For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மீட்டிங்கில் வாக்குவாதம்.. நிர்வாகத்தை மீறி தோனி இறக்கிய டீம்.. சிஎஸ்கே மேட்ச் கற்றுக்கொடுத்த பாடம்!

துபாய்: நேற்று பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்று ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே கம் பேக் கொடுத்துள்ளது. சிஎஸ்கேவின் நேற்றைய ஆட்டம் 5 முக்கியமான பாடங்களை கற்றுக்கொடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரை இந்த முறை சிஎஸ்கே வெற்றியோடுதான் தொடங்கியது. மும்பை அணியை வீழ்த்திவிட்டு நம்பிக்கையோடு சிஎஸ்கே ஆட தொடங்கியது. ஆனால் அடுத்தடுத்து 3 போட்டிகளில் சிஎஸ்கே தோல்வி அடைந்தது.

ஆனால் தற்போது ''துண்டு ஒரு முறைதான் தவறும்'' என்று நிரூபித்து சிஎஸ்கே மீண்டும் திரும்பி உள்ளது. நேற்று ஒரு விக்கெட் கூட விழாமல் பஞ்சாப்பை வீழ்த்தி ஐபிஎல் உலகை சிஎஸ்கே அதிர வைத்துள்ளது.

முதல் விஷயம்

முதல் விஷயம்

சிஎஸ்கேவின் நேற்றைய ஆட்டம் 5 முக்கியமான பாடங்களை கிரிக்கெட் உலகிற்கு கற்றுக்கொடுத்துள்ளது. சிஎஸ்கே மற்றும் தோனி கற்றுக்கொடுத்த முதல் விஷயம்.. அணி வீரர்கள் மீதான நம்பிக்கை. வாட்சன், ஜாதவ் போன்ற வீரர்கள் மோசமாக ஆடுகிறார்கள் என்று மொத்தமாக தோனி அவர்களை நீக்கவில்லை. அவர்களுக்கு போதுமான நேரம் அளித்தார். பஞ்சாப், கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூர் போன்ற அணிகளில் அடிக்கடி வீரர்கள் மாற்றப்படும் நிலையில் சிஎஸ்கே முரளி விஜயை தவிர வேறு யாரையும் ஆட்டத்தை காரணம் காட்டி நீக்கவில்லை.

நம்பிக்கை

நம்பிக்கை

4 போட்டிகளில் வாட்சன் மோசமாக ஆடிய பின்பும் கூட வாட்சன் மீது தோனி நம்பிக்கை வைத்து இருந்தார். நீங்க ஆடுங்க.. உங்க நேரத்தை எடுத்துக்கோங்க என்று கூறினார். அதோடு சிஎஸ்கே மேனேஜ்மெண்ட் உடன் இதற்காக தோனி வாக்குவாதம் கூட செய்தார். ஆம் வாட்சனை அணியில் எடுக்க சிஎஸ்கே நிர்வாகத்துடன் வாக்குவாதத்தில் கூட இவர் ஈடுபட்டார் என்கிறார்கள்.

வாக்குவாதம்

வாக்குவாதம்

தோனியே இதை குறிப்பிட்டு பேசி இருந்தார். வீரர்கள் தேர்வில் சில சமயம் விவாதங்கள் வரும். ஆனால் அதை வெளியே சொல்ல மாட்டேன். ஒரே அணி ஆடுவதுதான் சரியாக இருக்கும். அப்போதுதான் ஆட்டமும் எங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று தோனி குறிப்பிட்டு இருந்தார். இதனால்தான் வாட்சன் பார்ம் திரும்பும் வரை அடுத்தடுத்த போட்டிகளில் தோனி அவருக்கு வாய்ப்பு கொடுத்தார்.

இரண்டாவது விஷயம்

இரண்டாவது விஷயம்

இரண்டாவது விஷயம் வயது என்பது ஒரு விஷயமே இல்லை. சிஎஸ்கேவில் இருக்கும் 90% வீரர்கள் வயதானவர்கள். மும்பை, டெல்லி, பெங்களூர் போன்ற அணிகள் கலவையான டீம் உடன் இந்த முறை களமிறங்கி வருகின்றன. ஆனால் சென்னை முழுக்க முழுக்க அதற்கு எதிர்பதமாக, பார்ம் அவுட் வீரர்கள் உடன் களமிறங்கி உள்ளது. மற்ற அணிகள் அதிரடி ஹிட்டர்கல இருந்தும் கூட பெரிய வெற்றிகளை குவிக்க முடியவில்லை.

