Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"டிரான்ஸ்பர்" அஸ்திரம்.. சிஎஸ்கேவை மொத்தமாக காலி செய்யும் மாஸ்டர் பிளான்.. இனி மீளவே முடியாது!

துபாய்: ஐபிஎல் 2020 சீசனில் இருந்து ரெய்னா விலகி உள்ள நிலையில், இந்த சீசனில் அவர் வேறு அணிக்கு விளையாட வாய்ப்பு உள்ளதா என்று கேள்வி எழுந்துள்ளது.

ஐபிஎல் சீசனில் தொடக்கத்தில் இருந்து சிஎஸ்கே சொதப்ப தொடங்கி உள்ளது. மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றிபெற்ற சென்னை அதற்கு பின் அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வி அடைந்தது.

தொடர் தோல்விகள் காரணமாக சிஎஸ்கே கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. உடனே அணிக்குள் பல்வேறு மாற்றங்களை செய்ய வேண்டிய கட்டாயத்தில் தற்போது தோனி இருக்கிறார்.

சிஎஸ்கே என்ன செய்யும்?

சிஎஸ்கே என்ன செய்யும்?

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே மோசமாக சொதப்புவதற்கு அணியின் பேட்ஸ்மேன்கள் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார்கள். சிஎஸ்கேவில் டு பிளசிஸ் தவிர வேறு யாரும் சரியாக ஆடவில்லை. முக்கியமாக சிஎஸ்கேவின் ஓப்பனர்கள் சரியாக பேட்டிங் செய்யவில்லை. ஓப்பனர்கள் விஜய் மற்றும் வாட்சன் இருவரும் கடந்த மூன்று போட்டிகளாக சொதப்பி வருகிறார்கள்.

என்ன முடிவு

என்ன முடிவு

இதனால் தொடருக்கு மத்தியில் சிஎஸ்கே அணி புதிய வீரர்களை அணிக்குள் எடுக்கும் என்று கூறுகிறார்கள். டிரான்ஸ்பர் முறைப்படி புதிய வீரர்களை தொடரின் பாதியில் ஏலம் எடுக்க முடியும். தங்கள் அணியில் இருக்கும் வீரர்களையும் வெளியிட முடியும். அந்த வகையில் இந்த முறை சிஎஸ்கே முக்கியமான ஓப்பனர்களை ஏலம் எடுக்கும் என்கிறார்கள்.

 ஓப்பனர்கள்

ஓப்பனர்கள்

முக்கியமாக சென்னை அணி ஓப்பனர்கள் , ஒன் டவுன் வீரர்கள் மற்றும் இந்திய ஸ்பின் பவுலர்கள் மீது அதிக கவனம் செலுத்தும் என்று கூறுகிறார்கள். இவர்கள்தான் சிஎஸ்கே அணியில் குறையாக உள்ளனர். இதனால் இந்த டிரான்ஸ்பரில் சிஎஸ்கே இப்படிப்பட்ட வீரர்களை வாங்க வாய்ப்புள்ளது.

விடுவிக்கும்

விடுவிக்கும்

இன்னொரு பக்கம் சென்னை அணி இந்த முறை ரெய்னாவை விடுவிக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். ரெய்னா இந்த ஐபிஎல் சீசனில் இருந்து வெளியேறி உள்ளார். இனி சிஎஸ்கேவிற்கு அவர் மீண்டும் வர வாய்ப்பு இல்லை என்று கூறுகிறார்கள். சிஎஸ்கே நிர்வாகமும் அவரின் பெயரை தங்கள் வலை பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டது. இதனால் மொத்தமாக சிஎஸ்கே - ரெய்னா உறவு முடிந்துவிட்டது என்கிறார்கள்.

எடுக்கும்

எடுக்கும்

இதனால் சிஎஸ்கே ரெய்னாவை விடுவித்தால் கண்டிப்பாக அவரை வேறு சில அணிகள் எடுக்கும் என்கிறார்கள். பஞ்சாப், கொல்கத்தா போன்ற அணிகள் கண்டிப்பாக ரெய்னாவை எடுக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். அது சிஎஸ்கேவிற்கு பெரிய இழப்பாக இருக்கும். ரெய்னாவை வேறு அணிகள் எடுத்தால் அது சிஎஸ்கேவை மிகப்பெரிய அளவில் பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது.

பாதிக்கும்

பாதிக்கும்

சிஎஸ்கேவில் தோனிக்கு அடுத்து மிக முக்கியமான வீரராக ரெய்னா பார்க்கப்பட்டார். ஆனால் இப்போது அவரையே தங்கள் அணிக்குள் இழுக்க பிற அணிகள் திட்டமிட்டு வருகிறது . இதற்கு கிட்டத்தட்ட சிஎஸ்கேவும் ஒப்புக்கொண்டுவிட்டது என்றுதான் கூறுகிறார்கள். இதனால் சிஎஸ்கே - ரெய்னா இடையிலான உறவு மீள முடியாத நிலைக்கு சென்றுவிட்டது என்று கூறுகிறார்கள்.

Story first published: Wednesday, September 30, 2020, 22:40 [IST]
Other articles published on Sep 30, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+