தோனிக்கு மாற்று இவர்தான்.. மாஸ் வீரரை கொக்கி போட்டு தூக்கும் சிஎஸ்கே.. ஆனால்.. அங்குதான் டிவிஸ்டே!
துபாய்: 2020 ஐபிஎல் தொடருக்கு பின் சிஎஸ்கே கேப்டன் தோனி ஓய்வு பெற்றால், அவரின் இடத்தை யார் நிரப்புவார் என்று கேள்விகள் எழுந்துள்ளது. இதற்கு நிறைய வீரர்களின் பெயர்களை கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
2020 ஐபிஎல் தொடர் மிகவும் சுவாரசியமாக நடந்து வருகிறது. தொடரின் தொடக்கத்தில் இருந்து இப்போது வரை நிறைய மாற்றங்களும், அதிரடிகளும் நடந்து உள்ளது. இனி வரும் போட்டிகளில் என்ன நடக்கும் என்று இப்போதே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த ஐபிஎல் சீசன் தோனிக்கு கடைசி சீசனாக இருக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். அடுத்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு தோனி ஆலோசகராக வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

யார் வருவார் ?
இந்த நிலையில் அடுத்த சீசனில் சிஎஸ்கே அணியில் தோனிக்கு மாற்றாக யார் விளையாடுவார்.. கேப்டனாக யார் களமிறங்குவார் என்று கேள்விகள் எழுந்துள்ளது. இந்த நிலையில்தான் தோனிக்கு மாற்றாக டெல்லி அணியில் விளையாடி வரும் ரிஷப் பண்டை அணிக்குள் கொண்டு வர சிஎஸ்கே நினைக்கிறது என்று தகவல்கள் வருகிறது.

ரிஷப் பண்ட்
தற்போது டெல்லியில் அணியில் பண்ட் கீப்பராக இருக்கிறார். டெல்லி அணியில் ஏற்கனவே நிறைய இளம் வீரர்கள் உள்ளனர். அதேபோல் நிறைய ஹிட்டர்கள் உள்ளனர். இந்த நிலையில்தான் அடுத்த சீசனில் தோனிக்கு மாற்றாக ரிஷப் பண்ட் வருவார் என்று கூறப்படுகிறது. தோனியின் கீப்பிங் இடத்தை இவர் நிரப்ப கூடியவர். நன்றாக கீப்பிங் செய்ய கூடியவர் என்று இவருக்கு பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கிரிக்கெட் பயிற்சியாளர்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் இது குறித்து தெரிவிக்கையில், தோனிக்கு சிஎஸ்கேவில் ஒரே மாற்று ரிஷப் பண்ட்தான். அவர்தான் தோனியின் கீப்பிங் இடம் மட்டுமின்றி, பேட்டிங் இடத்தையும் நிரப்பும் திறமை கொண்டவர் என்று கூறியுள்ளார். நெஹ்ராவும் இதே கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

சிஎஸ்கே என்ன நினைக்கிறது
சிஎஸ்கேவும் தோனிக்கு மாற்றாக அடுத்த வருடம் பண்டை கொண்டு வர நினைக்கிறது என்று கூறுகிறார்கள். தோனி போல இவர் கீப்பிங் மட்டுமின்றி பேட்டிங்கும் செய்வார். இதனால் சிஎஸ்கே அணியின் பேட்டிங் ஆர்டரிலும்
இவர் முக்கிய பங்கு வகிப்பார் என்று கூறுகிறார்கள். ஆனால் இங்குதான் முக்கிய டிவிஸ்ட் உள்ளது. இவர் கீப்பராக வந்தாலும்.. கேப்டனாக இருக்க வாய்ப்பு இல்லை என்று கூறுகிறார்கள்.

கேப்டன்
சிஎஸ்கே அணி கேப்டன் பொறுப்புக்கு வேறு வீரரை எடுக்கும் என்கிறார்கள். கேன் வில்லியம்சன், டு பிளசிஸ் போன்ற வீரர்களை சிஎஸ்கே தங்கள் அணியின் கேப்டனாக நியமிக்க ஆலோசனை செய்து வருகிறது. அடுத்த சீசனில்தான் இந்த மாற்றங்கள் எல்லாம் நடக்கும். ஆனாலும் இந்த சீசன் நடக்கும் போதே அதற்கான ஏற்பாடுகளை அணி நிர்வாகம் செய்ய தொடங்கி உள்ளது.


Click it and Unblock the Notifications