ஆனால் சிஎஸ்கே எப்படி

ஆனால் சிஎஸ்கே எப்படி

ஆனால் சிஎஸ்கே பார்ம் அவுட் வீரர்களை அணியில் எடுத்து. அவர்களை பார்மிற்கு கொண்டு வந்து, அவர்களை வைத்து வெற்றிபெறுகிறது. கிரிக்கெட் உலகில் யாரை வைத்தும் விளையாட முடியும் என்பதை சிஎஸ்கே நிரூபித்துள்ளது. அடுத்த விஷயம் கூலாக இருப்பது. கடந்த மூன்று ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே தோல்வி அடைந்ததும் அணி மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டது.

மோசம்

மோசம்

ஆனால் இந்த விமர்சனங்கள் எதையும் தோனியோ, அணியில் இருக்கும் வீரர்களோ தலையில் ஏற்றிக்கொள்ளவில்லை. விமர்சனங்களை வைப்பவர்கள் வைப்பார்கள்.. அவரை நீக்கு இவரை நீக்கு என்று கூறுவார்கள். ஆனால் அதை எல்லாம் கவனிக்க கூடாது என்பதில் தோனி உறுதியாக இருந்தார். தனது அணி மீது முழுமையான நம்பிக்கையை வைத்து இருந்தார். தோல்விகளை பார்த்து பதற்றம் ஆகி தவறான முடிவுகளை எடுக்கவில்லை.

தவறான முடிவு

தவறான முடிவு

கடந்த உலகக் கோப்பை தொடரில் கோலி பதற்றப்பட்டு எடுத்த முடிவுகளால்தான் மிடில் ஆர்டரில் இறங்க சரியான வீரரை தேர்வு செய்ய முடியாமல் போனது. உலகக் கோப்பை தொடர் முடியும் வரை இந்திய அணியால் உருப்படியான மிடில் ஆர்டர் வீரரை கண்டுபிடிக்கவே முடியவில்லை. அது போன்ற தவறை தோனி செய்யவில்லை. விமர்சனங்களை தலையில் ஏற்றுக்கொள்ளாமல் அதே அணியுடன் தோனி துணிச்சலாக ஆடி சிஎஸ்கேவை வெற்றிபெற வைத்துள்ளார்.

கடைசி

கடைசி

கடைசியாக இருக்கிற வீரர்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற பாடத்தை தோனி எடுத்துள்ளார். கொல்கத்தா, பஞ்சாப் போன்ற அணிகளில் சிறப்பான வீரர்கள் இருந்தும் அந்த அணியால் வெல்ல முடியவில்லை. ஆனால் சிஎஸ்கே சாவ்லா, தாக்கூர் போன்ற வீரர்களை வைத்தே, சிறப்பான திட்டங்களை வகுத்து உள்ளது. ஒரு சரியான திட்டமிடல் இருந்தால் போதும் சாதாரண வீரர்களை வைத்தே போட்டிகளை வெல்ல முடியும் என்று தோனி நிரூபித்து உள்ளார்.

2018 இப்படித்தான்

2018 இப்படித்தான்

2018 மற்றும் 2019 ஐபிஎல் தொடரிலும் சிஎஸ்கே இதேபோல்தான் ஆடியது. அணியில் பெரிய சூப்பர் ஸ்டார்கள் எல்லாம் இல்லை. ஆனால் அணிக்குள் இருந்த வீரர்கள் இடையே ரிதம் இருந்தது.மோசமான பார்மில் இருந்த தாஹிர் போன்ற வீரர்கள் கடந்த சீசனில் சிஎஸ்கேவில்தான் பார்மிற்கு வந்தனர். அதுதான் தோனி. தன்னிடம் இருக்கும் ரி-சோர்ஸ்களை சரியாக பயன்படுத்தும் வித்தை அவருக்கு தெரிந்துள்ளது.. அது இருக்கும் வரை தோனி எவ்வளவு மொக்கையான அணியை வைத்தும் கூட சிஎஸ்கேவை வெற்றி பாதைக்கு கொண்டு செல்வார்

Story first published: Monday, October 5, 2020, 20:55 [IST]
Other articles published on Oct 5, 2020
English summary
IPL 2020: CSK match taught us many things on decision making.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+