Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவங்களுக்கே கவலை இல்லை.. உங்களுக்கு ஏன்.. தோனிக்கு முழு சப்போர்ட்.. சிஎஸ்கேவில் என்ன நடக்கிறது?

சார்ஜா: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நேற்று சிஎஸ்கே தோல்வி அடைந்த நிலையில், சிஎஸ்கே அணி நிர்வாகம் என்ன மாதிரியான முடிவுகள் எடுக்க போகிறது , அணிக்குள் என்ன மாதிரியான அதிரடியை நிகழ்த்த போகிறது என்று தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி நேற்று நடந்தது. கடைசி நொடி வரை இந்த போட்டி விறுவிறுப்பாக சென்றது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக இந்த போட்டி அமைந்தது.

இதில் முதலில் இருந்து அதிரடியாக ஆடிய ராஜஸ்தான் அணி , 216 ரன்கள் எடுத்தது. அதன்பின் ஆடிய சென்னை 200 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

தோல்வி

தோல்வி

இந்த போட்டியில் சென்னை தோல்வி அடைந்த நிலையில் பலரும் தோனிக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார்கள். தோனிதான் சரியாக ஆடவில்லை. தோனி கடைசியில் அடித்த சிக்ஸ்களை முன்பே அடித்து இருந்தால் போட்டி சரியான பாதையில் சென்று இருக்கும். அதேபோல் கேப்டனாக அவர் தவறான முடிவுகளை எடுத்துவிட்டார்.

மோசமான ஆட்டம்

மோசமான ஆட்டம்

தோனி பழைய பினிஷர் போல செயல்படவில்லை. தோனியிடம் அந்த பழைய திறமை இல்லை. அவர் இனியும் அணியை வழி நடத்துவது தவறு. அவர் வேறு யாருக்காவது பொறுப்பை கொடுக்க வேண்டும் என்று இணையத்தில் பலர் கோரிக்கை வைத்துள்ளனர். கம்பீர் போன்ற முன்னணி வீரர்கள் கூட, தோனி ஒரு கேப்டன் போல செயல்படவில்லை என்று கூறியுள்ளனர்.

விமர்சனம்

விமர்சனம்

சில சிஎஸ்கே ரசிகர்களும் கூட இப்படித்தான் தோனியை விமர்சனம் செய்து வருகிறார்கள். இதனால் சென்னை அணி தோனிக்கு எதிராக முடிவு எடுக்குமா என்று கேள்விகள் எழுந்தது. ஆனால் உண்மையில் சென்னை அணி தோனிக்கு எதிராக செயல்பட வாய்ப்பு இல்லை. தோனிக்கு சென்னை அணி முழு சப்போர்ட் தருகிறது என்று கூறப்படுகிறது.

என்ன செய்வார்

என்ன செய்வார்

சென்னை அணியில் தோனி வெறும் கேப்டன் மட்டும் இல்லை . அவர் ஒரு அங்கம் இதில். அவருக்கு முடிவு எடுக்கும் அதிகாரங்கள் உள்ளது. அவரை அப்படி எல்லாம் மாற்றி விட மாட்டார்கள்.அவர் இப்போது இந்திய அணி வீரரும் இல்லை. அவர் ஒரு தனியார் நிறுவன வீரர். அந்த அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன். அவருக்கே தோனி மீது எந்த வருத்தமும் இல்லை.

முழு சப்போர்ட் உள்ளது

முழு சப்போர்ட் உள்ளது

அவரே தோனிக்கு முழு சப்போர்ட் கொடுக்கிறார். அப்படி இருக்கும் போது ஏன் கம்பீர் போன்ற வீரர்கள் தோனியை பற்றி விமர்சிக்கிறார்கள். தோனி, இந்திய அணியில் விளையாடி சொதப்பினால், கம்பீர் முன்னாள் வீரர் என்ற முறையில் விமர்சனம் செய்யலாம். சென்னையில் விளையாடும் தோனியை அவர் ஏன் விமர்சனம் செய்கிறார். சிஎஸ்கே அணிக்கே தோனி மீது வருத்தம் இல்லை, என்று அணி நிர்வாகிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.

தோல்வி சகஜம்

தோல்வி சகஜம்

அதேபோல் தோனி சில போட்டிகளில் இப்படி தோல்வி அடைவது சகஜம்தான். இதற்கு என்ன செய்ய முடியும். எல்லா போட்டியிலும் வெற்றிபெற முடியாது. அணியில் சில மாற்றங்கள் நடக்கும். ஆனால் தோனிக்கு சிக்கல் இல்லை. நேற்று மோசமான பேட்டிங் ஆர்டரை வைத்துக் கொண்டு 200 ரன்களை சிஎஸ்கே எடுத்துள்ளது. லுங்கி ஓவரில் நோ பால் சிக்ஸர் செல்லாமல் இருந்திருந்தால் சிஎஸ்கே வென்று இருக்கும். இது தோனியின் தவறு இல்லை, என்று அணி நிர்வாகம் தோனி பக்கம் முழு ஆதரவை தெரிவித்துள்ளது.

Story first published: Wednesday, September 23, 2020, 16:10 [IST]
Other articles published on Sep 23, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+