சிஎஸ்கே எப்போதும் ஸ்பின் பவுலிங்கை நம்பிதான் களமிறங்கும். கடந்த இரண்டு வருடமும் சிஎஸ்கேவிற்கு ஸ்பின் பவுலர் இம்ரான் தாஹிர்தான் அதிக விக்கெட்டுகளை எடுத்தார். ஆனால் இந்த முறை இவரை களமிறக்க முடியவில்லை.

ஏன்

ஏன்

ஐபிஎல் தொடரில் இருந்து ரெய்னா வெளியேறி உள்ளார். இதனால் சிஎஸ்கேவில் ரெய்னாவிற்கு பதிலாக டு பிளசிஸ் நிரந்தரமாக ஆடி வருகிறார். இதன் காரணமாக அணியில் இருந்து ஒரு வெளிநாட்டு வீரரை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே தற்போது அணியில் இருந்து இம்ரான் தாஹிர் நீக்கப்பட்டுள்ளார்.

ஆனால் என்

ஆனால் என்

இவருக்கு பதிலாக ஹர்பஜன் சிங் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் தொடரில் இருந்து விலகிவிட்டார். இன்னொரு பக்கம் அணியில் இருக்கும் பியூஸ் சாவ்லா, கரன் சர்மா இருவரும் பெரிய அளவில் ஸ்பின் பவுலிங் செய்வது இல்லை. இவர்கள் விக்கெட் எடுத்தாலும் ரன் கொடுக்கிறார்கள். ஒரு நல்ல இந்திய ஸ்பின் பவுலர் இன்றி சிஎஸ்கே தற்போது கஷ்டப்பட்டு வருகிறது.

முயற்சி செய்யவில்லை

முயற்சி செய்யவில்லை

2018ல் ஏலத்தின் போது அஸ்வினை சிஎஸ்கே ஏலம் எடுக்கவில்லை. அதேபோல் இன்னொரு பக்கம் முருகன் அஸ்வினையும் ஏலம் எடுக்கவில்லை. வாஷிங்க்டன் சுந்தரை சிஎஸ்கே ஏலம் எடுக்கும் என்று நினைத்த போது அவரின் பெயரை கூட சிஎஸ்கே சொல்லவில்லை. வாஷிங்க்டன் சுந்தரை சிஎஸ்கே ஐபிஎல் ஏலத்தின் போது கொஞ்சம் கூட மதிக்கவில்லை.

மதிக்கவில்லை

மதிக்கவில்லை

பெங்களூர் அணிதான் கடைசியில் அவரை எடுத்தது. இந்த நிலையில் 2020 ஐபிஎல் சீசனில் மிக குறைந்த ரன் கொடுக்கும் பவுலராக, சிறப்பான ஸ்பின் பவுலராக வாஷிங்க்டன் சுந்தர் உருவெடுத்து உள்ளார். மற்ற அணி வீரர்கள் இவரின் பவுலிங்கில் பந்தை தொட கூட முடியாமல் திணறுகிறார்கள்.

இந்த சீசன் எப்படி

இந்த சீசன் எப்படி

இந்த சீசனில் இவர் பவுலிங் செய்த விதத்தை பார்த்தாலே புரியும்,

  • 1 ஓவர் - 0 விக்கெட்- 7 ரன்கள்
  • 2 ஓவர் - 0 விக்கெட்- 13 ரன்கள்
  • 4 ஓவர் - 1 விக்கெட்- 12 ரன்கள்
  • 4 ஓவர் - 0 விக்கெட்- 20 ரன்கள்
  • 4 ஓவர் - 0 விக்கெட்- 20 ரன்கள்
  • 3 ஓவர் - 2 விக்கெட்- 16 ரன்கள்
  • 4 ஓவர் - 2 விக்கெட்- 20 ரன்கள்

இதுதான் சுந்தரின் பவுலிங் ரெக்கார்ட். இந்த சீசனில் வாஷிங்க்டன் சுந்தரை போல சிறப்பாக வேறு யாருமே பவுலிங் செய்யவில்லை.

செம பவுலிங்

செம பவுலிங்

இப்படி ஒரு சிறப்பான வீரரைதான் சிஎஸ்கே ஏலத்தின் போது எடுக்கவில்லை. ஏலம் எடுக்கவில்லை என்பதை விட அவரின் பெயரை கூட சிஎஸ்கே ஏலத்தின் போது சொல்லவில்லை. தற்போது நல்ல ஸ்பின் பவுலர்கள் அணியில் இல்லாமல் சிஎஸ்கே கடுமையாக திணறி வருகிறது.

Story first published: Wednesday, October 14, 2020, 13:56 [IST]
Other articles published on Oct 14, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+