For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிஎஸ்கேவையே மாற்றலாம் என நினைத்தால்.. இப்படி ஒரு தடையா? தோனியின் பிளான் காலி.. பரபர பின்னணி!

துபாய்: 2020 ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணிக்காக ஆடிய சில வீரர்கள் அடுத்த சீசனிலும் சிஎஸ்கே அணியில் ஆட விருப்பம் தெரிவிப்பதாக தகவல்கள் வருகிறது. அதேபோல் சிஎஸ்கே அணியில் அடுத்த வருடம் பெரிய அளவில் மாற்றங்கள் செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

2020 ஐபிஎல் தொடர் சிஎஸ்கே அணிக்கு மிக மோசமான தொடராக மாறியுள்ளது. இந்த சீசனில்தான் முதல் முறையாக சிஎஸ்கே அணி பிளே ஆப் செல்லும் வாய்ப்பை இழந்து உள்ளது.

வரிசையாக அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வி அடைந்து சிஎஸ்கே அணி பிளே ஆப் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது. ஹைதராபாத், ராஜஸ்தான், டெல்லி, பெங்களூர் போன்ற அணிகளிடம் கூட சிஎஸ்கே அணி மிக மோசமாக தோல்வி அடைந்துள்ளது.

காரணம்

காரணம்

சிஎஸ்கே அணியின் தொடர் தோல்விக்கு வீரர்களின் மோசமான ஆட்டம்தான் காரணமாக பார்க்கப்படுகிறது . அணியில் இருக்கும் ஒரு சில வீரர்களை தவிர வேறு யாரும் பொறுப்பாக ஆடவில்லை. முக்கியமான வீரர்கள் எல்லோரும் தேவைப்படும் நேரங்களில் சொதப்பியது சிஎஸ்கேவின் தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது. இந்த சீசனில் இதனால் சிஎஸ்கே இனி பிளே ஆப் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மாற்றம்

மாற்றம்

சிஎஸ்கே அணியும் இனி போராட கூடாது என்ற முடிவை எடுத்துவிட்டது. இனி அடுத்த சீசனில் பார்த்துக் கொள்ளலாம் என்ற மனநிலைக்கு சிஎஸ்கே அணி வந்துவிட்டது. இதனால் அடுத்த சீசனுக்கு சிறப்பான அணியை தேர்வு செய்ய சிஎஸ்கே அணி முடிவு செய்துள்ளது. தற்போது சிஎஸ்கே அணியில் இருக்கும் முக்கியமான வீரர்களை எல்லாம் நீக்கிவிட்டு புதிய அணியை உருவாக்க தோனி நினைக்கிறார்.

இளைஞர்கள்

இளைஞர்கள்

பெரிய அளவில் இளைஞர்களை அணியில் எடுத்து புதிய அணியை உருவாக்கும் எண்ணத்தில் தோனி இருக்கிறார். ஆனால் தோனி மற்றும் சிஎஸ்கே போடும் இந்த திட்டத்திற்கு சில விஷயங்கள் தடையாக இருக்கிறது. சிஎஸ்கே அணியில் இருந்து வாட்சன், ஜாதவ், ராயுடு, டு பிளசிஸ், லுங்கி நிகிடி போன்ற வீரர்களை நீக்குவதில் தோனி உறுதியாக உள்ளார்.

நீக்கம்

நீக்கம்

இவர்களை எல்லாம் நீக்கிவிட்டு, அந்த இடத்தில் புதிய வீரர்களை கொண்டு வர தோனி திட்டமிட்டு இருக்கிறார். ஆனால் அடுத்த வருடம் பெரிய ஏலம் எல்லாம் நடக்க போவது இல்லை. அடுத்த வருடம் என்றால், இன்னும் மூன்று மாதங்களில் ஏலம் நடக்க வேண்டும். ஜனவரி இறுதியில் ஏலம் நடக்க வேண்டும். ஆனால் இந்த ஏலம் நடக்குமா என்பது சந்தேகம்தான் என்று கூறுகிறார்கள்.

ஏன்

ஏன்

ஏலம் நடக்கும், ஆனால் பெரிய அளவில் வீரர்கள் மாற்றம் இருக்காது என்று கூறுகிறார்கள். ஒரு சில வீரர்கள் மட்டுமே ஏலம் விடுபடுவார்கள். இதன் காரணமாக சிஎஸ்கேவை மொத்தமாக மாற்றலாம் என்ற தோனியின் கனவு காலியாகி உள்ளது. சிஎஸ்கே அடிப்படையாக ஒரு சில வீரர்களை அணியில் வைத்துக் கொண்டு மற்ற வீரர்களை மட்டுமே நீக்க வாய்ப்புள்ளது.

யார் எல்லாம்

யார் எல்லாம்

வாட்சன், ஜாதவ் கண்டிப்பாக நீக்கப்படுவார்கள். மற்ற சில வீரர்கள் நீக்கப்படுவது சந்தேகம்தான் என்று கூறுகிறார்கள். அதேபோல் 2020 ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணிக்காக ஆடிய சில வீரர்கள் அடுத்த சீசனிலும் சிஎஸ்கே அணியில் ஆட விருப்பம் தெரிவிப்பதாக தகவல்கள் வருகிறது. முக்கியமான சில வீரர்கள் தோனியிடம் இது தொடர்பாக தங்கள் விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.

விருப்பம்

விருப்பம்

இதன் காரணமாக அடுத்த வருடம் சிஎஸ்கே அணியில் பெரிய மாற்றம் இருக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது. மொத்தமாக அதிரடி மாற்றம் இல்லை என்றாலும் கூட சின்ன சின்ன மாற்றங்கள் செய்யப்படலாம். அணிக்குள் சில இளைஞர்கள் வர வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

Story first published: Sunday, October 25, 2020, 9:01 [IST]
Other articles published on Oct 25, 2020
English summary
IPL 2020: CSK may change few players before next season to revamp the team.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+