மிகப்பெரிய வீரர்தான்.. ஆனால் என்ன செய்வது.. துணிச்சலான முடிவு எடுக்க போகும் சிஎஸ்கே.. பரபர பின்னணி!
துபாய்: சிஎஸ்கே அணியில் இருக்கும் முக்கியமான சில வீரர்கள் அடுத்த வருட சீசனில் ஆட வாய்ப்பில்லை என்று தகவல்கள் வெளியாகி வருகிறது.
2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி மிக மோசமான சரிவை சந்தித்துள்ளது. எல்லா வருடமும் பிளே ஆப் சென்ற சிஎஸ்கே அணி இந்த முறை பிளே ஆப் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது.
இந்த சீசனில் சிஎஸ்கே அணியின் மூத்த வீரர்கள் யாரும் சரியாக ஆடவில்லை. இதன் காரணமாக சிஎஸ்கே அணி பிளே ஆப் வாய்ப்பை இழந்துள்ளது.

என்ன மாற்றம்
இதனால் அடுத்த சீசனில் சிஎஸ்கே அணி நிறைய மாற்றங்களை செய்ய உள்ளது. அணியில் இருக்கும் முக்கியமான வீரர்களை நீக்க சிஎஸ்கே நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது. முக்கியமாக பார்ம் அவுட்டில் இருக்கும் வயதான மூத்த வீரர்களை நீக்க சிஎஸ்கே அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

நீக்கம்
அதன்படி அணியில் இருந்து வாட்சன், ஜாதவ், கரன் சர்மா, பியூஸ் சாவ்லா உள்ளிட்ட வீரர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். ஹர்பஜனும் அடுத்த வருடம் ஆட மாட்டார். ரெய்னா, டு பிளசிஸ் குறித்து எந்த விதமான முடிவும் எடுக்கப்படவில்லை.

முடிவு இல்லை
இந்த நிலையில் அணியில் இருக்கும் இன்னொரு மூத்த வீரர் இம்ரான் தாஹிரும் நீக்கப்பட உள்ளார் என்கிறார்கள். கடந்த இரண்டு சீசனில் சிஎஸ்கே அணிக்காக இம்ரான் தாஹிர்தான் சிறப்பாக பந்து வீசினார். ஆனால் இந்த சீசனில் தாஹிர் மூன்று போட்டியில் மட்டுமே ஆடினார்.

பார்ம் இல்லை
இந்த சீசனில் தாஹிர் பெரிய பார்மில் இல்லை. வாய்ப்பு கிடைத்த போட்டியிலும் பெரிய அளவில் அவரால் விக்கெட் எடுக்க முடியவில்லை. அதேபோல் இவருக்கு வயதும் அதிகம் ஆகிவிட்டது. இதனால் அடுத்த சீசனில் இவரை வெளியிட சிஎஸ்கே முடிவு செய்துள்ளது. இவர் பெரிய வீரர்தான்.. ஆனாலும் இவரை தொடர்ந்து அணியில் வைத்திருக்க முடியாது என்று சிஎஸ்கே அணி நிர்வாகம் நினைக்கிறது.

ஏலம் எடுக்க மாட்டார்கள்
அடுத்த சீசனில் சிஎஸ்கே அணி இவரை மீண்டும் அணியில் எடுக்காது. மாறாக இவரை வெளியிட்டுவிட்டு வேறு ஸ்பின் பவுலர்களை சிஎஸ்கே அணி எடுக்க வாய்ப்புள்ளது. இம்ரான் தாஹிரும் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications