Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2 பேரை நீக்கினால்தான் சிஎஸ்கே வெற்றிபெறும்.. ஏமாற்றத்தில் அணி நிர்வாகம்.. அதிரடிக்கு தயாராகும் தோனி!

சார்ஜா: சென்னை அணியில் 2 முக்கியமான பேட்ஸ்மேன்களை அணியில் இருந்து எடுத்துவிட்டு, அங்கு புதிய வீரர்களை களமிறக்க அணி நிர்வாகம் யோசனை செய்து வருவதாக தகவல்கள் வருகிறது. சிஎஸ்கே ரசிகர்களும் இந்த இரண்டு வீரர்களை கண்டிப்பாக அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்க தொடங்கி உள்ளனர்.

சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி நேற்று நடந்தது. இதில் முதலில் இருந்து அதிரடியாக ஆடிய ராஜஸ்தான் அணி , 216 ரன்கள் எடுத்தது. அதன்பின் ஆடிய சென்னை 200 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

இந்த நிலையில் சென்னை அணி தற்போது சுயபரிசோதனை செய்ய தொடங்கி உள்ளது. தோல்விக்கு காரணம் என்ன, சென்னை சறுக்கியது எங்கே என்று சுயபரிசோதனை செய்ய தொடங்கி உள்ளது.

சென்னை

சென்னை

சென்னை அணியின் இந்த தோல்விக்கு நிறைய காரணங்கள் சொல்லப்படுகிறது. பல காரணங்களுக்கு சிஎஸ்கேவின் இரண்டு வீரர்களின் பேட்டிங்கும் விமர்சனங்களை சந்தித்துள்ளது. முதல் நபர் முரளி விஜய். சென்னை அணியின் ஓப்பனிங் வீரரான முரளி நேற்று 21 பந்துகள் பிடித்து 21 ரன்கள் மட்டுமே எடுத்தார். டெஸ்ட் வீரரான இவர் மும்பைக்கு எதிரான போட்டியிலும் சரியாக ஆடவில்லை.

எப்படி?

எப்படி?

ஐபிஎல் போட்டிகளில் இதுவரை அதிரடியாக ஆடாத இவர், நேற்று போட்டியிலும் மோசமாக சொதப்பினார். ஓப்பனிங் வீரராக களமிறங்கிவிட்டு, அதிக அளவு பந்துகளை குடித்துவிட்டு, பின் கடைசியில் இறங்கும் வீரர்களுக்கு பிரஷர் ஏற்றுகிறார் என்று முரளி விஜய் மீது புகார் உள்ளது. நேற்றே சமூக வலைத்தளங்களில் இவர் கடுமையான விமர்சனங்களை சந்தித்தார்.

வீரர்கள் பேட்டிங்

வீரர்கள் பேட்டிங்

இதனால்தான் தற்போது இவரை நீக்கிவிட்டு, வேறு ஓப்பனிங் வீரரை இறக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளது. இன்னொரு பக்கம் சென்னையின் மிடில் ஆர்டர் வீரர் கேதார் ஜாதவ். ஏதாவது சில போட்டிகளில்தான் இவர் ஆடுகிறார். மிடில் ஆர்டர் வீரர் என்றால் அதிரடியாக ஆட வேண்டும். ஆட்டத்தின் போக்கை மாற்றும் வகையில் இருக்க வேண்டும்.

அணி நிர்வாகம் கோவம்

அணி நிர்வாகம் கோவம்

ஆனால் கேதார் அப்படி இல்லை. நேற்றும் சரி, மும்பைக்கு எதிரான போட்டியிலும் இவர் பொறுப்புடன் ஆடவில்லை. இதனால் இவரையும் மாற்றிவிட்டு வேறு நபர்களை இங்கே இறக்கலாம் என்று ரசிகர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். சிஎஸ்கே அணி நிர்வாகமும் நேற்று இவர்களின் ஆட்டத்தை பார்த்து ஏமாற்றம் அடைந்தது என்றுதான் கூறுகிறார்கள்.

கேஎம் ஆசிப்

கேஎம் ஆசிப்

இதற்கு பதிலாக கேஎம் ஆசிப், சான்டர் போன்ற வீரர்களை அணிக்கு கொண்டு வரலாம். அல்லது வேறு சில வீரர்கள் அணியில் இறங்கினாலும் நல்லது. இவர்களை வைத்துக்கொண்டு சிஎஸ்கே பிளே ஆப் செல்வதே சந்தேகம்தான் என்கிறார்கள். இதனால் தோனியும் விரைவில் அணியில் முக்கிய மாற்றங்களை செய்யலாம். பேட்டிங்கில் அதிரடி மாற்றங்களை அவர் கொண்டு வரலாம் என்கிறார்கள்.

Story first published: Wednesday, September 23, 2020, 16:12 [IST]
Other articles published on Sep 23, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+