Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2 தமிழர்கள்.. இதை செய்தால் அடுத்தடுத்து வெற்றிதான்.. சிஎஸ்கேவை கரைசேர்க்க தோனி களமிறக்கும் நங்கூரம்!

மும்பை: சிஎஸ்கே தனது அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடுவதற்காக முக்கியமான திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கேவின் வெற்றியை, தலைவிதியை இந்த முடிவு தீர்மானிக்கும் என்கிறார்கள்.

சிஎஸ்கே அணி தொடர் தோல்விகள் காரணமாக துவண்டு போய் உள்ளது. ஆனால் சிஎஸ்கேவில் துவளாமல் இருக்கும் ஒரே நபர் கேப்டன் தோனி மட்டும்தான்... அணியை எப்படி வெற்றி பாதைக்கு திருப்பலாம் என்று கேப்டன் தோனி தீவிரமாக முயன்று வருகிறார்.

தற்போது இருக்கும் வீரர்களில் சிலரை மாற்றினால் கண்டிப்பாக அணியை வெற்றி பாதைக்கு கொண்டு செல்ல முடியும். அதே சமயம் சில புதிய வீரர்களை உள்ளே கொண்டு வந்தால் சிஎஸ்கே கண்டிப்பாக வெற்றி பாதைக்கு திரும்பும்.

சிஎஸ்கே ரூல்ஸ்

சிஎஸ்கே ரூல்ஸ்

சிஎஸ்கேவை வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்ல ஐபிஎல் ரூல்ஸ் ஒன்றை, கேப்டன் தோனி கையில் எடுத்துள்ளார். ஐபிஎல் விதிமுறையின்படி ஒரு அணியில் இருந்து அல்லது ஐபிஎல் தொடரில் இருந்து ஒரு வீரர் திடீர் என்று விலகினால், அவருக்கு மாற்றாக வேறு வீரரை அணியில் எடுக்க முடியும். பிற அணியில் விளையாடாத வீரரை அணியில் எடுக்க முடியும்.

டிரான்ஸ்பர்

டிரான்ஸ்பர்

அதாவது ஐபிஎல் மத்தியில் டிரான்ஸ்பர் முறை தொடங்கும் முன் இது போல் வெளிநாட்டு வீரர்கள் அல்லது ஐபிஎல்லில் விளையாடாமல் இருக்கும் உள்நாட்டு வீரர்களை அணியில் எடுக்க முடியும். திடீர் என்று வீரர்கள் வெளியேறினால் இப்படி மாற்று வீரர்களை களமிறக்கலாம். இதற்காக டிரான்ஸ்பர் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

அவசியம் இல்லை

அவசியம் இல்லை

இதனால் சென்னை அணி தற்போது டிரான்ஸ்பர் வரை காத்திருக்காமல் புதிய வீரர்களை அணிக்குள் கொண்டு வர முடியும். தற்போது இரண்டு வீரர்களுக்கு சிஎஸ்கே மாற்று வீரர்களை கொண்டு வர முடியும். அதன்படி ரெய்னா , ஹர்பஜன் இருவரும் சிஎஸ்கேவில் இருந்து பாதியில் வெளியேறி உள்ளனர். இவர்களுக்கு மாற்றாக சென்னை அணி இரண்டு வீரர்களை கொண்டு வர முடியும்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் சென்னையில் ஏற்கனவே நிறைய வெளிநாட்டு வீரர்கள் உள்ளனர். அதேபோல் வெளியேறிய இரண்டு பேரும் உள்நாட்டு வீரர்கள். இதனால் சிஎஸ்கேவில் விரைவில் இரண்டு உள்நாட்டு வீரர்கள் மாற்று வீரர்களாக எடுக்கப்படுவார்கள் என்று தகவல்கள் வருகிறது. பெரும்பாலும் இரண்டு தமிழக வீரர்கள் அணிக்குள் வர வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள். டிஎன்பிஎல் தொடரில் விளையாடிய இரண்டு பேரை கொண்டுவர சிஎஸ்கே - தோனி இணை திட்டமிட்டு வருகிறது.

தமிழர்கள்

தமிழர்கள்

ஒரு பேட்ஸ்மேன், ஒரு ஸ்பின் பவுலர் என்று இரண்டு தமிழக வீரர்களை அணிக்குள் கொண்டு வர சிஎஸ்கே திட்டமிட்டு வருகிறது என்கிறார்கள். வருண் சக்ரவர்த்தி, நடராஜன், முருகன் அஸ்வின் என்று டிஎன்பிஎல் வீரர்கள் ஐபிஎல் தொடரில் கலக்கி வருகிறார்கள். இதனால் டிபிஎல் தொடரில் இருந்து சிஎஸ்கேவிற்கு வீரர்கள் களமிறக்கப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

Story first published: Thursday, October 1, 2020, 8:07 [IST]
Other articles published on Oct 1, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+