For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மதிக்க வேண்டும்.. எல்லோரும் போய்விட்டனர்.. சிஎஸ்கேவின் அந்த முடிவு.. முடிவிற்கு வரும் சாம்ராஜ்ஜியம்!

துபாய்: சிஎஸ்கே அணி அடுத்த வருடம் நடக்க உள்ள ஐபிஎல் போட்டியில் முக்கியமான வீரர்களை அணியில் எடுத்து, பல வீரர்களை அணியில் இருந்து நீக்கினால் மட்டுமே வெற்றிப்பாதைக்கு திரும்ப முடியும். இந்த வருடம் சிஎஸ்கே வெற்றிப்பாதைக்கு திரும்புவது சாத்தியம் இல்லாத விஷயம் என்று கூறுகிறார்கள்.

2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கேவின் கதை முடிந்துவிட்டது என்றுதான் கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகிறார்கள். 10 போட்டிகளில் 7 போட்டியில் தோல்வி அடைந்துள்ள சிஎஸ்கே இனி 4 போட்டிகளிலும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

4 போட்டிகளிலும் வெற்றிபெற்றாலும் கூட சிஎஸ்கே அணி இந்த முறை பிளே ஆப் செல்வது கஷ்டம்தான் என்ற நிலை நிலவி வருகிறது.

கஷ்டம்

கஷ்டம்

சிஎஸ்கே அணியின் தொடர் தோல்விக்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது. முதல் காரணம் அணியில் தற்போது இருக்கும் வீரர்கள் யாரும் முழு பார்மில் இல்லை. யாருமே தொடர்ச்சியாக சிறப்பாக ஆடவில்லை. இரண்டாவது விஷயம் அணியில் ஆதிக்கம் செலுத்திய முக்கியமான வீரர்கள் இந்த சீசனில் ஆடவில்லை. திடீர் என்று தொடருக்கு முன் இவர்கள் வெளியேறிவிட்டனர்.

எப்படி

எப்படி

ரெய்னா தொடருக்கு சில நாட்களுக்கு முன் வெளியேறிவிட்டார். இன்னொரு பக்கம் ஹர்பஜன் கடைசி நொடியில் தொடரில் இருந்து விலகினார். அதற்கு அடுத்து பிராவோ முதலில் சில போட்டிகளில் காயம் காரணமாக ஆட முடியவில்லை. தற்போது மீதம் உள்ள போட்டிகளிலும் காயம் காரணமாக பிராவோ ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இம்ரான் தாஹிர்

இம்ரான் தாஹிர்

இதெல்லாம் போக சிஎஸ்கே அணிக்கு அதிக விக்கெட்டுகள் எடுக்கும் இம்ரான் தாஹிர் இந்த முறை ஆடவே இல்லை . 4 வெளிநாட்டு வீரர்கள் ஆட வேண்டும் என்ற கட்டுப்பாடு காரணமாக தோனி இவருக்கு வாய்ப்பே அளிக்கவில்லை. சிஎஸ்கேவில் இப்படி மேட்ச் வின்னர்கள் யாருமே ஆடவில்லை. ஜடேஜா, டு பிளசிஸ் மட்டுமே கொஞ்சம் பார்மில் இருந்தனர்.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

இதுதான் சிஎஸ்கேவின் தொடர் தோல்விக்கு முக்கிய காரணம். இதை சிஎஸ்கேவும் ஒப்புக்கொண்டுள்ளது. சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறி இருக்கும் ரெய்னா, ஹர்பஜன் குறித்து நேற்று சிஎஸ்கே அணி நிர்வாகமே முதல் முறையாக மௌனம் கலைத்தது. சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் நேற்று தனது பேட்டியில், ரெய்னா, ஹர்பஜன் இல்லாதது அணிக்கு பின்னடைவை கொடுத்து உள்ளது. ஆனால் அவர்களின் முடிவை நாங்கள் மதிக்கிறோம்.

மதிக்கிறோம்

மதிக்கிறோம்

அவர்கள் எடுத்த முடிவை சிஎஸ்கே அணி நிர்வாகம் மதிக்கிறது என்று சிஇஓ கூறியுள்ளார். இதன் மூலம் ரெய்னா அணியில் இல்லாதது அணிக்கு பின்னடைவை கொடுத்துள்ளது என்று சிஎஸ்கே அணி நிர்வாகமே ஒப்புக்கொண்டு உள்ளது. அடுத்த வருடம் ஒருவேளை ரெய்னா மீண்டும் வந்தால் அவரை அணியில் எடுத்துக் கொள்ள சிஎஸ்கே ஒப்புக்கொள்ளும் என்று கூறுகிறார்கள்.

இனி நடக்கும்

இனி நடக்கும்

அதே சமயம் தற்போது இருக்கும் சிஎஸ்கே அணியின் சாம்ராஜ்ஜியம் முடிந்துவிட்டது என்றுதான் கூறுகிறார்கள். அடுத்த வருடம் வாட்சன், தாஹிர், பிராவோ, ஜாதவ்,ஹர்பஜன் போன்ற வீரர்கள் அணியில் ஆட வாய்ப்பு இல்லை. தோனியும் கூட ஆடுவது சந்தேகம்தான். முக்கியமான வீரர்கள் பலரும் போய்விட்டனர். இதனால் கடந்த மூன்று வருடமாக சிறப்பாக செயல்பட்டு வந்த சிஎஸ்கே சாம்ராஜ்ஜியம் முடிவிற்கு வருகிறது.

 முடிகிறது

முடிகிறது

அடுத்த வருடம் புதிய வீரர்களை அணிக்கு கொண்டு வர வேண்டும் என்று சிஎஸ்கே நினைக்கிறது. இதனால்தான் இந்த வருடம் மாற்று வீரர்களை அணியில் எடுக்கவில்லை. அணிக்குள் டிரான்ஸ்பர் முறைப்படியும் யாரையும் எடுக்கவில்லை. இந்த சீசன் முடியட்டும் புதிய அணியை மொத்தமாக எடுக்கலாம் என்று சிஎஸ்கே நினைக்கிறது. அதனால்தான் அணிக்குள் பெரிய அளவில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

Story first published: Thursday, October 22, 2020, 10:45 [IST]
Other articles published on Oct 22, 2020
English summary
IPL 2020: CSK legacy may come to an end this season
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+