Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தூக்கி அடிக்கப்பட்ட முரளி விஜய்.. 3 மாற்றங்களை செய்த தோனி.. சிஎஸ்கே முடிவிற்கு என்ன காரணம்? பின்னணி

துபாய்: ஐபிஎல் தொடரில் இன்று ஹைதராபாத்தை எதிர்கொள்ளும் சிஎஸ்கே அணியில் முக்கியமான மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

ஹைதராபாத் மற்றும் சிஎஸ்கே அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற டேவிட் வார்னர், ஹைதராபாத் அணி பேட்டிங் செய்யும் என்று முடிவு செய்தார்.

ஹைதராபாத் அணி இன்று எந்த மாற்றமும் இல்லாமல் களமிறங்க உள்ளது. கடந்த சில போட்டிகளாக டாஸ் வெல்லும் கேப்டன்கள் பவுலிங் எடுத்த நிலையில் இன்று ஹைதராபாத் துணிச்சலாக பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.

இன்று

இன்று

இன்று ஆடும் ஹைதராபாத் அணியில், டேவிட் வார்னர், ஜானி பிரைஸ்டோ, மனிஷ் பாண்டே, கேன் வில்லியம்சன், பிரியம் கார்க், அப்துல் சமாத் , அபிஷேக் சர்மா, ரஷீத் கான், புவனேஷ்வர் குமார் , கே கலீல் அஹமது , டி நடராஜன் ஆகியோர் விளையாடுகிறார்கள்.

சென்னை எப்படி

சென்னை எப்படி

இன்று சென்னை அணியில் மூன்று முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. சிஎஸ்கேவில் சரியாக ஓப்பனிங் செய்யாத முரளி விஜய் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு எதிராக கடுமையாக விமர்சனங்கள் வைக்கப்பட்டது. இவரை நீக்க வேண்டும் என்று கடுமையாக கோரிக்கைகள் வைக்கப்பட்டது.

நீக்கம்

நீக்கம்

அதேபோல் அணியில் இருந்து ருதுராஜ் நீக்கப்பட்டுள்ளார். வாய்ப்பு கிடைத்தும் சரியாக இவர் பேட்டிங் செய்யவில்லை. கடந்த இரண்டு போட்டியிலும் இவரின் ஆட்டம் சரியாக இல்லை. இதனால் அவரும் நீக்கப்பட்டுள்ளார். அதேபோல் இன்று ஜோஷ் ஹசல்வுட் நீக்கப்பட்டுள்ளார்.

ஏன் இப்படி

ஏன் இப்படி

ஹசல்வுட்டை நீக்க பெரிய காரணமும் எதுவும் இல்லை. பிராவோ உள்ளே வருவதால் ஜோஷ் ஹசல்வுட் நீக்கப்பட்டுள்ளார். வெளிநாட்டு வீரர்கள் 4 பேர் மட்டுமே விளையாட முடியும் என்பதால் ஜோஷ் ஹசல்வுட் நீக்கப்பட்டுள்ளார். இன்னொரு பக்கம் பிராவோ அணியில் இடம்பெற்றுள்ளார்.

ஸ்பீட் பவுலர்

ஸ்பீட் பவுலர்

அதேபோல் ருதுராஜூக்கு பதிலாக இந்திய பவுலர் சரத்துல் தாக்கூர் அணியில் எடுக்கப்பட்டுள்ளார். மேலும் அம்பதி ராயுடு காயத்தில் இருந்து திரும்பி வந்துள்ளார். இரண்டு போட்டிகளில் இவர் காயம் காரணமாக விளையாடாத நிலையில் இன்று களமிறங்க உள்ளார்.

லெவன்

லெவன்

இன்று பிளேயிங் லெவனில் வாட்சன், அம்பதி ராயுடு, டு பிளசிஸ், தோனி, ஜடேஜா, கேதார் ஜாதவ், சாம் கரன், சரத்துல் தாகூர், பிராவோ, சாகர், பியூஸ் சாவ்லா ஆகியோர் விளையாட உள்ளானர்.

Story first published: Friday, October 2, 2020, 19:37 [IST]
Other articles published on Oct 2, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+